ஞாயிறு, ஜனவரி 22, 2012

சந்தோசமா? இல்லை கோவமா?

இன்று தை அம்மாவசை !!
அம்மாவாசை என்றாலே அம்மா ஞாபகம் தான்.
குளிக்காமல் சாப்பிடமாட்டார்கள் !!காக்கை
 சாப்பிடாமல் இவர் சாப்பிடமாட்டார். ! மனமுருக 
வெங்கடாசலபதியை கும்பிடுவார்!!
என்னமா கும்பிட்டாய் ?என்று கேட்பேன் .. 
எல்லாரையும் காப்பாற்று வெங்கடாசலபதி!
என்னை நல்லா இருக்கும் போதே அழைத்து கொள் .
என்னால் யாருக்கும் சிரமம் வேண்டாம்னு வேண்டிக் 
கொண்டேன் வெங்கடாசலபதியிடம் .என்பார்.

அழகாக விசயங்களை விவரிப்பார்.
புத்தகத்தை படித்து அதில் உள்ளதை 
சிறிதும் பிசகாமால் விவரிப்பார்.

நீ போய் ஐந்து அம்மாவசைகள் 
முடிந்து போயின ....அங்கு சென்ற
 பிறகு என்னை மறந்து விட்டாயே தாயீ ..
சொர்கத்துக்கு அல்லது நரகத்துக்கு 
போனாய் என்று புரியவில்லை !!! ஒரு 
வார்த்தை என்னிடம் சொலிவிட்டு 
போக உனக்கு நேரம் இல்லை.போன பிறகாவது ....
அங்கு உள்ளவைகள் பற்றி சொல்ல உன்னால் 
முடிய வில்லை நான் என்ன செய்வேன்... 
என் தாயை இழந்து பரிதவித்து நிற்க்கிறேனே...
ஆண்டவா உனக்கு இரக்கமே கிடையாதா?என் 
தாயை பறித்து கொண்டாயே !!! இனி நான் என்ன
செய்வேன்? அவர் குரலை இனி எப்ப கேட்பேன் ?
என் கண்கள் குளமாகிறது !! என் தாய் இருந்தால் ....
எனக்கு ஆறுதல் சொல்லுவார்!! என் சிறு வயதில் 
என் அம்மாவை கட்டி கொண்டு "அம்மா சந்தோசமா?
இல்லை கோவமா"? என்று அடிக்கடி கேட்பேன். 













அவர் சொல்வதை
 கேட்கமாட்டேன்..இருந்தாலும் 
அம்மா சந்தோசமா? இல்லை 
கோவமா என்று அவர் சந்தோசம் 
தான் என்று சொல்லும் வரை
விடாமல் கேட்டுகொண்டே
 இருப்பேன்...
எனக்கு நல்லா தெரியும் ! அம்மாவுக்கு என் மீது
கோவம்தான் என்று இருந்தாலும் அன் அம்மா
சந்தோசம் தான் என்று நான் சமாதனம் ஆக
வேண்டும் என்று அவர் கூறுவதை கேட்ட பின்பு
தான் நான் திருப்தி அடைவேன்.அம்மா உன்னை
மறுபடியும் நான் எப்படி பார்ப்பேன்? அடுத்த
ஜென்மத்திலாவது உனக்கு மகளாக பிறக்க
 வேண்டுகிறேன்.அந்த ஆண்டவன் நம்மை
காப்பாற்றுவாராக..நான் சந்தோசமா இருகேன்னு
நீ எப்பமா சொல்லுவே? சீக்கிரம் சொல்லுமா ..,
காத்துகிட்டே இருப்பேன் நீ சொல்ற வரை....







5 கருத்துகள் :

  1. சகோ..உங்களது அம்மா உங்களது மனதிற்குள் எண்ணங்களாக இருக்கிறார். அருமையாக வளர்த்திருக்கிறார். உங்கள் வரிகளில் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. அழுதேவிட்டேன்.மனதைப் பக்குவப்படுத்துங்கள் சகோதரி.இதுவும் கடந்ததுதான் வாழ்வு !

    பதிலளிநீக்கு
  3. திண்டுக்கல் தனபாலன்,
    ஹேமா,
    தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி சகோ !

    பதிலளிநீக்கு

welcome