புதன், பிப்ரவரி 24, 2010

நான் வளருகிறேன் ...


நவ தானிய சத்து மாவு !


இன்று உள்ள அவசர உலகத்திற்கு சத்தான உணவை சாப்பிட

நேரம் கிடைப்பதில்லை . பாஸ்ட் food மற்றும் Junk food காலம்.

இந்த சத்து மாவு முளைக்கட்டி செய்வதால் சத்து அதிகம்.!

6 லிருந்து 60 வரை (சிறியவர் முதல் பெரியவர் வரை )

சாப்பிடலாம் . வேறு எந்த ஹாட் ட்ரிங்க்ஸ் வேண்டாம்.

அணைத்து vitamins இதில் உள்ளது .கொஞ்சம் அக்கறையுடன்

இதை ஒரு தடவை செய்து வைத்தால் 1 வருடம் வரை

வீணாக போகாமல் use பண்ணலாம் .

தேவை :

முழு ராகி (கேழ்வரகு ) : 1 1 /2 கிலோ

முழு கோதுமை               : 1 /2 கிலோ

பச்சை பயறு                      : 1 /4 கிலோ

முழு கம்பு அரிசி             : 1 /4 கிலோ

சோளம்                                 : 1 / 4 கிலோ

அரிசி                                      : 1 /4 கிலோ
ஜவ்வரிசி                              : 200 கிராம்ஸ்

உடைத்த கடலை            : 200 கிராம்ஸ்

வேர்க்கடலை                    : 100 கிராம்ஸ்

ஓட்ஸ்                                   : 100 கிராம்ஸ்

முந்திரி                                 : 50 கிராம்ஸ்

பாதாம்                                  : 50 கிராம்ஸ்

ஏலக்காய்                             : 10 ரூபாய்

செய்முறை :

கேழ்வரகு 6 மணி நேரம் ஊற வைத்து தண்ணி வடிய விட்டு

ஒரு சுத்தமான துணி மீது போட்டு மூட்டை கட்டி தண்ணீர் வடிய

விடவும் . 1 நாள் கழித்து பார்த்தால் சிறு முளை (germination )

வந்து இருக்கும் . அதை வடை சட்டி மீது போட்டு வறுக்கவும்.

பட பட என்று சத்தம் வரும் வரை நன்றாக வறுக்கவும். இதே போல்

கோதுமை,கம்பு சோளம் வறுக்கவும். இவைகளை முளை கட்டினால்

நல்லது. இல்லாவிட்டாலும் முளை காட்டாமல் நன்றாக வறுத்து

கொள்ளவும். (கண்டிப்பாக கேழ்வரகு மட்டுமாவது முளை கட்டனும்)

பிறகு ஏலக்காய் தவிர அனைத்தையும் வெறும் சட்டியில் வறுக்கவும்.

தனிதனியாக வறுப்பது நல்லது. நன்றாக ஆற விடவும்.

மெஷினில்(அரவை இயந்திரம்) ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அவ்ளோ தான். 2 டம்ளர் தண்ணீர் எடுத்து 4 ஸ்பூன் மாவு போட்டு நன்றாக

ஸ்பூனால் கரைத்து 15 நிமிடம் அடுப்பில் வைத்து கிளறவும் !.பிறகு ஆற

வைத்து 1 /.2 டம்ளர் பால் ஊற்றி அளவாக சர்க்கரை சேர்த்து சற்று

வெது வெதுப்பாக பருகலாம். diet இருப்பவர்கள் பால் சேர்க்காமல்

பருகலாம். சர்க்கரை உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடலாம் .

குழந்தைகள் குடிக்காவிட்டால் .. 1 டம்ளர் மாவு 1 டம்ளர் பொடித்த

சர்க்கரை கலந்து நெய் காய வைத்து இதில் ஊற்றி சூட்டுடன் லட்டகாக

பிடித்து (சர்க்கரை கலந்து இருப்பதால் ) உருண்டைகள் பண்ணி தரலாம்.!

முளை கட்டிய தானியம் என்பதால் பசி எடுக்காது. சத்தானது .

அனைவர்க்கும் ஏற்றது. காலை மற்றும் மாலை 1 டம்ளர் குடித்தால்

போதும் . மற்ற ஹாட் ட்ரிங்க்ஸ்க்கு bye சொல்லி விடலாம் !

6 கருத்துகள் :

 1. எங்க ஊரில் குடிசை தொழில் போல செய்து விற்கின்றார்கள். விலையும் குறைவு. நீங்கள் பதிவில் போட்டதால் இது அனைவருக்கும் பயன்படும். நன்றி.

  பதிலளிநீக்கு
 2. வாங்க அண்ணாமலையான் சார்!

  தங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஜெய்லானி சார்!
  நன்றி.
  அனைவரும் பயன் பட வேண்டும்
  என்று தான் என் விருப்பம்..

  பதிலளிநீக்கு

welcome