ஆபத்துக் காலத்தில் உயிரைத் தாங்கிப் பிடிப்பதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ரத்தப்பிரிவுகள் வேறுபடுவதால் எல்லோருக்கும் தேவையான ரத்தம் உடனடியாக கிடைப்பதில்லை. இதற்காக ரத்தத்தை உறையவைத்தல், தனித்தனி ரத்தசெல்களாக பிரிப்பது என பல வழிகளில் ரத்தத்தை பிரித்து சேமித்து பயன்படுத்துகிறோம்.
விஞ்ஞான வளர்ச்சியில் ரத்தசெல்களை வளர்த்து செயற்கையாக ரத்தம் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது செயற்கையாகவே ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த செல்களை உருவாக்கியவர் அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் வேதியல் பிரிவு பேராசரியராக பணியாற்றி வரும் சாமிர் மித்ராகோத்திரி என்பவர்தான் இந்த ரத்த செல்களை உருவாக்கி உள்ளார். இவர் 1992-ம் ஆண்டில் மும்பையில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.
இவர் உருவாக்கி இருப்பது, ரத்த சிவப்பணுக்களாகும். இது 90 சதவீத அளவில் இயற்கை ரத்த செல்கள் போலவே செயல்படுகிறது. மிருதுவானதாகவும், நெகிழும் தன்மையுடனும் இருப்பதோடு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு ரத்தத் தேவையை நிறைவேற்றும், நோய் எதிர்ப்புத்தன்மையுடன் கூடிய ரத்தமாக உட்செலுத்தும் புதிய மருத்துவ முறையாகவும் பயன்படும் என்று தெரிகிறது.
மித்ராகோத்திரி, ஏற்கனவே சிறப்புத் தன்மை கொண்ட பாலிமரை உருவாக்கி சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க தமிழ் !!!
வளர்க இந்தியா !!
very usful Invention & good information by u, KEEP IT UP..!
பதிலளிநீக்குkeep going ...providing informations..
PROUD TO BE INDIAN..
நன்றி !! தொடர்ந்து பாருங்கள்.
பதிலளிநீக்கு