வெள்ளி, மார்ச் 04, 2011

ஸ்பீட் பிரேக்

ஸ்பீட் பிரேக் பார்த்தாலே எனக்கு அலேர்ஜி !!!!

சமீபத்தில் எங்க பாலாமணியை வீடு கிளீன் பண்ண  அழைத்தேன்.
தோ மா !! போங்க பின்னாடி ஓடி வந்துருவேன்  என்று சொல்லும்.
ஆனா வராது.!!வீட்டுலே விருந்தினர்  இருக்கா என்பதை உறுதி செய்து 
கொண்டு தான் வரும்..வேலை ஜாஸ்தி ஆகி விடும் ! என்று பாலா 
மணிக்கு உஷாராக முன்கூட்டியே தெரிந்து சமாளித்து விடும்....

கூப்பிட்டு சலித்து போய் , நேரே கையோடு அழைத்து வந்து விடலாம் 
என்று ஸ்கூட்டி எடுத்து சென்றேன் !..என்ன ஆச்சரியம் ,பாலா    மறு 
பேச்சு இல்லாம வன்டியில் பின்னாலே ஒய்யாரமாய் வந்து அமர்ந்து ..
போலாமா ?  என்றவுடன் , எனக்கு ஆச்சரியம் தாங்க வில்லை!!

உற்ச்சாகமாய் கிளம்பினேன்.கொஞ்ச தூரம் கூட சென்று இருக்க 
மாட்டோம் !!ஸ்பீட் பிரேக் ஒன்று வந்தது.!!அந்த இடத்தில அங்கு 
ஸ்பீட் பிரேக் தேவை இல்லை ...இருப்பினும் தாண்டி தான் போக 
வேண்டும். வண்டியை ஸ்லொவ் பண்ணி ஸ்பீட் பிரேக் மீது 
ஏற்றி மெதுவாக இறக்கினேன், அடுத்து முன்னேற வேகத்தை கூட்ட 
நினைத்தேன்.அதற்குள் என்னை சுற்றி ஒரே கூட்டம்.!!திரும்பி 
பார்த்தால்....பாலா மணி ஸ்பீட் பிரேக் அருகே உட்கார்ந்த வண்ணம் 
தலையில் இருந்து  ஒரே ரத்தம்..சொட்டு சொட்டாக கொட்ட சினிமாவில் வருகிற  மாதிரி !!..ஒரு நிமிஷம் எனக்கு அப்படியே தலை சுற்ற , 
சமாளித்து கொண்டு வண்டியை விட்டு இறங்கி ஸ்டாண்ட் போட்டு 
நிறுத்தி வருவதற்குள் கை,கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. !!

பிறகு அருகில் இருந்தவர்கள் உதவி உடன் ஒரு வழியாக பாலாவை 
ஆஸ்பிட்டல் கூட்டி சென்று முதலுதவி செய்து , மண்டையில் சிறு
தையல் போட்டு வீட்டுக்கு அனுப்பினர்..நல்ல வேளை  !! ஆண்டவன் 
கருணையால் ..பெரிதாக பலமான காயம் இல்லை ..என்று டாக்டர் 
கூறினார்.ஒரு பட்டாளமே எங்களை பின் தொடர்ந்து வந்தது.அவை 
அனைத்தும் பாலாவின் உறவு முறைகள் என்பதை பின்பு தான் 
அறிந்து கொண்டேன்.துளைக்கும் பார்வையால் என்னை பார்த்தனர்.
 ஒருவர் மட்டும் முன் நோக்கி என் அருகில் வந்து , அம்மா உங்களை 
பாராட்டனும்மா !! இந்த காலத்தில் ஆக்சிடென்ட் ஆகி விட்டால் ,
நூறோ அல்லது ஆயிரமோ கொடுத்து விட்டு திரும்பி பார்க்காம 
போய் விடுகின்றனர்!!.. நீங்க கூடவே இருந்து பார்த்து கொண்டீர்கள் .
என்று கை கூப்பி நன்றி தெரிவித்தார்...

தையலை போட்டு கொண்டு அந்த மயக்கத்திலும் பாலா ,அவிக மேலே 
தப்பு இல்லை ங்கோ .. நான் தான் முதல் முதலாக, இவிக வண்டியில் 
உட்கார்ந்து வரலாமேன்னு .. ஆசை பட்டு உட்கார்ந்துட்டேன் ங்க..எப்படி 
பிடித்து கொண்டு உட்காருவதுன்னு தெரியாம ,,,, சேலை வேறு நழுவி 
கீழே விழுந்தேனுங்க   .... என்று கூற..!!ஆள் ஆளுக்கு பாலாவை திட்ட
ஆரம்பித்து விட்டனர்...அறிவு இருக்கா? உட்காந்து பழக்கம் இல்லாம 
எதுக்கு இப்படி ஏறி ? இம்சை செய்றே ?தேவையா உனக்கு இது?
பக்கத்தில் தானே வீடு..நடந்து போய் இருக்கலாமா ? என்றனர்..
பாலா இன்று தான் முதல் முதலாக வண்டியில் ஏறுகிறாள் என்று 
தெரிந்து இருந்தால் ...நான் பின்னாடி ஏற சொல்லி இருக்கவே மாட்டேன் .

