ஞாயிறு, பிப்ரவரி 21, 2010

+2 மாணவ மாணவிகளே .....


+2 மாணவ மாணவிகளே !!.. பரீட்சை நெருங்கி விட்டது ...


1 .டைம் management மிகவும் முக்கியம்.

2 .இது உங்கள் வாழ்க்கை திருப்பு முனை ஆதலால் excite ஆகாமல்

    relaxed ஆக இருங்கள். டென்ஷன் ஆகாமல் சகஜமா இருங்கள்.

3 .சிலருக்கு பயத்தால் தூக்கம் வராது. அப்படியே தூங்கினாலும்

   டப் என்று முழிப்பு வந்து எழுந்து உட்கார்ந்து கொள்ளுவார்கள்.

  அதனால் நம்பிக்கை வையுங்க முதலில், என்னால் நன்றாக

  பரீட்சை எழுத முடியும் என்று. பிறகு பாருங்கள்.!

4 .இரவெல்லாம் படித்து கொண்டே இருக்காதீர்கள் .. பிறகு பகலில்

  tired ஆகி விடுவீர்கள். விடிகாலை பொழுது நிறைய படிங்கள்.

5 .நிறையே தண்ணீர் பருகுங்கள். சத்தான உணவை சாபபிடுங்கள்.

   junk food சாப்பிடாதீர்கள். குறிப்பாக non veg சாப்பிடுவதை குறைத்து

 கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் இபோழுது!!

பரிட்சை ஹாலில் செய்ய கூடாதவைகள்

1 .மறந்து எதையாவது கையில் எழுதாதீர்கள்..குறிப்பாக பிட் கொண்டு

  செல்லாதீர்கள். உங்கள் வாழ்க்கை திசை மாறி விடும்.

2 .தேவை இல்லாமல் அங்கும் இங்கும் அல்லது பிறரின் விடை தாள்

   மீது பார்வையை செலுத்தாதீர்.

3 .கேள்வி தாள் வாங்கிய உடன் எழுத ஆரம்பிக்காதீர். நன்றாக படியுங்கள்.

  தேவையான விடையை மதிப்பென்னுக்கு தக்கவாறு எழுதுங்க.

4 .விடைகளை மனதுக்குள் சொல்லிப்பாருங்கள். உணர்ச்சி வசைப்பட்டு

  சத்தமாக சொல்லி அனைவரும் உங்களை பார்க்கும் படி செய்யாதீர்.

5 .குறிப்பாக சாய்ஸ் type கேள்விகளை discuss செய்து அல்லது மனம் போன

   போக்கில் எழுதாதீர்.

பெற்றோர் கவனிக்க வேண்டியவை

1 .பெற்றோர்களே !! இந்த நேரம் உங்கள் அருகாமை உங்க பிள்ளைகளுக்கு

   எக்ஸ்ட்ரா பவர்.அவர்களை உற்சாகப்படுத்தி அவர்கள் தேவை அறிந்து

   அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுங்கள்.

2 .உங்கள் பிள்ளைகளுக்கு ஊன்றுகோலாக இருந்தால் , அவர்கள் வாழ்க்கை

   பிரகாசமாக இருக்கும் . மாட்டை விரட்டும் தார்க்குச்சியாக இருந்தால்

  உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் இடைவெளி அதிகம் ஆகும்!!

3 .நிறையே மதிப்பெண் எடு என்று நச்சரிகாதீர்கள் !! அவர்கள் capacity

   ஏற்ப அவர்களால் முடிந்ததை செய்யட்டும்.

4 .இந்த சமயம் , பாரு காலேஜில் சேர்க்க உனக்கு பல லட்சங்கள் செலவு

   செய்ய வேண்டி இருக்கு என்று சுட்டி காட்டாதீர்கள்.

5 .உங்கள் நண்பர், உறவினர் முன்பு உங்க பிள்ளைகளை பற்றி positive

  ஆக சொல்லுங்கள் ! உங்கள் பிள்ளை இடம் நீ நல்ல மதிப்பெண் எடுக்க

 முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு ..உன்னால் முடியும் என்று

அழுத்தமாகச் சொல்லுங்கள். பிறகு பாருங்க உங்க பிள்ளைகள் நடவடிக்கைகளை.!!

4 கருத்துகள் :

welcome