வெள்ளி, பிப்ரவரி 10, 2012

வகுப்பறை

இன்று  தினமலரில் தலைப்பு செய்தியை பார்த்து அதிர்ந்து விட்டேன்...!!!
வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை 
மனம் பதை பதைக் கிறது.
மணாவ மணிகள் தான் வருங்கால தூண்கள்.!
அவர்கள் இப்படி ஆயுதத்தை கையில் எடுக்கலாமா? 


எங்கே போகிறது நமது கலாசாரம்..


கலி முத்திப்போச்சு., ‘கொலை வெறி ’ பெருகி போச்சு ! வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை


ஒரு ஆசிரியையாக வேதனை படுகிறேன்.
இதற்கு எல்லாம் ஒருவரை ஒருவர் குறை சொல்லி சென்றால் ..
மறைந்த ஆசிரியை திரும்ப வந்து விடுவாரா?அந்த மாணவன் நிலை...


இன்று மீ டியா கலாச்சாரத்தால் தான் இப்படி எல்லாம் நடக்கிறது ..


என்று ஒத்தை வரியில் சொல்லி தப்பித்து கொள்ளலாமா?
இதற்கு என்ன தான் தீர்வு?


ஆசிரியர் -மாணவி  மாணவர்களின் இடைமுகம் வேறு படுவதால்..!!!
இது போன்ற சூழல்கள் உருவாகிறது..இதை எப்படி தீர்ப்பது.!!
பொறுமையாக கையாளுவதே ....சிறந்தது...நம் பிள்ளைகளை கூட
அப்படி தானே கையாளுகிறோம். பிள்ளைகளும் பெற்றோரிடம்
எதிர்பார்பதை தானே .,ஆசிரியர் இடம் எதிர் பார்க்கின்றநேர்.


பள்ளிகளில் நான் வேலை பார்த்த போது நடந்த சம்பவங்களை நோக்கி என் மனம் செல் கிறது..


படிக்க மாட்டேன்கிறான் சார் என்று தலைமை ஆசிரயர் இடம்  
சொன்னால் போதும்..!!  மிஸ் நீங்க ஏன் டென்ஷன் ஆகுறி ங்கே? 
அவன் படிச்சா படிக்கிறான் .....இல்லாட்டி கூலி வேலை பாக்குரான்.
கிளாஸ் சுக்கு போனமா  கிளாஸ் எடுத்தோமா னு வந்து கிட்டே இருங்க.
என்பார். ஒரே ஒரு மாணவன் கவனிக்கிரானா ... அவனுக்கு சொல்லி 
கொடுங்க..என்பார். நமக்கு மனசு கேட்காது ., கோபத்தில் கத்தினால் ..
யாரை யோ பார்த்து கத்துவதாக நினைத்து கொண்டு ., ரியாக்  ஷன் 
இல்லாமல் பார்த்து கொண்டு இருப்பார்கள்..எரிச்சலாக இருக்கும்.


மேடை ஏறிட்டா ..நம் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்தால் போதும்
என்று சக டீச்சர் ஒருவர் சொல்லுவார்.!!எதற்கும் கவலை படவேண்டாம்.


மாணவர்களை நாம் என்ன தான் பக்குவமாக கையாண்டாலும்..


சில நேரங்களில் விபரீதமாகி விடுகிறது.சில மாணவர்கள் பள்ளி நேரம் '
முடிந்தும் வீடு செல்ல மாட்டார்கள்.. காரணம் வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் அல்லது அம்மா அப்பா சண்டை அல்லது வேறு பிரச்சனைகள்
காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து ., பையனை கவனிக்க மாட்டார்கள்.
அவர்கள் மன அழுத்த திற்கு ஆளாகி விடுகிறார்கள்.கடினமாகிரார்கள் !!!
பள்ளிக்கே வருவதை தவிர்கிறார்கள்.வந்தாலும் கிளாஸ் க்கு
வருவதில்லை.சிலர் பிடித்த வகுப்பு களை மட்டும் கவனிப்பார்கள்.

