சனி, ஆகஸ்ட் 27, 2011

சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப்


அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
thanks senthilvayal
click here for details!
அப்பாடா...வந்துருச்சு !!

10 கருத்துகள் :

  1. yakka ithu mattum india vandhuchuna super a irukum

    mmmm

    page border size a korachu nalla agalama vainga

    padikka kashtama oru oru varthaikum scroll panra mathiri iruku

    பதிலளிநீக்கு
  2. நல்ல பயனுள்ள சமையல் எந்திரம்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மாய உலகம் நன்றி மீண்டும் வருக!

    பதிலளிநீக்கு
  4. maya நன்றி..மன்னிக்கவும் ..
    சிரமத்துக்கு ..விரைவில் சரி செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. அப்படியே ஊட்டியும் விடுமா?

    சுவாரசியமான அறிமுகம். நன்றி,

    பதிலளிநீக்கு
  6. சுவிட்டு ஒண்னைத்தட்டிவிட்டுப்புட்டா இரண்டு தட்டுல இட்லியும் சட்னியும் வந்திரணும்னு என் எஸ் கே பாடியது நிஜமாகிடுமோ!!!!

    பதிலளிநீக்கு
  7. இன்றைய வலைச்சரத்தில் தங்களை
    அறிமுகம் செய்ய கிடைத்த வாய்ப்புக்காக
    நான் மிகவும் மகிழ்வு கொள்கிறேன்

    பதிலளிநீக்கு

welcome