ஞாயிறு, மே 23, 2010

அம்மா நான் பெரியவள் ஆகிறேன் !!!



























பத்து மாதங்கள் சுமந்து  என்னை பெற்று   எடுத்தவளே ,

நான் பெரியவள் ஆகி விட்டேன் ! அனால் உன் முகத்தில் ஏன் இத்தனை

கலக்கம்? .எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் என்னை மட்டும் கண்ணும்

கருத்துமாக பேணி பொத்தி வளர்பவளே, உனக்கு ஈடு வேறு யாரு?

நான் வளர வளர உன் முகத்தில் மகிழ்ச்சி உன்னை விட்டு ஓடி விட்டது...

போதும் நீ என்னால் பட்ட கஷ்டம் ! பத்து மாதம் எப்ப வரும் சுமையை

இறக்கி வைக்கலாம் என்று நினைக்கும் இந்த உலகத்தில் , காலம் முழுவதும்

முகம் சுளிக்காமல் என்னை சுமந்து கொண்டு வருகிறாயே அம்மா , உனக்கு

நான் எப்படி நன்றி சொலுவேன் ?என்ன கைம்மாறு செய்வேன் ? போதும்

அம்மா நீ பட்ட அவமானம் !..இனி ஒரு ஜென்மம் எனக்கு இருந்தால் ,

திரும்பவும் உனக்கு மகளாக பிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன் அம்மா .

மற்ற குழந்தைகளை போல் ஓடோடி விளையாடும் மகளாக உன் வயற்றில்

பிறக்க ஆசை அம்மா. அப்ப நான் வளர்வதை பார்த்து உன் உள்ளம்

குளிர்வதை  மகிழ்வதை ரசிப்பேன் ..இப்ப எனக்கு விடை கொடு அம்மா என்று

கேட்பது போல் இருந்த்து....

என்னுடைய உறவுக்கார பையனின் மகளின் இறுதி பயணம் , இப்படி ....

எழுத தோன்றியது.  மயான அமைதி..   யாரும் வருத்த பட வில்லை , மாறாக 

போதும் அம்மா நீ சிந்திய கண்ணீர், இனிமேலாவது உன் பாரத்தை இறக்கி வை 

அம்மா!!  என்றனர் அங்கு கூடி இருந்தோர் . அவர்கள் நன்கு அறிந்து இருந்தனர்..

 இந்த தாயின் நிலை பற்றி , ..ஏன் என்றால் அந்த 14 , வயது சிறுமியை விட்டு

எங்கும் நகர முடியாது அந்த தாயால்... அவள் தூங்கும் போது மட்டும் தான் 

அவளால் தூங்க முடியும்.. காரணம் அந்த சிறுமியால் நிமிர்ந்து உட்கார கூட 

முடியாது!!.

5 கருத்துகள் :

  1. ஜெய்லானி , LK வாங்க ,
    தங்கள் வருகைக்கு நன்றி ~!

    பதிலளிநீக்கு
  2. மனதை உறுக வைத்தது . கண் முன் அந்தப் குழந்தையின் மன ஓலத்தை கொண்டு வந்தது உங்கள் எழுத்துகள் .
    வாழ்கையில் யாருக்கும் இது வரகூடாது என ஆண்டவனை வேண்டினான் ...
    கனத்த இதயத்துடன் .... முத்து

    பதிலளிநீக்கு
  3. முத்து, நன்றி தங்கள் வருகைக்கு !

    பதிலளிநீக்கு

welcome