இன்று கிருஷ்ண ஜெயந்தி !
வசுதேவர், தேவகி தம்பதியினருக்கு எட்டாவது குழந்தையாக
மதுராவில் கிருஷ்ணர் பிறந்தார். கொடுமைக்கார அரசனான
இவரது மாமன் கம்சனிடமிருந்து காப்பதற்காக இவர் பிறந்த
நாளன்றே இவரை வசுதேவர் யமுனைக்குஅப்பால் இருந்த
பிருந்தாவனத்தில் யாதவ குலத்தினரான நந்தகோபர்,
யசோதையிடம் ஒப்படைத்தார். குழல் ஊதி, மாடுமேய்த்து,
நண்பர்களுடன் விளையாடி, வெண்ணெய் திருடி குறும்புத்தனம்
செய்து காலத்தைக் கழித்த கிருஷ்ணன் பிருந்தாவனத்தின்
செல்லப் பிள்ளையானார். மேலும், இவரை தாக்க கம்சனால்
ஏவப்பட்டு வந்த கொடிய அசுரர்களையும் வதம் செய்தார்.
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடந்த
குருட்சேத்திரப் போரில் தனது சேனையை கௌரவரர்களிடம்
கொடுத்துவிட்டு தான் அர்ஜூனனின் தேரோட்டியாக பணிபுரிந்தார்.
இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அர்ஜூனனிடம் மேற்கொண்ட
உரையாடலே பகவத் கீதை ஆனது.
கிருஷ்ண ஜெயந்தி ஆண்டுதோறும் கிருஷ்ணரின்
பிறப்பைக் கொண்டாடுகிற இந்து சமய விழாவாகும்.
ஆவணி மாதத்தில் தேய்பிறையின் எட்டாம் நிலையில்
(அட்டமி)ரோகிணி நட்சத்திரம்சேர்ந்த நாள் இவ்விழா
நிகழ்கிறது. கோகுலாஷ்டமி என்று தென்னிந்தியாவிலும்,
அஷ்டமி ரோகிணி என்று கேரளாவிலும் போன்ற
பெயர்களாலும் இவ்விழா குறிக்கப்படுகிறது
திருமாலின் பத்து அவதாரங்கள் லில்
கிருஷ்ணர் அவதாரமும் ஒன்று!
கிருஷ்ணர் சேது தரிசனம் பற்றிய slide ஷோ காண
click here to download!!
கீத் ..!! பொதுவா கிருஷனன் சம்பந்தப்பட்ட எல்லா பாட்டுமே கேக்க ரசிக்க நல்லா இருக்கும் அதுவும் திரை இசையில ,, நீங்க பிடிச்ச ரெண்டு பாட்டும் அதில் அடங்கும் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.. :-))
thanks
பதிலளிநீக்குவணக்கம்,
பதிலளிநீக்குகண்ணன் பிறந்த நாள் செய்தி மற்றும் பாடல் அருமை.உங்கள் தளமும்
அருமை.
nandri Vaidehi!!
பதிலளிநீக்குU R Welcome!!