ஞாயிறு, மே 22, 2011

அது அது இருக்கும் இடத்தில இல்லாவிட்டால்?..


ANGELS TOUCH

மேடம் உங்க மகன் அட்மிஷன் விசயமா 
கொஞ்சம  வந்துட்டு போங்க .என்று தகவல்
வந்து   உடனே  கிளம்பினார் என் உறவுக்கார 
பெண்மணி ! என்னுடைய  பையன் தான் சார் 
மணி,என்றார். அம்மா உங்க பையன் D .மணி  . 
என்று application  ல்  எழுதி  இருக்கான்... அம்மா 
பெயர் ராணி ,அப்பா பேர்  ராமன் என்று எழுதி 
இருக்கான்.நீங்க தான் ராணியா?
பிறகு D .மணி என்று எப்படி initial  
 போட்டு இருக்கான்? அதற்காக தான் உங்களை 
அழைத்தேன்.. என்றார் நிர்வாகி .
சார் அது வந்து என் அக்கா , மாமா தான் 
இவனை சிறு வயது முதல் சுவிகாரம் எடுத்து 
வளர்க்கின்றனர்.! அதனால் தான் அவர்கள் 
பெயரை போட்டு ,என் கணவரின்  initial  
போட்டு இருக்கான் என்று தயங்கி கூறினார். 
தன பதினைந்த வயது மகனை அக்காவிடம் 
கொடுத்து விட்டு, கணவனை பிரிந்து இன்று தனி
மரமாய் ஒரு இடத்தில தங்கி வேலை
பார்கிறார் இந்த பெண்..என்னால் அவனை பத்து 
மாதம் சுமந்து மட்டுமே  பெற்று எடுக்க முடிந்தது  ங்க....
என் அக்காவுக்கு மட்டும் தான் அவனை வளர்க்கும் 
பாக்கியம் கிடைத்து இருக்கு!!! புராண கதையில் 
வரும் கர்ணன் ,மற்றும் கண்ணன் போல .. என் மகன் 
அவனை பெற்ற  தாயை விட , வளர்த்த தாய் மீது 
தான் அதிகம் பாசம் !எனக்கு கொடுத்து வைத்தது அவளவு தான்..அதான் என்னை மம்மி என்றும் , என் அக்காவை அம்மா என்றும் அழைக்கிறான் என் மகன் ,, என்று பெருமூச்சு விட்டார் ..

இவர் அக்காவே  தனக்கு குழந்தை இல்லாத காரணத்தால் 
கணவன் மனைவி  இருவரிடம் விரிசலை உருவாக்கி
குழந்தையை சிறு வயது முதல் தன வசம் வைத்து கொண்டு
அம்மாவிடம் காட்டாமல் வளர்த்த காரணத்தால் , பெற்ற
தாயை  மம்மி என்று அழைத்து , அந்த வெகுளி பெண்ணை
 வீட்டை விட்டு துரத்தி ,உங்கள் இருவருக்கும் இப்ப டைம் 
சரி இல்லை !! சில வருடம் கழித்து நீ இங்கே வா!! இப்ப
உனக்கு வேலை வாங்கி தரேன் !! என்று மில் ஒன்றில்
சேர்த்து அங்கே தங்கி ரா பகலாய் உழைத்து உரு குலைந்து
மகன் மற்றும் கணவனை பிரிந்து கண்ணீர் விடுகிறார்.

 இவர் அக்கா சத்துணவு கூடம் ஒன்றில் வேலை செய்து 
கொண்டு அங்குள்ள மளிகை சாமான் களை யாருக்கும்
தெரியாமல் வீட்டுக்கு எடுத்து வந்து புழங்கியது போக
மீதம்  உள்ளதை அக்கம் பககத்தாருக்கு விற்று லாபம்
பார்க்கிறார்.. அனைவரிடமும் தான் பெற்ற பிள்ளை போல்
கூறி , இவர் சொல்வதை மட்டுமே அந்த பையன் கேட்கும் 
படி செய்து கொண்டு இருக்கிறார்.பெற்ற தாய் வந்தால்
கூட அந்த பையன் சிறிதும் பாசம் இல்லாமல் , இவர்
அக்காவை தாயாக,தெய்வமாக ,நினைத்து ...உண்மையான
தாயை மூன்றாம் நபர் போல் பார்கிறான்.தன தந்தையை
எங்கு பார்த்தாலும் வெட்டனும் என்று கூறுகிறான் ..
அந்த அளவுக்கு அந்த பிஞ்சு மனதில் வளர்ப்பு தாய்
நஞ்சை வளர்த்து , பெற்ற தாயை கூட உதாசீனம்
செயும் அளவுக்கு வளர்ந்து உள்ளான்.இந்த பெண் தான்
என்ன செய்ய முடியும்? கேட்ட எனக்கு மனம் வலித்தது .


