செவ்வாய், மார்ச் 09, 2010

நம்பிக்கை


நம்பிக்கை !

நமக்கு வாழ்கையில் நம்பிக்கை அவசியம். !

சமீபத்தில் என் தோழியுடன் அவர்கள் மகள் படிக்கும்

பள்ளிக்கு சென்று இருந்தேன் . இரு பாலரும் படிக்கும் பள்ளி அது

இருப்பினும் ஆண்கள் , மற்றும் பெண்கள் பேச தடை!!

தோழியின் மகளும் , அவள் சிநேகிதியும் கண் ஜாடை மூலமாக

அருகில் இருந்த மாணவனுடன் கருத்து பரிமாறி கொண்டார்கள்.

சிநேகதியின் அம்மாவும் அருகில் இருந்தார். நான் தோழியின்

மகளிடம் என்ன என்று கேட்க , அவள் சிரித்துக் கொண்டு ஒன்றும்

இல்லை ஆண்டி  என்றாள். பிறகு அவள் சிநேகதி நகர்ந்த உடன் ,

சிநேகதியின் அம்மா ஸ்ட்ரிக்ட் பேர்வழி . சிநேகிதனுக்கு

ஆல் தி பெஸ்ட்  கண் ஜாடையில்

கூறியதாக (அம்மாவுக்கு தெரியாமல் ) சொல்லி சிரித்தாள்.

மாணவிகளே !! சக மாணவர்களுடன் சகஜமாக இருங்கள்.

உங்கள் சகோதரரைப் போல் நினைத்து பழகுங்கள் !

அணைத்து விசயங்களயும் அலசி பேசுங்கள்.

நண்பனாக ஏற்று கொண்டு ஆரோக்கியமான நட்பை வளருங்கள்.

உங்கள் வீட்டில் உங்கள் நட்பை பற்றி சொல்லுங்கள்,

உங்கள் அம்மாவிடம் உங்கள் நண்பரை அறிமுகப்படுத்துங்கள் .

அணைத்து விஷயங்கள் transparent ஆக செய்யுங்கள்.

உங்களை பெற்றவர்களை எமாற்றாதீர்கள். அவர்களிடம்

அணைத்து விஷயத்தைப் பற்றியும் விவாதியுங்கள்.!

உங்களை யாரும் நம்புவார்கள். பிரச்சனைக்கு இடம் இல்லை.

பெற்றோர்களே .. நீங்களும் உங்கள் பெண்களை நம்புங்கள்.

பெண்களின் நட்பை புரிந்து கொள்ளுங்கள்.

நாங்க வளர்ந்த விதம் என்று நம் காலத்தை பற்றி சொல்லாதீர்கள்.

எங்க காலத்தில் பெண்கள் வாசலுக்கு வெளியே வந்தது இல்லை.

என்று சொல்லுவது  இன்றைய நடை முறைக்கு ஒத்து வராது .

காலத்தின் மாற்றம் , சூழ்நிலை ஏற்ப நாமும் மாற வேண்டும்.

3 கருத்துகள் :

welcome