திங்கள், ஜனவரி 03, 2011

அப்பாவும் நானும் முடிவு பெறுகிறது

என் டயரி 1994 ஜனவரி 3 .....
அன்று வருடம் பிறந்த மூன்றாவது நாள்!!!
சீக்கிரம் முழிப்பு வந்து விட்டது ::  எழுந்தவுடன் அப்பா அழைத்தார்.
பில்ட்டரில் பிரெஷ் ஆக டிகாஷன் போடுமா சூடாக என்றார்.பால் காரர் 
வரவில்லை.சரி இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருப்போம் என்று 
படுத்தேன்.மார்கழி பனி அன்று அதிகமாக சூழ்ந்து இருந்தது.
  6 .30  காலை பொழுது !! அம்மாவிடம் பால் வரலை சூடா ஹர்லிக்க்ஸ் 
போட சொல்லி குடித்தார்.ஒரே சளி , என்று பல்  விலக்கி காலை 
கடன்களை முடித்து விட்டு பஸ் டிக்கெட்களில் கையோப்பம் இட்டு 
இன்வாய்ஸ்  சீட் ,காஷ் பாக் எடுத்து பூஜை அறையில் சாமியை 
கும்பிட்டு விட்டு வண்டியை அனுப்பி விட்டு ,கொஞ்ச தூரம் காலார 
நடந்து போய் வரேன் என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வாக்கிங் 
சென்று வந்தார் அந்த பனி குளிர் ரிலும் !!!
வாசலில் ரொம்ப நேரம் நின்று கொண்டு இருந்தார்.

7 .30  அண்ணனிடம் ..தம்பி எனக்கு ஒரு மாதிரியா இருக்கு வண்டி 
வரவழை நல்ல டாக்டர் கிட்டே உடனே போய்ட்டு வந்திருவோம் ..
என்றார்....அண்ணன் ஓடினார்.நான் உடனே எழுந்தேன்.குழந்தையை 
அம்மாவிடம் விட்டு விட்டு விக்ஸ் எடுத்து தடவினேன்.

8  மணி ஆகிவிட்டது.வண்டி வந்த பாடில்லை .வீட்டுக்கு அருகில் ஒரு 
சைக்கிள் ரிக் ஷா     கன்னு முன்னே தென் பட்டது !!அப்பாவை அதில் 
அமர வைத்து நானும் உட்கார்ந்து கொண்டு வேகமாக வண்டியை 
ஓட்டச் சொன்னேன்   அப்பா முகத்தை பார்க்கவே பயமாக இருந்தது. 
எனப்பா செய்யுது ? என்றேன். அவரால் பேச முடியலை.சைகையால் 
ஒன்றும் இல்லை என்று தலையை  மட்டும் ஆட்டினார்.வேகமாக 
ஆஸ்பத்திரி போக  சொல்லி சைகை காட்டினார். .கண்கள் வெளியே 
வந்து விடும் போல் இருந்தது அப்பா முகத்தில்.இன்றும் என் மனதில் 
பதிந்து  விட்டது  அந்த காட்சி.. நினைத்தால்  பகீர் என்று இருக்கும்.

8 .30  ஆஸ்பத்திரியில் ட்ரைனிங் டாக்டர் பையன் (சிறு வயது) மட்டும் 
இருந்தார். ஒரு பெஞ்ச் மீது படுக்க வைத்து ஈ சி ஜி எடுக்கணும்  என்றார்.
மூச்சு விடவே கஷ்டப்படும் நிலையில் அப்பாவால் ஒன்றும் பன்ண
முடியலை..டரிப்ளின் இன்ஜெக்சென்  போட்டார். முதலுதவி ஆக்சிஜன்
அங்கு இல்லை .பெரிய டாக்டரை அழைக்க சென்றுவிட்டனர்.அப்பா முகம் 
பிரகாசமாக இருந்தது..வீட்டுக்கு போலாமா ?என்றார்...ஒரு டேபிலேட் கொடுத்து டீ வாங்கிட்டு வந்து கொடுங்க என்றார்கள்.அதற்குள் அப்பாவிடம் இருந்து பெரும் இரைச்சலாக ஒரு மூச்சு மட்டுமே வந்தது.!!அவ்வளவு தான் ..அது தான் அவருடைய கடைசி மூச்சு என்று புரிய எனக்கு வெகு நேரம் ஆச்சு !

