வெள்ளி, செப்டம்பர் 24, 2010

டாம்பீகம்


சமீபத்தில் எனக்கு தெரிந்த குடும்ப நண்பர் மிடில் கிளாஸ்
பாமிலி ,தன் கௌரவத்துக்காகவே வாழ்பவர் !!
தன் மனைவி சொல் மந்திரம் என்று வட்டிக்கு கடன் வாங்கி
தன் மகளுக்கு பெரும் பணக் காரர் போல் செலவு செய்து
வாழ்கையை தொலைத்தார்.முடிவில் கடன் தொல்லை
தாங்காமல் .தற்கொலை செய்து கொண்டார்.இவர் பட்ட
கடனை இன்று வரை இவரின் மகன் கட்ட முடியாமல்
திணறி கொண்டு இருக்கிறார்.டாம்பீகம் தேவையானதா? 

வறட்டு கௌரவத்துக்கு இன்று நிறைய பேர் தங்களை
அடிமையாக்கி சந்தோசத்தை தொலைக்கின்றனர்!!
பணத்தை தங்கள் கெளரவத்துக்காக விரயம் செய்கின்றனர்


பணம் + ஆடம்பரம் =  அழிவு !!

பணம் பத்தும் செய்யும்..
பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் .
பணத்தை சம்பாதிப்பது கஷ்டம்.
அதை பாதுகாப்பது அதை விட கஷ்டம் .

  
இன்று பல கல்யாண விருந்துகளில் ஐம்பது வகை காய் கறி
ஐட்டம் படைக்கிறார்கள்.முகத்தில் அடித்தது போன்று அதை
இலையோடு சுருட்டி குப்பை கூடையில் எறிகிறார்கள்.!!
சில அமைப்புகள் மீந்து போன உ னவுகளை எடுத்து சென்று
ஒரு வேலை உணவு கூட இல்லாத ஏழை மக்களுக்கு சேர்க்கிறார்கள்.  

என் உறவுகார பெண் பெரிய மனுஷி ஆனவுடன் , ஊரை கூட்டி கல்யாணம்
போல மண்டபம் பிடித்து தங்கள் கௌரவத்தை காப்பாற்ற இதை விமர்சையாக
கொண்டாடி மகிழ்ந்தனராம்.. அநைவரும் மூக்கில் விரல் வைத்து வியந்தனராம் .
இதில் என்ன பெருமை ?யோசிபார்களா? அதற்கான செலவை அந்த பெண்
பெயருக்கு FD , டப்பாசிட் செய்து இருந்தால் அதோட வருங்காலத்துக்கு
உதவும்.அல்லது தங்க நாணயம் வாங்கி வைத்தால் , அவள் திருமணத்துக்கு
உதவும். ஒரு நாள் கூத்துக்கு இது தேவையா !! சிந்திக்கணும் ..  


இன்றும் பல வீடுகளில் பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளின் வருமானத்தை
பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் இந்த மாதிரி டாம்பிக செலவுகளை
செய்ய வர்ப்புறுத்தும் போது தான் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது.

அந்த காலத்தில் வீட்டில் தலைவன் சம்பாதித்தால் போதும்..ஆனால்
இன்று உள்ள பொருளாதார இக்கட்டான நிலையில் தலைவி ,
மகன் ,மகள் என்று அனைவரும் சம்பாதிக்க வேண்டியது  அவசியம் .

விசேஷம் கொண்டாடுவதில் கஞ்சத்தனம் வேண்ட்டாம் .ஆனால்
அது அவசியமா ..நம் விரலுக்கு ஏற்ற வீக்கம் தானா என்று ஒன்றுக்கு
இரண்டு முறை யோசித்து முடிவு எடுக்க வேண்டும்.

அடுத்து தனக்கு மிஞ்சினது தான் தானம் !! வறட்டு கௌரவத்தால்
நாம் தான் நஷ்டம் அடைய வேண்டும்.சரியாக புரிந்து நடக்கா
விட்டால்,வாழ்க்கை நரகம் ஆகி விடும்.தகுதிக்கு மீறிய செலவு 
நரகதில் தள்ளி விடும்.நமக்காக வாழ்வதே வாழ்கை.. பிறருக்காக
வாழ்வது வாழ்க்கயே இல்லை. இன்று மற்றவர் நிழலில்
குளிர் காய்கின்ற சந்தர்ப வாதிகள்   பலர் இருகின்றனர்.

உறவுகளை மதிக்க வேண்டியது கடமை தான்.அதற்காக
அவர்கள் சொல்வதை  எல்லாம் எடுத்து கொள்ளாமல்
எது சாத்தியாமோ அதை மட்டும் கவனத்தில் கொள்ள
வேண்டும்..நடை முறை படுத்த வேன்டும்..
அது போல் பட்டாசு தீபாவளி போது வெடிப்பதில் தான்
எத்தனை போட்டி?யார் அதிகமாக வாங்கி வெடிக்கிரார்கள்
என்று மாற்றி மாற்றி வாங்கி வெடித்து காசை கரி
ஆக்குபவ்ர்களும் உண்டு. நொடியில் சாம்பலாகி
போவதில் காசை கொட்டுவதில் என்ன பயன்.
இல்லா தவர்களுக்கு தந்து உதவலாமே.


இதை விட கொடுமை அயல்நாட்டில் பிழைப்பு தேடி செல்லும் 
குடும்ப தலைவனது நிலைமை பற்றி சொல்வது கடினம்.
மற்ற வர்களுகாக தங்களை மெழுகு வர்த்திகளாக மாற்றி 
தியாகங்கள் செய்து உறவுகளை திருப்தி படுத்துவதற்குள் 
இவருடைய வாழ்க்கையின் பெரும் பகுதி முடிந்து இருக்கும்.
தங்களுக்கு என்று எதுவும் செய்து கொள்லாமல் தங்கள் 
குடும்பம் மற்றும் மனைவி,பிள்ளைகள் என்று பார்க்க  கூட 
நேரம் இல்லாமல் ஓடி கொண்டே இருக்க வேண்டியது தான்,   

 .
    அன்றாட வாழ்கையில் சிக்கனம் வேண்டாம்..

அதே நேரம் தேவை இல்லாததை தவிர்கலாமே?
கடைசியாக ஒன்று ..ஒரு ரூபாய் என்றாலும் கணக்கு 
எழதுங்கள் !!அபோது தான் பணத்தின் அருமை தெரியும்

2 கருத்துகள் :

 1. மிகவும் பயனுள்ள பதிவு. ஆனால் நடைமுறையில் பலர் இதை கடைப்பிடிப்பதில்லை. காரணம்-விவேகமில்லாததுதான். தன்னுடைய பொருளாதாரத்தில் என்ன செய்யமுடியும் என்கிற தெளிவு இல்லாமல் சொல்வார் பேச்சையெல்லாம் கேட்டு, கெட்டுப் போகிறவர்கள் அநேகம்.

  பதிலளிநீக்கு
 2. ஆமாம் சார்.சரியா சொன்னீங்க.
  வருகைக்கு நன்றி !
  மீண்டும் வந்து கருத்து
  சொல்லுங்கள் ...

  பதிலளிநீக்கு

welcome