புதன், பிப்ரவரி 09, 2011

திகில் ..டிக் டிக் ..

என் வீட்டு அருகே அம்மாவும் பெண்ணும்  குடும்பம்
ஒன்று இரூக்கிறது  .அந்த பெண் என்னுடைய தோழி .
அம்மா வயதானவர்.அனால் சுறு சுறுப்பானவர்..
புத்தகம் மற்றும் சீரியல் பார்ப்பது அவருடைய பொழுது
போக்கு..நேற்று அவர் வீட்டு முன்பு ஒரே கூட்டம்...நான்
என்னவோ ஏதோ என்று ஓடினேன் .தோழி யின் அம்மா
அக்கம் பாகத்தில் உள்ளவர்களை அழைத்து கொண்டு
வீட்டுக்குள் இருக்கும் மாடி நோக்கி சென்று கொண்டு
இருந்தார்!!எனக்கு ஒன்றும் புரிய வில்லை . தோழிக்கு
தான் எதாவது ஆக்கி விட்டதா !! என்று அழைத்தேன் ...
அம்மா அருகே சென்றால் ...முகம் எல்லாம் வெளிரி
சிவந்து ..தொண்டை அடைத்து ..பதற்றத்துடன் வேர்க்க
விறு விறுக்க..எம் பொன்னை காணோம் மா !!என்றார் .
நானும் பதற்றதுடன் தோழியை அழைத்த வண்ணம்
மாடி ஏறினேன்..மொட்டை மாடியில் தண்ணீர் டாங்க்
இரண்டு பேர் ரிப்பேர் செய்து கொண்டு இருந்தனர் .என்
தோழி மாடியில் ரூமில்  கதவை சாத்திக் கொண்டு  பரண்
மீது சாமான்களை அடுக்கி கொண்டு இருந்தாள்!..
                          

ஆக நடந்தது இது தான். தோழி அம்மாவிடம் நான் மேலே
போய் டான்க் கிளீன் பன்னுபவர்களுக்கு ஏணி எடுத்து
கொடுத்து விட்டு கூட இருந்து பார்த்து விட்டு கீழே
வருகிறேன் என்று அம்மாவிடம் சொல்லி சென்று
இருக்கிறாள். டான்க் கிளீன் பன்னுபவர் குடிக்க தண்ணீர்
அம்மாவிடம் கேட்டு கிழே வந்து இருகின்றனர்!..மேலே
பொண்ணு இல்லையா என்று கேட்டு இருக்கிறார்கள் ..
அவர்கள் நாங்க பார்கவில்லை என்று கூறி இருக்கிறார்கள் .

பிறகு என்ன அம்மாவுக்கு நிலை கொள்ளவில்லை !!காரணம்
முதல் நாள் தான் சீரியல் தொடர் ஒன்றில் வீட்டில் தனியே
இருந்த ஒரு பெண்ணை மூன்று நபர்கள் சேர்ந்து மயக்க மருந்து
தெளித்த கர்சீப்பை கொண்டு மூஞ்சியில் வைத்து அமிழ்த்தி
சுவற்றில் சாய்த்து வைத்து விட்டு தங்கள் வேலையே பார்த்து
உள்ளனர் !..அது அப்படியே இந்த அம்மாவின் கண்களில் முன்நே
ஒட...பயம் தொற்றி கொள்ள பிபி எகிற பதற்றத்துக்கு காரணம்...

முடிவில் ஊரை கூட்டி உள்ளார்...இது ஒன்றுமே தெரியாத தோழி
அப்பாவியாக வெளியே உள்ள கூட்டத்தை பார்த்து குழம்பி போனார். 
                   
பெண்களே இந்த காலத்தில் உஷாராக இருக்கா வேண்டியது தான்..
அதற்காக இப்படியா? விசயம் இது தான்..இவருக்கு தன் மகளை
நகைக்கு ஆசை பட்டு கொலை செய்து டான்க் ல் போட்டு விட்டேனரோ
என்ற பயம்மாம்.!! காலம் கெட்டு கிடக்கு..என்று வீண் கற்பனை வேறு..
 இவரும் இந்த தள்ளாத வயதில் மகள் மீது உள்ள பாசத்தால்.
சத்தம் இல்லாமல் மாடி ஏறி சென்று மகளை தேடி பார்த்து
விட்டு,கதவு சாத்தி இருந்ததால் .. காணோம் என்று நினைத்து அக்கம்
பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் கூட்டி ஆர்பாட்டம் செய்து விட்டார்..

எல்லாம் சீரியல் பார்ப்பதால் ..வந்த வினை..அதிக கற்பனை.
சிரியோ சிரி  என்று அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தோம் .நல்ல
வேலை இது எதுவும் டான்க் கிளீன் பன்ணியவர்களுக்கு தெரியாது!.
கடமையே கண்ணாக டான்க் குள் இறங்கி வேலை செய்து கொண்டு
இருந்தனர்..பாவம்..உஷார் பெண்களே. !தேவை இல்லாமல் டென்ஷன்
ஆக்கி மற்றவர்கள் நேரத்தையும் வீனாக்காதீர்....யோசிங்க நல்லா.
இல்லனா இப்படி தான் ..குழம்பி போய் ஹார்ட் அட்டாக் கூட வரலாம்.
                                                            

12 கருத்துகள் :

 1. காலம் கெட்டுக்கிடக்கின்றது என்பது உண்மைதான். அலேட்டாக இருக்கவேண்டியதும் நிhயமானதுதான். ஆனால் பதறாமல் நிதானமாக ஆராய்ந்து பார்க்கும் தன்மை தேவை என்பதை இந்தச்சம்பவம் எடுத்து காட்டுகின்றது.

  பதிலளிநீக்கு
 2. அவர்களுடைய வயது சூழல்
  இவைகளைப் பார்க்கையில்
  எனக்கென்வோ சிரிப்பு வரவில்லை
  நல்லவேளை பிரச்சனையில்லை
  என்றுதான் தோன்றியது
  நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. கவனமாகவும் இருக்க வேண்டியது இருக்கிறதே... அந்த அம்மா, கூப்பிட்டு இத்தனை ஆட்கள் உதவி செய்ய வந்தது, சந்தோஷமான செய்தி . :-)

  பதிலளிநீக்கு
 4. Ramani sir ,
  வாங்க..நாங்க டென்ஷன் உடன் சென்று ! ஒரு அசம்பாவிதமும் இல்லை என்றவுடன் பெருமூச்சு விட்டு வாயார சிரித்தோம்.! நீங்க சொல்றது போல அவர்கள் சூழ்நிலை.அப்படி .என்ன செய்வது.

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் சித்ரா கவனமாக இருக்க வேண்டியது தான்!எங்க ஊர் மக்காஸ் ரொம்ப நல்லவங்க..கூப் பிட்ட குரலுக்கு..உடனே ஓடி வந்து அக்கறையுடன் விசாரிப்பாங்க.!!!

  பதிலளிநீக்கு
 6. சில பெண்கள் பதற்றத்தில் என்ன செய்கிறோம்,என்ன சொல்கிறோம்னு கூட தெரியாமல் இப்படி நிறைய விஷயங்கள் நடப்பதுண்டு,பதற்றமான நேரத்தில் ஆசுவாசப்படுத்தி சிந்தித்து செயல்படனும்.நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 7. நீங்க உங்க சிந்தனையை வளர்க்கனுமுனா தயவு செய்து சீரியல் பார்க்காதிங்க.சீரியல் டைரக்ட் செய்யும் ஆண்கள் அனைவரும் சைக்கோ.

  பதிலளிநீக்கு

welcome