ஞாயிறு, மே 09, 2010

மொபைல்



























மொபைல் கலாச்சாரம் 


வண்டி ஓட்டிகொண்டு பயணம் செய்யும் பொழுது 


உங்கள் செல்போன அடித்தால் , உங்களை அழைப்பது 


எமனாக கூட இருக்கும் . ஜாக்கிரதை ! இந்த வாசகம்

நான் பஸ்ஸில் செல்லும் பொழுது ஒரு போர்டில் எழுதி இருந்த்து!

இது முற்றிலும் உண்மை .!!.எங்கள் தெருவில் சில மாதங்கள் முன்பு

இரண்டு பையன்கள் (+2 ) மாணவர்கள் , பைக்கில் ஏறி டியூஷன்

சென்றார்கள்.வண்டியை ஓட்டிகொண்டே மொபைல் அழைக்க

பேசிகொண்டே எதிரில் வந்த .லாரி மீது வண்டியை விட்டு , அந்த

இடத்திலே வண்டியை ஓட்டி வந்த மாணவன் இறந்து விட்டான் .

பின்னால் அமர்ந்து வந்த மாணவன் (மூளை சாவு) சுய நினைவு

இல்லாமல் இன்னும் படுத்த படுகையாக உள்ளான்.  சக மாணவ

மாணவிகள் ஆசிரியர்கள் அழுத வண்ணம் அந்த பையனின் வீட்டுக்கு

மலர் வளையத்துடன் சென்ற காட்சி இன்னும் நெஞ்சை விட்டு

அகலவில்லை. , தயவு செய்து வண்டி ஓட்டும் போது செல் அடித்தால்

எடுக்காதீர்கள் !! அது உங்கள் உயிருகே உலை வைத்து விடும்,

அது போல் இரவு படுக்க போவதற்கு முன்பு செல் போனை சுவிட்ச் ஆப்

செய்து  விடுங்கள். படுக்கை அறைக்கு எடுத்து செல்லாதீர்கள்.!

இன்றைய இளைய சமுதாயத்தினர் செல் போனில் மெசேஜ் forward .

செய்வதை முக்கியமான வேலையாக கருதுகிறார்கள். addict , ஆக

இருகிறார்கள். நவீன டெக்னாலஜி தோன்றும் இந்த கால கட்டத்தில்

அதனை தவறாக கை ஆளுவதால் , இழப்புகளை எதிர் கொள்ள வேண்டி

இருக்கு. அதனால் கொஞ்சம் சிந்தித்து செயல் படுங்கள், ஆபத்தை

விலக்குங்கள். . நீங்களே தேடி வம்பை விலை கொடுத்து வாங்காதீர்கள்.

வாழ்க வளமுடன்.

2 கருத்துகள் :

  1. இதை பாத்தாவது மக்கள் திருந்தனும் . அந்த மாணவன் குடும்பத்திற்கு :-(((

    பதிலளிநீக்கு
  2. நன்றி !
    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.

    பதிலளிநீக்கு

welcome