சனி, ஜனவரி 21, 2012

வெறிச் ..

நாங்கள் இருக்கும் தெருவில் வயதானவர்கள் அதிகம்.
லைன் வீடுகளாக இருப்பதால் .,மாலை அவரவர் குறிப்பாக 
வயதானோர் வாசலில் வந்து அமர்ந்து பேசிக்கொண்டு 
இருப்பார்கள்...ஜே என்று கலகலப்பாக இருக்கும் எங்க தெரு.

பொங்கல் ,மற்றும் மார்கழி என்றால் போதும்..அவரவர் தினம் 
சாணி போட்டு மெழுகி .போட்டி போட்டுகொண்டு கலர் 
கோலங்கள் போட்டு அசத்திவிடுவார்கள்.பொங்கல் அன்று 
காப்பு கட்டி, மாலை முழுவதும் கோலம் வரைய ஆரம்பித்து 
விடுவார்கள்.லைனாக போடும் அழகே தனி தான். இதில்
 பாட்டிகள் பங்கு அதிகம்., கொசு கடியை மறந்து உற்சாகமாக 
கலர்களை தேர்ந்து நயமாக கலந்து போட செய்வார்கள்.














இந்த வருடம் தெருவே வெறீர் என்று காணப்பட்டது.
காரணம் வரிசையாக நான்கு பேர் மரணங்கள் எங்கள் 
தெருவையே மாற்றிவிட்டது.வாசலை பார்த்தாலே மிகவும் 
கஷ்டமாக உள்ளது.ஏன் என்றால் பார்த்தவுடன் அருகில் 
அழைத்து சிறிது நேரமாவது பேசுவார்கள்.இன்று அவர்கள் 
மறைவு வெகுவாக அனைவரயும் பாதித்து விட்டது.

பொங்கலுக்கு நான்கு நாட்கள் முன் தான் வயதான் பாட்டி
இறந்து போனார்.மிகவும் வருத்தமாக இருந்தது.ஜீரணிக்க 
முடியல.பிறப்பு என்று ஒன்று இருந்தால் ...இறப்பு என்பது 
உறுதி தான்..,ஆனா அது எப்ப? என்பது தான் கேள்விக்குறி.
அவர்கள் நேரம் வந்தவுடன் விடை பெற்று சென்று 
விடுகின்றனேர் !! நம்மை ஆழ்ந்த வேதனையில் தவிக்க 
விட்டு விட்டு சென்று விடுகிறார்கள்.!!!! அவர்கள் வருவார்களா?

வாழ்ந்த இடத்தை பார்பார்களா? நம்மை கவனிப்பார்களா?
அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்? எல்லாம் 
கேள்வி குறி தான்.ஆத்மா நம்மை சுற்றி தான் இருக்குமா?
அனைத்துக்கும் ஆண்டவன் தான் விடை தர வேண்டும்.!

4 கருத்துகள் :

  1. சில விஷயங்கள் வாழ்வில் சகிக்கமுடியாவிட்டாலும் கடந்தே போகவேண்டிய சூழ்நிலை.மனதைப் பக்குவப்படுத்திக்கொள்வோம் தோழி !

    பதிலளிநீக்கு
  2. தாங்கள் சொல்வதுதான் சரி. பிறப்பு என்றால் இறப்பும் உண்டு. யாரும் இங்கு தங்கிவிட முடியாது. என்ன செய்ய எல்லவற்றையும் தாங்கிக் கொண்டு மனதைத் தேற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு

welcome