எல்லாம் என் நேரம் !!..என்ன செய்ய ? யாரை சொல்ல? ஆச்சு !! ஒரு 
வாரம்..தையல் பிரித்து காயம் முற்றிலும் ஆறி ஆச்சு...பொழுதோடு 
வந்த பாலாமணி ..ம்மா பின் மண்டை எல்ல்லாம் ஒரே வலி யாக
இருக்கு. டாக்டர் ஒரு C T ஸ்கேன் எடுத்து   பார்க்க சொல்லி இருக்கார் .
என்றவுடன் என் நிம்மதி எல்லாம் ஒரே நேரத்தில் பறி போனது..சரி என்று 
2500 ரூபாய் எடுத்து கொண்டு கிளம்பினேன்.. அம்மா நான் எங்க வீட்டு காரர்
உடன் இதை பொள்ளாச்சி சென்று எடுத்து கொள்கிறேன் ! என்றவுடன் ,,
நான் ,பாரு பாலாமணி ஸ்கேன் ரிப்போர்ட் எடுத்து கொண்டு நேரே இங்கு   
வந்து விடனும்.சாக்கு போக்கு சொல்லிட்டு விட்ல இருந்திடாதே !!!
என்றேன்.போய் வரும் வரை எனக்கு உயிரே இல்லை.ஒரு வழியாக 
ஸ்கேன் ரிப்போர்ட் டை டாக்டர் இடம் காட்டி , ஒன்றும் இல்லை 
என்ற வுடன் தான் எனக்கு நிம்மதி ஆக இருந்தது!!


எங்க வீட்டில் யாருக்கும் இப்படி ஆகி இருந்தால் கூட நான் இப்படி துடி துடித்து 

போய் இருக்க மாட்டேன் என்று நினைக்கிறன்..அந்த அளவு பாலா மணிக்காக 

வேண்டினேன் !! எல்லாம் அவன் செயல..!  ஸ்பீட் பிரேக் கை பார்த்தாலே 

சிறிது நடுக்கம் தான் இப்பவும்.!  அதிலிருந்து யாரையும் டப்ல்ஸ் (பின்னாடி)

வைத்து ஓட்டுவது இல்லை என்று முடிவு செய்து விட்டேன்.

ஏன் என்றால்  ட்ரிப்ல்ஸ் ஓட்டும் போது  கூட நான் இத்தனை சிரமம் பட்டது 
கிடையாது !அழகாக ,அருமையாக , சின்ன கீறல் கூட இல்லாமல் ஓட்டி உள்ளேன்...நடக்கணும் என்று இருந்தால் நடந்தே தீரும் !!என்பதை அறிந்தேன் .

10 கருத்துகள் :

  1. எனக்கும்ககூட இப்பிடி அனுபவம் உண்டு!

    பதிலளிநீக்கு
  2. இங்கு கூட அப்படித்தான்
    நாங்கள் கூட ஸ்பீட் ப்ரேக்கரா
    இல்லை ஸ்பைனல் கார்ட் ப்ரேக்கரா எனச்
    சொல்வதுண்டு
    நடந்ததை அப்படியே உணரும்படி
    எழுதியிருக்கிறீர்கள்
    இனிமேல் இதுபோன்று நேராதிருக்க
    ஆண்டவனை வேண்டுகிறேன்

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு. speed breaker வரும்போது ஆட்டோவில் வந்தாலும் முந்திச் சொல்லி விடுவேன் - அவ்ளோ பயம்.

    எங்கள் ஊருக்கு முக்கியத் தலைவர் வரும்போதெல்லாம் இந்த ஸ்பீட் ப்ரேக்கர்சை எடுத்து விடுகிறார்கள்; அவர் போய் ஒரு நாள் கழித்து மறுபடியும் போட்டு விடுகின்றனர்! - இதற்கெல்லாம் எந்த அறிவிப்பும் கிடையாது!

    பதிலளிநீக்கு
  4. middleclassmadhavi தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி !@

    பதிலளிநீக்கு
  5. Ramani தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  6. அன்புடன் அருணா உங்கள் அனுபவம் என்ன?

    பதிலளிநீக்கு
  7. படக் படக் அனுபவத்தை சுவை குன்றாமால் பகிர்ந்தது அருமை,ஆனால் இனி உஷாராக இருக்கணும் என்பதை அழகாக அறிவுறுத்திட்டீங்க.

    பதிலளிநீக்கு

welcome