புதன், மே 05, 2010

நிகழ்வு

சமீபத்தில் என் தோழியுடன் அவரின் +2  படிக்கும் மகளின்
பள்ளிக்கு சென்றேன். அன்று கடைசி தேர்வு , முடித்து விட்டு
மிக சோகமாக அழுத  வண்ணம் வந்தாள்! , நாங்கள் தேர்வு மிக
கடினமாக இருந்தததா? சரியாக எழுத முடியலையா? என்று கேட்டால்...
அவள் சொன்ன பதில் .. இனிமேல் friends , யாரையும் பார்க்க முடியாது !!
ஆளாளுக்கு ஒரு திசையில் சென்று விடுவோம் !! இனி ஒருவருக்கு ஒருவர்
பார்க்க முடியாது , பேச முடியாது என்று ரொம்ப feel , பண்ணி அழுதாள்..
மாணவ மணிகளே ... உங்களுக்கு அன்பான வேண்டுகோள்..
உங்களுடைய பயணம் இன்னும் தொடர போகிறது. இது தான் முதல் படி .
இன்னும் பல படிகக்ள் இருக்கு நீங்கள் ஏறி வருவதற்கு..இனி தான் புது உலகம் 
உங்களுக்காக காத்து இருக்கு. ..அதை ஆவலுடன் எதிர் நோக்குங்கள்.!!.
+2 , உங்களுடைய முதல் படி.அதோடு முடிந்து விடுவதில்லை.எல்லாம் ..
ரயில் பயணம் போல் உங்களுடைய இடம் வந்தவுடன் நீங்கள் இறங்கிக்கொள்ள 
வேண்டும். அது போல் இனி அடுத்து காலேஜ், கவுன்செல்லிங், என்று பல படிகள் 
இருக்கு , நீங்கள் கடந்து வர.,பழசை நினைத்து மனதில்  அசை போட வேண்டுமே 
தவிர அழுவதில் ஒரு பயனும் இல்லை. எல்லாமே ஒரு நிகழ்வு ..அவ்ளோதான்..
அணைத்து நிகழ்வுகளுக்கும் ஒரு மாற்று வழி உள்ளது. , தீர்வு இருக்கு.
இன்றைய நவீன கால கட்டத்தில் , ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாற 
 பல ஊடகங்கள் , மீடியா கள் உள்ளன. மற்றொன்று gettogether , ஒரு குறிபிட்ட 
நாள் அணைத்து நண்பர்கள் ஒன்று கூடி உங்கள் பழைய நினைவுகளை நினைத்து 
மகிழுங்கள்.   இன்று ஒவருவரும் என்ன செய்து கொண்டு இருகிறார்கள் ?
என்ன முனேற்றம் கண்டு இருகிறார்கள் . என்ன உதவிகள் செயாலாம் .. என்று 
அனைவரும் கலந்து ஆலோசயுங்கள். அணைத்து விசயங்களையும் அலசுங்கள்.
நட்பு புனிதமானது. !! அதை தொடருங்கள் என்றும்.. ஒருவருக்கொருவர் 
எப்படி எல்லாம் முன்னேரலாம் வாழ்க்கையில் என்று புதிய பாதை பற்றி 
சிந்திக்க தொடங்குகள் ...வருங்கால தூண்கள் !! படை வீரர்கள் போல்
புறப்பிடுங்கள்.. வெற்றி உங்கள் கையில் .. வாழ்க வளமுடன்.. வாழ்த்துக்கள்.!!
  
 .     
    
2 கருத்துகள் :

  1. உண்மைதான் பெண்களுக்கு இந்த கஷடம் இருக்கு , ஆண்களுக்கு இல்லை. ஆனா மாறனும் அதுக்கு ஆண்களும் (கணவர்களும் ) விட்டு குடுக்கனும்

    பதிலளிநீக்கு
  2. சரியா சொன்னிர்கள்.ஜெயலாணி !!
    எப்ப விட்டு கொடுகிரார்கலொ அப்ப தான்
    ஒரு முடிவுக்கு வரும்.!

    பதிலளிநீக்கு

welcome