அம்மா நீ போய் 8 மாதங்கள் ஆகிவிட்டது !!! என்னை பற்றி நினைத்து பார்த்தாயா? ஒரு முறையாவது என்னை பார்க்கணும்னு உனக்கு
தோணுச்சா? நான் தினமும் ஒரு முறையாவது உன்னை நினைத்து
கொள்வேன்..நீ ஒரு முறையாவது என்னை வந்து பார்ப்பாய் என்று
தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.! வருவாயா ம்மா ?
சில சமயம் அசரிரிரி போல் சின்ன சின்ன அலை கற்றைகள் நடுவில்
உன் குரல் மெலிதாக என்னை தழுவி செல்லும்.மெய் சிலிர்த்து போனேன்
அம்மா!!! இதே நாள் போன வருடம் நீ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனது
பசுமையாக மனதில் உள்ளது அம்மா .. பேபி ஆஸ்தெரிலியா சென்று
இந்தியா வரட்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தாயே .
அன்னயேர் தினத்தில் உனக்கு முடியாமல் போனதே அம்மா ..இந்த
அன்னையை நான் இனி எப்போ பார்ப்பேன் திரும்பவும்/?அன்னையர்
தினம் கொண்டாட நீ இல்லையே அம்மா ! போகும் போது ஒரு வார்த்தை
என்னிடம் சொல்லி போக உனக்கு ஏன் மனசு இல்லை அம்மா? உனக்கே தெரியாதா அம்மா நீ போறாய் என்று? அந்த வெங்கடாஜலபதி உன்னை
தாரா அம்மா? இந்த அன்னையர் தினத்திலாவது வருவாயாமா?
நீ இல்லாத வீடு வெரீர்னு போச்சுமா ..உன் குரல் கேட்காத நாட்கள்
என்னை நரகமாக்கிறது அம்மா/ ஒரே ஒரு முறை அந்த வெங்கடாஜலபதி
இடம் சொல்லி உன் முகத்தை காட்ட சொல்லும்மா ! மனசு கனமா
இருக்குமா ! உன் குரலே கேட்காமல் சோர்ந்து போனேன் அம்மா .
வாம்மா ... வா ... வந்துட்டு போம்மா..அனாதையாக இருபது போல்
உநேர்கிறேன் அம்மா . உன் திருமுகத்தை காட்டி என் மனபாரத்தை
இறக்கி வை அம்மா . வெங்கடாஜலபதி கருணை காட்டுவார் அம்மா.
பதிவு நெகிழ வைத்தது !
பதிலளிநீக்குthanks திண்டுக்கல் தனபாலன்.
பதிலளிநீக்குவலைஞன்
உங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் கீதா!
பதிலளிநீக்குஅம்மாவுக்கு நிகர் அம்மா மட்டுமே! அந்த இழப்பு காலத்தால் ஈடு செய்யக்கூடியது அல்ல. இருந்தாலும் மனதை திடமாக்கிக்கொண்டு, அந்த துக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வாருங்கள்!
உங்கள் வரவுக்கு நன்றி மேடம்.உங்கள் வார்த்தைகள்
பதிலளிநீக்குமனதுக்கு இதமாகவும் நம்பிகையும் தருகிறது.
மிக்க நன்றி.
It attributes bassist Tim Nordwind lipsynching the words.
பதிலளிநீக்குAlso visit my web page - http://www.getfitnstrong.com/adjustable-dumbbells/dumbbells-sale-further/