வியாழன், மே 03, 2012

நட்பு

Friends Are Like Balloons


சமீபத்தில் எங்கள் பாமிலி நண்பர் வீட்டிற்கு வெகு நாட்கள் பிறகு சென்றேன் !!

நாங்க சுகர் மில் குவார்டேர்ஸ் ல் ஒரே குடும்பம் போல் வசித்த

காலம்...இருபது வருட கதை !!! நேற்று நடந்தது போல இருந்தது.!!! ரமேஷ், 

விஜி ...அவர்களுக்கு ஸ்ரீவத்சன் ,வித்தா என்று இரண்டு குழந்தைகள்.ஐயர் 

என்றாலும் எந்த பாரபட்சம் இல்லாமல் அனைவர்க்கும் உதவுவார்கள் ! நாங்க 

என்றால் மிகவும் இஷ்டம்.!நானும் என் உடன் பிறவா அண்ணனாக தான் 

ரமேஷ் அண்ணாவிடம் பழகினேன். சோகம்,துக்கம் ,மகிழ்ச்சி அனைத்தையும் 

பரிமாறிகொள்வோம்.என் கணவரும் அப்படியே.! எதிர் வீடு என்பதால் எங்க 

வீட்டை விட அவர்கள் வீட்டில் தான் பொழுதை அதிக நேரம் 

போக்குவோம்...நேரம் போவதே தெரியாத அளவு பேசியே நேரம் நகர்ந்து 

விடும்..என் மகள் அவர்கள் வீட்டில் தான் எபோழுதும் விளையாடுவாள் 


விசேசம் என்றால் அவர்கள் வீட்டில் நாங்க ,மற்றும் அனைவரும் ஆஜர் ஆகி 

விடுவார்கள்..கல்யாண வீடு போல் கல கல என்று ஜாலியாக இருக்கும்.

நடுவில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தன எங்களுக்குள் !

ரமேஷ் அண்ணா ட்ரான்ஸ்பர் ஆகி வீட்டை காலி பண்ணி சென்று விட்டார்.

எதையோ  இழந்தது போல் இருந்தது அவர்கள் வீட்டை பார்க்கும் போது  

எல்லாம் வெறிர் என்று மனசு கனமாக இருந்தது.  கால போக்கில் நாட்கள் 

வேகமாக சென்றதால் .... அதிகம் அவர்கள் பற்றி நினைக்க தோன்றவில்லை !

எங்கள் நட்பு ஹலோ பை ... அளவில் சென்று விட்டது.!!! நாங்களும் 

குவார்டேர்ஸ் விட்டு வந்து விட்டோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் 

இருந்தாலும் நட்பை அதிகம் பாதிக்க வில்லை !!அவர்கள் வெகு நாட்கள் 

கழித்து  கூட எங்களை பார்க்க எபோழுதாவது வருவார்கள் ..நாங்க சந்தித்த 

பின்பு கூட எங்களால் சகஜமாக பேச முடிந்தது.!!பழய கதைகள் எல்லாம் பேசி 

மகிழ்வோம்.!! சுவாரசியமாக இருந்தது எங்கள் நட்பு.!! இந்த முறை சென்னை 

சென்று இருந்த போது.. ரமேஷ்-விஜி யை சென்று பார்த்து வரலாம் என்று ..


ரமேஷ் அண்ணாவிடம் முதல் நாள் மொபை லில் பேசிய போது ....அதே குரல் !

மிகுந்த உற்சாகத்துடன் ...இப்ப தான் அண்ணா வீட்டுக்கு வழி தெரிஞ்சதா? 

என்று கடிந்து கொண்டார்..... மறு நாள் அவர்களை பார்த்த பிறகு பத்து கிலோ 

குறைந்தது போல் மனசு லேசாக இறக்கை கட்டி பறந்தது!! பிறகு என்ன 

அன்றைய பொழுது பழய கதைகளை பேசி நேரம் ஓடியது .. மீண்டும் எப்ப 

பார்ப்போம்? என்று ஆயாசமாக இருந்து !! இது  தான் தெய்வீக நட்பா ? சொந்த 

பந்தங்கள்  விட சுற்றி இருக்கும் நட்பே இனியதாக இருந்தது.அந்த 

நிகழ்வுகளை நினைத்தாலே இனிக்கின்றது!.மற்றது எல்லாம் மறந்து 

விடுகிறது... அத்தகைய நட்பு என்றும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.




2 கருத்துகள் :

  1. பெயரில்லா3 மே, 2012 அன்று 3:01 PM

    ரொம்ப நாளாக ப்ளாக் இல் காணாத போது.. நினைத்தேன் .. எதோ summer vocation போய் விட்டிர்கள் என்று..! நன்று.. பழைய நீண்ட நாள் நண்பர் குடும்பத்துக்கு சென்று வந்தது மிகவும் சந்தோசம் . நமது பழைய நண்பர்களுடன் சேர்ந்து இருப்பது.. பழைய நாட்களை நினைவு கூர்வது . இவைகள்ளுக்கு இன்னையான மகிழ்சி உலகில் வேறேதும் இல்லை என்பது நண்பர்கள் உள்ள அனைவரும் உணர்ந்தது..!! நண்பர்கள் வாழ்க்கையின் பொக்கிஷங்கள் ..! அவர்களை பிரியும் போடு ஏற்படும் மனவேதனை மிகவும் கொடுமை..!! என்னதான் லேட்டஸ்ட் உலகின் வசதிகள் தொடர்புக்கு உதவி யாக இருந்தாலும் .. சேர்ந்து இருப்பது போன்ற மகிழ்சி கிடைகாது.. எனபடு உண்மை..!! என்ன மேடம் இந்த வருடம் ' உங்களுக்கு நண்பர்கள் ஸ்பெஷல் வருடமோ ..?" தொடர்ச்சியாக பழைய நண்பர்களை சந்திடு கொண்டே உள்ளீர்கள் ..!! வாழ்த்துகள் ..!! தொடருங்கள் ..!! - ராகுல் குமரன் -

    பதிலளிநீக்கு
  2. மிக சரியாக சொன்னீர்கள் ராகுல் !பழய நண்பர்களை மிகவும்
    மிஸ் பண்ணிட்டேன் எத்தனை புது நட்பு வட்டம் கிடைத்தாலும் .. சில அபூர்வம் மான நட்பால் வாழ்க்கையில் நிறைய விசயங்களை இழக்காமல் இருக்க துணை செய்யும் இந்த நட்பை மிகவும் நேசிக்கிறேன்.தலை வணங்குகிறேன்.
    ராகுல்..நான் சொல்வது சரி தானே?.

    பதிலளிநீக்கு

welcome