வியாழன், நவம்பர் 17, 2011

காக்கா கூட்டம்

காலையில் வீட்டு கார் ஷேட் ல் ஒரு காக்கா தலை இல்லாமல்
துண்டிக்கப்பட்டு இறந்து கிடந்தது! இரவில் ஏதோ இரைச்சல் !!!
நாய் அல்லது பூனை அந்த காக்கையை குதறி இருக்க வேண்டும்.!
மனசுக்கு கஷ்டமாக இருந்தது! ஒரு குச்சியை எடுத்து இறந்து போன
காக்கையை தள்ளி வெளியே கொண்டு வந்தேன்.!!என்ன ஆச்சரியம்
ஒரே சத்தம்!!! கா ..கா   கா..என்று ..எப்படி தான் மற்ற காக்காகளுக்கு
தெரிந்ததோ .. வானத்தில் ஏகப்பட்ட காக்கைகள் படை எடுத்து இறந்து
கிடக்கும் காக்கையை நோக்கி வந்தன !! அதன் அருகே  சூழ்ந்தன ....
சத்தம் மட்டும் குறையவே இல்லை..தூரத்தில் இன்னும் காக்கைகள்
வந்த வண்ணம் இருந்தன.என்ன மனிதாபிமானம் ? இந்த காக்கைகளுக்கு...
நான் அப்படியே ஸ்தபித்து ..நின்று விட்டேன்..என்ன உணர்வு இந்த
காகைகளுக்குள் தான் எத்தனை பந்தம் ஒற்றுமை..கண்டிப்பாக இதை
ஆறரிவு உள்ள மனிதர்கள் பார்த்த பிறகாவது கற்றுக்கொண்டு
திருந்த வேணும் என்று நினைத்து கொண்டேன்...சிறிய காக்கைகள்
என் மனதுக்கு கோபுர  கலசமாக திகழ்ந்தது.!! மலைத்து போனேன்.
நம் மனிதர்களிடம் இத்தனை  ஒற்றுமையை காண முடிமா? ஒரு சிலர்
மட்டுமே இருப்பார்கள் !! ரோட்டில் வண்டியில் அடிபட்டு கிடந்தால்..
பல இடங்களில் மனித நேயம் செத்துவிடுகிறது.கூட்டம் கூடி வேடிக்கை
பார்பவர்கள் தான் அதிகம் இருப்பார்கள் ..உதவ முன் வருபவர்கள் ஒரு
சிலர் மட்டுமே.!!! சுயநலம் மட்டுமே மனதர்களிடம் காணலாம் பெரும்பாலும்.
சமீபத்தில் என் தாயார் இறந்த பொழுது .. விலகி இருந்த பலரும் அம்மாவின்
இறுதி யாத்திரையில் அழைக்காமல் .,துக்க செய்தி கேட்டு கலந்து கொண்டனர் !! நெருங்கிய சொந்தங்கள் அடிக்கடி வந்து போகிறவர்கள்
துக்க   செய்தியை அறிவித்தும் ..கண்டும் காணாமல் சாக்கு போக்கு சொல்லி
எதற்கும் வந்து துக்கத்தில் பங்கேற்கவில்லை .... மிகவும் பாதித்தது.!!!

இந்த காக்கை எங்கே  ??  நம் மனிதர்கள் எங்கே?  ஏணி வைத்தாலும் எட்டாது.








7 கருத்துகள் :

  1. மனிதாபிமானம் இருக்கிறது, இருக்க வேண்டிய இடங்களில்

    பதிலளிநீக்கு
  2. யதார்த்தத்தை மிக அழகாகச் சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    காக்கைகளுடன் மனிதர்களை ஒப்பிட்டுப் பார்த்தல் கூட
    காக்கைகளை இழிவு படுத்துதல் போலாகுமோ எனத் தோன்றுகிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. //இந்த காக்கை எங்கே ?? நம் மனிதர்கள் எங்கே? ஏணி வைத்தாலும் எட்டாது.//

    சத்தியமான உண்மை கீதா .காகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கு .நல்ல பகிர்வு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. suryajeeva தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..காக்கை பற்றி மேலும் ஒரு செய்தி இங்கே போய் பாருங்க :http://senthilvayal.wordpress.com/2011/11/20/%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%b5%e0%ae%a4%e0%af%81/

    பதிலளிநீக்கு
  5. Ramani sir மிக்க நன்றி!
    "மனிதர்களை ஒப்பிட்டுப் பார்த்தல் கூட காக்கைகளை இழிவு படுத்துதல் போலாகுமோ எனத் தோன்றுகிறது"

    சத்யமான வரிகள் !!!நன்றி!

    பதிலளிநீக்கு
  6. angelin மேடம் வாங்க.. அனுபவித்து ஏழுதியது ...
    நன்றி!

    பதிலளிநீக்கு
  7. காக்கா கூட்டத்தை பாருங்க ..அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க ...அப்படின்னு ஒரு பழைய பாடலே இருக்கு

    பதிலளிநீக்கு

welcome