9 .30 ஆம்புலன்ஸ் வந்தது அப்பாவை வீட்டுக்கு தூக்கி வந்தோம்.!!பிரம்மை 
பிடித்தது போல் இருந்தது.அம்மா அடித்து கொண்டு அழுதார்.அண்ணன் போனை 
எடுத்து ஒவ்வருவருக்கும்   தகவல் சொல்ல ஆரம்பித்தார். !!பலருக்கு தந்தி 
கொடுக்க அட்ரஸ் சொல்லி கொண்டு இருந்தார்.எல்லாம் கனவு போல் இருந்தது எனக்கு.அப்பா இறந்ததை  என்னால் நம்பவே முடியலை.!!படுத்து  
இருப்பது போலவே தான் தோன்றியது!.என் குழந்தை தவழ்ந்து சென்று அப்பாவை பிடித்து இழுத்தது...! எங்கள் தெருவில் குடி இருந்தவர்கள் எல்லாம்..ஆச்சரியத்துடன் அப்பாவை பார்த்து விட்டு காலையில் தான் வாசலில் நின்று கொண்டு இருந்தார் ,, அதற்குள் எப்படி என்று வியந்தனர்.

சிலர், நேற்று  தான் பேத்தியை கடைக்கு கூட்டி சென்று மிட்டாய் வாங்கி கொடுத்தாரே..இன்று இப்படி படுத்துட்டாரே !! என்றனர்!!.  மொத்தத்தில்
மந்திரம் மாயாஜாலம் போல திடீர் என்று அப்பா கானாமல் போனது 
போன்ற உணர்வு  தான் எனக்கு இன்றும்.!!!

எவ்வளவு ஆசை ஆசையாக புது வருடத்தை கொண்டாடுவோமா ..1994
பிறகு புது வருடம் என்றால் அப்பா ஞாபகம் மட்டுமே..மிஞ்சியது.
இந்த வருடம் அதே நாள் அதே கிழமை வந்ததால் ...அந்த நாள் ஞாபகம் 
அப்படியே கண் முன் தோன்றி அன்றைய சம்பவங்கள் யாவும் பசுமையாக  
படம் போல் மனதில் ஓடி மறைந்தது..அதனால் தான் இந்த பதிவு.நன்றி.

அப்பாவும் நானும் விரும்பி கேட்கிற பாடல் இது :


7 கருத்துகள் :

  1. என்னப்பா, இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க? ரொம்ப வருத்தமாயிருக்கு.

    பதிலளிநீக்கு
  2. நிறைய நேரங்களில் உண்மை என்ற ஒன்று நம்மை இப்படித்தான் திக்கி திணற வைக்கும்.இதுவும் மாறும் என்ற நிதர்சனமே நம்மக்கு மிச்சம் உள்ளது. இது எல்லோர்க்கும் வாய்த்ததுதான் சகோதரியே !
    உங்கள் நினைவில் ,அன்பில் அவர் என்றும் வாழ்கிறார்.

    பதிலளிநீக்கு
  3. நான் என்னவென்று சொல்லுவேன் சகோதரி?
    எல்லாம் விதி..

    பதிலளிநீக்கு
  4. உண்மை என்ற ஒன்று நம்மை இப்படித்தான் திக்கி திணற வைக்கும்!!!
    மிக சரியாக சொன்னீர்கள் சகோதரர்.
    தங்கள் கருத்துக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  5. இதே உணர்வு எங்களுக்கும் ஜனவரி 5ல்
    6ம் வகுப்பு மாணவி பருவம்,மதிய இடைவேளையில் அம்மாவை வீட்டுக்கு வந்து அம்மாவை ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்போடு பார்த்து விட்டு அடுத்த 2 மணி நேரத்தில் அம்மாவின் மரணச்செய்தி பள்ளியிலிருந்து எங்களை இழுத்து வந்தது.
    உங்கள் துக்கத்தில் பங்கேற்கிறேன்
    இன்றோடு 50 ஆண்டுகள் பூர்த்தியாகியும் வலி குறையாத காயம்

    பதிலளிநீக்கு
  6. தங்களுக்கும் என்னை போல
    துக்கமா சகோதரி ? அம்மா
    ஆத்மா சாந்தி அடைய
    வேண்டுவோம்.நன்றி !

    பதிலளிநீக்கு
  7. கீதா வருடங்கள் கடந்தாலும் உங்கள் நினைவை விட்டு கண்டிப்பாக இந்த நினைப்பு மாறாது, தீடீரென இப்படி என்றால் ஷாக்காக தானே இருக்கும்.
    எதுவும் நம் கையில் இல்லை.

    பதிலளிநீக்கு

welcome