ஞாயிறு, ஜனவரி 02, 2011

அப்பாவும் நானும் இரண்டாம் நாள்.!

அப்பாவும் நானும் மீண்டும் தொடர்கிறது.!!
வருடம் பிறந்து இரண்டாம் நாள்...
 என் டைரியில் இருந்து .....(1994 )
புது வருடம் அன்று வர முடியாதவர்கள் ,, அப்பாவை
காண இன்று வந்து இருந்தார்கள்..அனைவரிடமும்
பேசி முடித்து விட்டு ...சேது !! பாப்பா ஊரில் இருந்து
வந்திருக்கு ..ராமேஸ்வரம் கடல் மீன் வஞ்சிரம் வாங்கு!!
முள்ளு அதிகம் இருக்காது. டேஸ்ட்  ஆக இருக்கும் என்று
அப்பா எனக்காக மீன் வாங்கி வர சொல்லி கொண்டு இருந்தார்.

அப்பாவுக்கு மீன் வாடையே பிடிக்காது.சாபிட்டது இல்லை .
இருந்தாலும்..டேஸ்ட்  ஆகவும், முள்ளு இல்லாமல் இருக்கும்
என்று தெரிந்து வைத்து இருக்கிறார்.!!!அம்மாவிடம் , வாசம்
வராமல் நல்லா வறுத்து வை ,விரும்பி சாப்பிடுவா..என்றார்..


 மதியம் சாபிட்டு முடித்தவுடன் ,, நல்லா சாப்பிட்டாயாமா ? 
மீன் பிரெஷ் ஆக நால்லா இருந்துச்சா? நாளைக்கு இன்னும் 
கொஞ்சம் பிரெஷ் ஆக கொண்டு வர சொல்லட்டுமா?  என்றார்..
போதும் பா .திருப்தி ஆக இருந்தது..நீங்க தான் .டேஸ்ட் பன்னவே 
இல்லை..என்றேன்..அதனால் என்னமா..நீ நல்லா சாப்பிட்டாய் 
இல்லை?வேறே என்ன மா  வேணும்?  பேத்திக்கு என்ன 
வாங்கட்டும்?என்றார்....அவள் ஒன்னும் சாப்பிட மாட்டாள் பா ..என்றேன் .
                                                      
ரொம்ப நேரம் பேசிக் கொண்டி இருந்தோம். ! நேரம் போனதே தெரியவில்லை.
சிறு குழந்தை போல் பேத்தியுடன் கொஞ்சி விளையாடினர்.அன்று அவளை 
தூக்கி கொண்டு வாக்கிங் போய் வருகிறேன் என்று கிளம்பினார் உற்சாகத்துடன் .

நாளையுடன் என் டைரி முடிவு பெறும்.நன்றி மீண்டும் சந்திப்போம்!!!!
நியூ இயர் வாழ்த்து உங்களுக்கு. 
கிளிக்  பண்ணுங்க !!

5 கருத்துகள் :

  1. என்ன இருந்தாலும் அடுத்தவங்க டைரியை படிப்பது தனி சுவாரஸ்யம்...

    பதிலளிநீக்கு
  2. அப்பாவுடன் கழிக்கும் ஒவ்வொரு பொழுதுகளும் பெண்களுக்கு பொக்கிஷம்..

    பதிலளிநீக்கு
  3. Philosophy Prabhakaran
    இன்றைய டைரி படித்தால் மனம் கனத்து விடும்!

    பதிலளிநீக்கு
  4. இது முன்பே படித்தேன் ஆனால் கமெண்ட் போட முடியாம போச்சு.

    பதிலளிநீக்கு

welcome