நான் பிளஸ் ஒன் ல் முதல் முதலில் டிஜிட்டல் பாடம் எடுத்தேன்.
அன்று முதல் ஏன் பெயர் எனக்கே மறந்து விட்டது.என்னை டிஜிட்டல் 
மேடம் னு பிள்ளைகள் கூப்பிடுவார்கள்.அந்த அளவுக்கு ஒன்றி விடுகிறார்கள் இன்றைய தலை  முறை. !.. போர் அடிக்குது கிளாஸ் என்றால் நிறுத்தி கொள்ள வேண்டும் அவர்களுக்கு..இல்லா விட்டால் அவர்களுக்குள் சைகை காட்டி என்னை பாடம் நடத்த விடமாடார்கள்.


ஒரு ஆசிரியர் படத்தை நோட்டில் வரைந்து ., பென்சில் ஷார்ப் செய்யும் 
கத்தி கொண்டு படத்தை குத்தி கிழித்து கொண்டு ஒரு மாணவன் இருப்பான்.


பன்னிரண்டு வருடங்கள்  கழித்து டிஜிட்டல் மேடம் நல்லா இருக்கீங்களா ? னு 
அந்த மாணவன் குரல் கேட்டு திரும்பி பார்த்தல் ...தாடி , மீசையுடன் .. என்னை 
தெரியலையா மிஸ் என்று அருகில் வந்தான்.  மாணவர்கள் இப்படியும் 
இருக்கார்கள்.. ஆச்சரியமாய் .. சுவராசியமாய் உள்ளது சில விஷயங்கள்.


மாணவர்கள் சாலைமறியல் பரபரப்பு


செய்யல முறை தேர்வு நடக்கும் போது மாணவமணிகள் டென்ஷன்
ஆக இருப்பார்கள் ..அதுவும் கம்ப்யூட்டர் என்றால் கேட்கவே வேண்டாம்.!


ஒரு மாணவன் ரிப்பென் போல் பிட் பேப்பர் காலர்க்குள் வைத்து இருந்தான்.
ப்ரோக்ராம் மைக்ரோ ஜேரோக்ஸ் செய்து சொருகி இருந்தான். நான் மெதுவாக
நுனியை பிடித்து இழுத்து கிழித்து வெளியே போட்டு விட்டேன்.என்னை
முறைத்தான்..சேதி கேட்டு தலைமை ஆசிரியர் வந்து அந்த மாணவனை
அடி பின்னி எடுத்து விட்டார்..நீ செய்ய வேண்டாம் போ வெளியே !!! என்றார்.


எனக்கு தர்ம சங்கடமாகி போனது.நீங்கள் அனுமதித்தால் அவன் செய்யட்டும்.
என்றார்..நான் தம்பி போ உள்ளே !! உனக்கு தெரிந்ததை செய் .,என்றேன்.!!


முடித்த பிறகு அந்த மாணவன் வந்து தன் தவறை உணர்ந்து என் இடம்
வந்து மன்னிப்பு கேட்டான்.!! போ நாளை எக்ஸாம் கு நல்லா படி என்றேன்.இன்றும் கல்லுரி மாணவிகள் ..,ஹாப்பி டீச்செர்ஸ் டே..சொல்கிறார்கள் !


உங்களை மிஸ் பண்ணுறோம்னு 
சொல்றா ங்க..  பார்த்து பார்க்காதது போல்செல்கிறவர்கள் உண்டு
எனக்கு பேர் வைத்தவர்களும் உண்டு.


நிறையே கற்று கொண்டேன்!!
பக்குவ படுத்தி கொள்ள பழகி விட்டேன். பொறுமை அதிகமாக 
உள்ளது இப்பொழு து !! 

8 கருத்துகள் :

 1. இப்போ இருக்கிற மாணவர்களின் நிலை வேறு....அலட்சியம்....அப்புறம் எல்லாம் தெரியும் என்கிற மனோபாவம் ......யாரையும் மதிப்பதில்லை இது போல் சொல்லி கொள்ளலாம்.கொலை செய்த மாணவன் அக்னிபாத் படம் பார்த்து தான் செய்தேன் என்கிறான்...என்ன பண்றது ....

  பதிலளிநீக்கு
 2. நன்றி கோவை நேரம்.
  இதை எல்லாம் சரியாக கற்று
  கொள்ளுவார்கள் நம் மாணவர்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான அலசல் சகோதரி.கத்திமேல் நடப்பதுபோலன விஷயம் ஆசிரியர்களும் மாணவர்களுக்குமான சிநேகம் !

  பதிலளிநீக்கு
 4. நன்றி ஹேமா !தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு

welcome