வியாழன், மே 20, 2010

மாங்காய் பச்சடி

இப்ப மாங்காய் சீசன். இது என்னோட பேவரிட் (favorite ) சைடு டிஷ்.

போன வருடம் நான் மாங்கா சீசனை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன் !

ஏன்னா நான் பிஜி சென்றுவிட்டேன். அங்கும் மாங்காய் உள்ளது . ஆனால்

நான் சென்ற சமயம் சீசன் இல்லை .. அதனால் மாங்காய் இல்லை.

கடைசில் அங்கயும் மிஸ் பண்ணி, இங்கயும் மிஸ் பண்ணி முடிந்தது சீசன்.

அங்குள்ள மக்கள் மிகவும் அன்பானவர்கள். டென்ஷன் இல்லாத பேர்விழிகள்.

நான் மாங்காய் பற்றி அவர்களிடம் கேட்க அவர்கள் தந்த விளக்கம் கேட்டு ஒரு வழி

ஆகி விட்டேன். முடிவில் இரண்டு வார்த்தைகள் அவர்களிடம் கற்று கொண்டேன்.

வணக்கம், வெல்கம் என்பதற்கு. புலா , நன்றி என்பதற்கு விநாகா ! என்பது ..

நாங்களும் அசத்துவோம்ல!! எப்புடி.....
-----------------------------------------------------------------------------------------------------------------------------

Baby Eating Mango - The most popular videos are here
----------------------------------------------------------------------------------------------------------------------------
இப்ப மாங்காய் பச்சடிக்கு தேவை:

புளிப்பு  மாங்காய் : மூன்று

வெல்லம் : கால் கிலோ

மிளகாய் தூள், உப்பு ஒரு சிட்டிகை.

செய்முறை :

மாங்காய் கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டி , குக்கரில் சாப்பாடு

 வைக்கும் போது ஒரு plate , மீது வைத்து மிளகாய் உப்பு சேர்த்து மூடி விடவும்

வெள்ளத்தை சுத்தம் செய்து நன்றாக நுணுக்கி நான்ங்கு ஸ்பூன் தண்ணீர் விட்டு

அடுப்பில் வைத்து கரைந்த உடன் , வெந்த மாங்காகையை நன்றாக மசித்து

வெல்லத்துடன் சேர்த்து கிளறி கெட்டி ஆன வுடன் இறக்கிவிடவும்.

இது மூன்று நாட்கள் வரை கெடாது . உப்பு , உரைப்பு , இனிப்புடன் சுவையாக

இருக்கும். செய்து  பார்த்து  விட்டு சொல்லுங்கள் ! பச்சடி வைக்காமல்

சாப்பிட்டால்   மேலே உள்ள காணொளி போல் தான் மாங்காய்யை

சாப்பிடவேண்டும்.

4 கருத்துகள் :

  1. அட.... அட... சூப்பர் படம் .ரெக்காட் பண்ணிட்டேன். பச்சடியும் அருமை..

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துகள்!அருமை...அருமை...

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜெயலாணி !
    தங்கள் பொன்னான கருத்துகளை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. யாதவன் தங்கள் வருகைக்கு நன்றி !

    பதிலளிநீக்கு

welcome