தன்னம்பிகைக்கு மறு பெயர் என் அம்மா ..
ஆள் பாதி ஆடை பாதி என்பார் என் அம்மா ...
முடியாது என்றால் கூட என்னால் முடியும் என்பார் என் அம்மா !
இவைகள் எல்லாம் என் அம்மாவிடம் நான் கற்று கொண்டது!!
தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன்பு தான் பலகாரங்கள் செய்ய ஆரம்பிபார்.
யாரையும் துணைக்கு அழைக்கமாட்டார்.முறுக்கு , சிறுமா லட்டு என்
அம்மாவின் ஸ்பெஷல் .நாங்க எல்லாரும் படுத்த பிறகு ஆரம்பிபார் !
குறைந்தது 100 எண்ணிக்கை செய்வார்....அதை நேர்த்தியாக பாத்திரங்களில்
அடுக்கி வைப்பார்.மறு நாள் எங்களுக்கு எடுத்து கொடுப்பார்.அதன் சுவையே
தனி !! என் அம்மாவின் கை பக்குவம் இன்றும் நிறைந்து இருக்கு மனசு
முழுவதும்..மறுநாள் ஓய்வு எடுக்கமாட்டார்...சுறுசுறுப்பாக இருப்பார்.!
இப்படிப்பட்ட அம்மாவை ரொம்பவே மிஸ் பண்றேன்.போன தீபாவளியே
அவருடன் நான் கொண்டாடிய கடைசி தீபாவளி ,எனக்கு புரியவில்லை
அன்று !!!..இந்த தீபாவளி அம்மா இல்லாமல் கொண்டாடும் தீபாவளி.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக
welcome