வளரும் பருவத்தை பார்க்க கூட எனக்கு கொடுத்து
வைக்கலயே என்று கண்ணீர் விடுகிறார் பெற்றவள்.
 

22 கருத்துகள் :

  1. கதை கொஞ்சம் குழப்பமா இருக்கே . . .

    பதிலளிநீக்கு
  2. என் சொந்தக்கார பெண் தான் பெற்ற பையனை தன அக்காவிடம் கொடுத்து விட்டு இன்று தன மகன் தன்னோடு இல்லை என்று புலம்புகிறார்.இதில் என்ன குழப்பம் தங்களுக்கு♔ℜockzs ℜajesℌ♔™ ?

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா22 மே, 2011 அன்று PM 2:32

    உண்மையிலே மனவருத்தமான விடயம். அந்த பெற்ற தாயின் மனம் மகனை காணும் வேளைகளிலே எவ்வளவு வேதனைப்படும்

    பதிலளிநீக்கு
  4. தாயும் தந்தையும் சேர்ந்து மகனிடம் எடுத்துச் சொல்ல முயற்சிக்கலாமே.. ஆனாலும் கொடுமையான நிகழ்வுகள்தாம்..

    பதிலளிநீக்கு
  5. வளரும் பருவத்தை பார்க்க கூட எனக்கு கொடுத்து
    வைக்கலயே என்று கண்ணீர் விடுகிறார் பெற்றவள். //god will shows to him real love of mother..
    today ur post tamil font is not displayed ..junk values only displaying sometimes..pls do the need ful.
    pls visit my blog
    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. இம்மாதிரியான அனுபவங்களை என் ஆசிரிய பணியில் பார்த்துள்ளேன்... பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. பெற்றோர்களின் போதிய புரிதல் இன்மையாலும், தமது வேலைப் பளு காரணமாக குழந்தைகளைப் பராமரிக்காது தவறுவதால், பிற்காலத்தில் பிள்ளைகளுக்கு ஏற்படும் விளைவுகளை அழகான கதை வடிவில் தந்திருக்கிறீர்கள். நன்றிகள் சகோ.

    பதிலளிநீக்கு
  8. middleclassmadhavi வாங்க ,
    நீங்க சொல்ற மாதிரி
    தாயும் தந்தையும் சேர்ந்து மகனிடம் எடுத்துச் சொல்ல முயற்சி செய்ய கூட வழி இல்லாமல், கணவன் மனைவியும் ஒருவருக்கு
    ஒருவர் பார்ப்பதை கூட
    விரும்பவில்லை.பிறகு என்ன செய்ய ...

    பதிலளிநீக்கு
  9. நிரூபன் வாங்க,கருத்துக்கு நன்றி சகோதரரே .

    பதிலளிநீக்கு
  10. குணசேகரன்... உங்க ப்ளாக் மிக அழகாய் உள்ளது.
    விரைவில் என் ப்லோகை சரி செய்கிறேன் !

    பதிலளிநீக்கு
  11. ஆமாங்க கந்தசாமி sir மிகுந்த வேதனை ல் துடிக்கிறார் .
    .

    பதிலளிநீக்கு
  12. ராஜேஸ்வரி நீங்க சொல்ற மாதிரி அந்த தாய்மை என்ன பாடு படும்

    பதிலளிநீக்கு
  13. //அது அது இருக்கும் இடத்தில இல்லாவிட்டால்?../உண்மைதாங்க .நிறைய பேருக்கு இது ஒரு பாடம் .
    வாழ்க்கையையும் தொலைத்து பெற்ற பிள்ளையையும் சொந்தம் கொண்டாட முடியாமல் .பாவம் அந்த தாய்.

    பதிலளிநீக்கு
  14. உங்க பிளாக் லே அவுட் ரொம்ப வே டிஃப்ரெண்ட்

    பதிலளிநீக்கு
  15. >>இவர் அக்காவே தனக்கு குழந்தை இல்லாத காரணத்தால்
    கணவன் மனைவி இருவரிடம் விரிசலை உருவாக்கி
    குழந்தையை சிறு வயது முதல் தன வசம் வைத்து கொண்டு
    அம்மாவிடம் காட்டாமல் வளர்த்த காரணத்தால்

    என்ன கொடுமை இது?

    பதிலளிநீக்கு
  16. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக நன்றி தோழரே !
    கேட்ட எனக்கு அதை விட கொடுமையாக இருந்தது.
    இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கிறார்கள் .அந்த தாய் மனசு படும் பாடு தான் சொல்ல வார்த்தைகள் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. angelin வாங்க,தங்கள் கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு

welcome