வியாழன், செப்டம்பர் 29, 2011

திரும்பி பார்க்கிறேன்

என் தாயாரின் கடைசி புனித பாதை பற்றி rewind செய்கிறேன்.
மறக்க முடியாத நாள்...அன்று !! சிவபுராணம் மற்றும் 
திருவாசகம் ஒலித்தது.!!!வீட்டில் இருந்து  வெளியே வாசலுக்கு 
கொண்டு வந்தார்கள்...கட்டிலில் படுக்க வைத்து சடங்குகள் 
செய்தனர் ..பிறந்த மக்கள் அனைவரும் நீர்மாலை எடுக்க சென்றோம்...
ஒரு வழியாக வந்த பிறகு ....
ஒவெரு சடங்குகளாக செய்தனர்.ஸ்ரீதேவி வாங்குவது ,
மற்றும் கோடி துணி போத்துவது என்று நின்று கொண்டு 
இருந்தார்கள் ....நேரம் ஆக..ஆக மனது ஒரு நிலையில் 
இல்லை எனக்கு...திடீர் என்று ஒரே சத்தம்..யார் முதலில் 
சேலை போர்த்துவது என்று போட்டி ....பிறந்த இடத்து கோடிஎங்க அக்காவுக்கு நான் தான் முதல் சேலை போத்துவேன் .. என்று தாய் 
மாமா ஒரு பக்கம் ..புகுந்த  இடத்து கோடி  தான் முதலில் 
என்று சித்தப்பா மறு பக்கம் !!! சம்மந்தி கோடி தான் முதலில் 
என்று அண்ணனுக்கு பெண் கொடுத்தவர் ..இன்னொரு பக்கம்.

இத்தனை நாள் இவர்கள் எங்கு போய் இருந்தார்கள் ? 
யார் இவர்கள்? எங்கு இருந்து வந்தது இந்த சொந்தம்?

எனக்குள் கேட்டு கொண்டேன் சத்தம் இல்லாமல் ......

ஒரு வழியாக சத்தம் அடங்கி ஓவருவராக தாங்கள் எடுத்த 
சேலைகளை அம்மா மீது போர்த்தினார்கள்..நேரம் ஆச்சு 
என்று குரல் வர ..மயான வண்டி வேகமாக வந்தது..பேர.பிள்ளைகள்
மற்றும் கொள்ளு  பேரர்கள்  நெய்பந்தம் பிடிக்க..இறுதியாக 
அம்மாவின் முகம் காண எனக்கு பகீர் என்று வெறுமையாக 
இருந்தது!! சத்தம் இல்லாமல் அழுதேன்... யாருக்கும் தெரியாமல் ....
அத்தனை  சேலைகளையும் கடைசியில் தூர போட்டுவிடார்கள். (மின்மயானத்தில்)

இதுக்காகவா  இத்தனை போட்டி? என்று  பிரமித்து போனேன் !

இந்த பூத உடல் இனி யாருக்கு சொந்தம்? உயிர் எங்கே சென்றது?   
ஆடிய ஆட்டம் என்ன ?  வீடு வரை உறவு பாட்டு எனக்கு மட்டும் ஒலித்தது....மௌனமாக இருந்தேன்.

இப்போது நான் தெளிவாக ஒரு முடிவுக்கு வந்த விட்டேன்.
ஆம் அது என்ன ? என் உடலை தானம் செய்வது என்பது!!

ஆம் உயிர் அற்ற உடலுக்கு இப்படி சொந்தம் கொண்டாடும்
மனித பிறவி இனி எபோழுதும் எடுக்க கூடாது !!!
அப்படியே எடுத்தாலும் ... நாலு பேருக்கு உதவுவது 
உடல் தானம் ..என்று முடிவுக்கு வந்து விட்டேன்.

7 கருத்துகள் :

  1. மிக நல்ல முடிவு, வாழ்த்துகள்.

    கோடி சேலை - விவகாரம் - வருத்தத்த்ற்குரியது. இறந்த வீட்டில் இது அவசியமா?

    பதிலளிநீக்கு
  2. "'உடல் தானத்திற்கு"' உயிர் ஊட்டி இருக்கிறீர்கள்

    பதிலளிநீக்கு
  3. சோக சூழ்நிலையில் எடுக்கும் முடிவுகள் தன்னலம் இன்றி இருக்கும்

    பதிலளிநீக்கு
  4. உடல் தானம் நல்லதொரு முடிவு.. பாராட்டுக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  5. உலகில் அம்மாவின் பிரிவு போன்றதோர் வருத்தம் வேறில்லை... அந்த துக்கத்தில் நல்லதோர் எண்ணம் உயர்ந்திருக்கிறது...

    பதிலளிநீக்கு
  6. உடல் தானம் என்பது நல்ல முடிவு. இந்த மாதிரி முடிவு அனைவரும் எடுக்கனும்.

    பதிலளிநீக்கு
  7. என்னை ஊக்கப்படுத்திய அன்பு நெஞ்சங்ககளுக்கு இரு கரம் கூப்பி என் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் !

    பதிலளிநீக்கு

welcome