வெள்ளி, ஜனவரி 08, 2010

My Experience


நான் மேல் நிலை பள்ளிகளில் கணினி ஆசிரியராக பணிபுரிந்த சமயம் , மாணவமணிகளின் குறும்பு பற்றி இன்று நினைத்தால் கூட சிரிப்பு வரும் .. 75  கேள்விகள் சாய்ஸ் தேர்வுகளாக வரும். குறிப்பாக மாணவர்கள் அத்தகைய கேள்விகளுக்கு அடையாளங்கள் மற்றும் இரகசிய குறீடுகள் வைத்து இருப்பார்கள் . 

நன்றாக  படிக்கும்   மாணவர்கள்   வெகு  சாமர்த்தியமாக விரைவாக விடைகளை கண்டு பிடித்து விடுவார்கள். மற்ற சக மாணவர்களுக்கு சாய்ஸ் எ , சரியான விடை என்றால் ..மூக்கை சொறிவர்கள்..மற்ற மாணவர்களும் அதை பின்பற்றுவர்கள். சாய்ஸ் பி , என்றால் மெதுவாக இருமுவார்கள் .. சாய்ஸ் சி , என்றால் காலரை சரிசெய்வர்கள் .. சாய்ஸ் டி என்றால் கைகளை வேகமாக சொறிவர்கள்..

இவ்வாறு       அணைத்து       கேள்விகளையும் சைகைகள் செய்து மிக அழகாக கண்டு பிடித்து விடுவார்கள் . இதில் சாமர்த்தியம் இல்லாத மாணவர்கள் இங்கி பின்கி போன்கி....போட்டு எதோ ஒன்றை கண்மூடித்தனமாக செலக்ட் செய்து விடுவார்கள். பரீட்சை முடியும் வரை ஒரே காமெடி ஆக இருக்கும் எக்ஸாம் ஹால் !!!..ஒன்றுமே தெரியாத அப்பாவிகளாக முகத்தை வேறு வைத்து கொள்ளுவார்கள். இன்று பெரிய பொறியாளர்கள் அவர்கள்..!!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome