வெள்ளி, ஆகஸ்ட் 20, 2010

வரலக்ஷ்மி விரதம்
இன்று  வரலக்ஷ்மி விரதம் !!
ஐந்து முகம் தீபம் ஏற்றி வாழை மரம் வைத்து 
மண்டபம் அமைத்து லட்சுமிக்கு பிடித்தமான 
சந்தனத்தால் செய்யப்பட்ட லட்சுமியின் 
முக உருவம் அல்லது வெள்ளியால் ஆன 
வரலட்சுமி சிலையை வைத்தும் பூஜிக்கலாம்.
 தாழம்பூ மற்றும் மலர்களால் லட்சுமியை 
அலங்கரிக்க வேண்டும். சிலை முன் வாழை 
இலை விரித்து, அதில் ஒரு படி பச்சரிசியை பரப்பி, 
அதன் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பழங்கள் 
படைக்க வேண்டும். சிலைக்கு மஞ்சள் நிற புதிய ஆடை
 அணிவித்து, பச்சரிசியின் மீது ஒரு கும்பம் வைத்து, 
அதில் புனித நீர் நிரப்ப வேண்டும். கும்பத்தில் சந்தனம், 
குங்குமம் வைத்து மாவிலையால் சுற்றி அலங்கரிக்க 
வேண்டும். வசதிக்கு ஏற்ப மோதகம், அப்பம், வடை, 
பொங்கல் போன்ற நைவேத்தியம் வைத்து மஞ்சள் 
கயிறுகளையும் பூஜையில் வைக்க வேண்டும். கணேச 
பூஜையும், கும்ப பூஜையும், லட்சுமி பூஜையும் 
செய்து அஷ்டலட்சுமிக்கு மிகவும் இஷ்டமான 
அருகம்புல்லால் அர்ச்சனை செய்து தீபாராதனை 
செய்ய வேண்டும். பூஜைக்கு பின் வீட்டுக்கு வந்திருக்கும் 
பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம் 
கொடுத்து உபசரிக்க வேண்டும். பூஜையில் வைக்கப்பட்ட 
மஞ்சள் கயிறை மந்திரங்கள் முழங்க வலது கையில் 
தானும் கட்டி,மற்ற பெண்களுக்கும் கட்ட வேண்டும். 
இந்த வழிபாட்டுக்கு பின், பெண்கள் விரதத்தை முடித்து 
சாப்பிட வேண்டும். பூஜைக்கு பின், ஒரு நல்ல நாளில் 
சந்தனத்தால் ஆன வரலட்சுமி உருவத்தை ஆறு, 
குளம் போன்ற நல்ல நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். 
இந்த விரதத்தால் மாங்கல்ய பலமும், மங்களமும், நீண்ட 
ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும். திருமணம் 
ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். அஷ்ட 
ஐஸ்வர்யங்கள் சேரும். கணவன், குழந்தைகளுக்கு 
நன்மை கிட்டும். மகாலட்சுமி வீட்டில் வாசம்
 செய்வாள். வரலட்சுமி பூஜையின் போது லட்சுமி 
ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி 
ஸ்தோத்திரம் போன்ற ஸ்தோத்திரம் படிப்பது மிகச் 
சிறப்பு!இந்த  சுமங்கலி பூஜையை அனைவரும் செய்யலாம். 
மகாலட்சுமி அருள் பெறலாம் ..

மங்கள பொருட்கள் தாம்பூலம்
 (சுமங்கலி பெண்கள் 5 ,)
வெற்றிலை ,பாக்கு
பூ,பழம் ,மஞ்சள் ,  கண்ணாடி வலையல்
ஜாக்கட் பீஸ் ,தேங்காய்,கண்ணாடி ,
மஞ்சள் கயறு ,பிரசாதம் குங்கும சிமிழ்,தட்டு . 
லக்ஷ்மி அஸ்டோத்தரம்


4 கருத்துகள் :

 1. Great Holi and big sentimental day for women..!!! one good thing.. atleast this day, all Wifes show good respect, love and affection to her MR...? very much appreciable..!
  HAPPY VARALAKSHMI DAY.. TO ALL WOMEN

  பதிலளிநீக்கு
 2. //பூஜைக்கு பின் வீட்டுக்கு வந்திருக்கும்
  பெண்களுக்கு மஞ்சள் கயிறு, தேங்காய், குங்குமம்
  கொடுத்து உபசரிக்க வேண்டும்//

  அவங்க , அவங்க வீட்டில செய்ய மாட்டாங்களா..?

  பதிலளிநீக்கு
 3. வாங்க முத்து ,
  வரலட்சுமி விரதம் அன்று மட்டும் இல்லை
  என்றும் நாங்க எங்கள் வீட்டு காரருக்கு மரியாதை
  கொடுப்போம்.. இவிக தான் புரிஞ்சிக்காம டோர்செர்
  பன்னுராக. .உங்க வீட்ல எப் பூடி?உங்க mrs , ??

  பதிலளிநீக்கு
 4. என்ன ஜெய் லானி மறுபடியும் சந்தேகமா?
  ஐயோடா ..சரி சரி சொல்றேன் !!அவங்க
  வீட்ல செய்வாக, அதே மாதிரி அவங்களும்
  மத்தவங்க வீட்ல பெற்று கொள்வார்கள் !
  மங்கள பொருள்கள் நாம் கொடுத்தால் நம்
  குடும்பத்தில் கணவன்மார்கள் சிறப்பாக
  இருப்பார்கள் ,அது போல் மற்றவர்கள் நமக்கு
  தந்து அவர்களும் புன்னியம் அடைவார்கள்.ok?

  பதிலளிநீக்கு

welcome