திங்கள், ஜூலை 12, 2010

அது ஒரு கனா காலம் !!

மனம்   விரும்புதே ...

அது ஒரு கனா காலம் !!





















சமீபத்தில் பேல் பூரி,மசால் பூரி சாப்பிட என் மகளுடன்

சென்றேன் . பேல் பூரி என்கிற பெயரில் சாம்பார் சாதம்

போல் ஒன்று தந்தார்கள்.சரி மசால்  பொரி ட்ரை பண்லாம் 

என்று சென்றால் , பதத்து நமுத்து போன ஒன்றை தந்து

மசால் பூரி சாப்பிடும் அசை போய் விட்டது.!!

நான் எத்திராஜில் படிக்கும் காலத்தில் பேல் பூரி சாபிட்டது

இன்று நினைத்தாலும் மனதுக்கு இனிமையாக உள்ளது..

பௌண்டன்   பிளாசா இதற்காகவே செல்வோம். !!

சுட சுட ஆவி பறக்க வெங்காயம் நிறைய வேண்டும்

என்பவருக்கு பொடி யாக அழகாக கலர்புள் ஆக துவி

டிஸ்ப்ளே பன்னி இருப்பார்கள்.. வெறும் மூன்று ரூபாய்கு.

இன்று நினைத்தாலும் மனம் பரவசம் கொள்ளும். 

அதற்கு பிறகு வேறு எங்கும் அத்தனை சுவையுடன்

பேல் பூரி கிடைக்க வில்லை. வீட்டில் மட்டும் ட்ரை பன்னுவேன் .

மசால் பொரி:

மசால் பொரி தாளிக்கும் போது ஒரு வாசனை வரும் ..

அதன் சுவையே தனி. பல இடங்களில், கார சட்னி

சேர்த்து பொரி நமுத்து விடு கிறது. சுவை கெட்டு விடுகிறேது .

இதோ நான் தயார் செய்யும் பொரி :

வெள்ளை  பொரி :ஒரு பாகெட்

வேர்கடலை :   நூறு ௦ கிராம் ௦

பூண்டு 15 ,பல்

பச்சை அல்லது வர மிளகாய் :2 ,

சீரகம் : ஒரு டி ஸ்பூன்

மிளகு தூள் :ஒரு டி ஸ்பூன்

கருவேப்பிலை சிறிது

தேங்காய் எண்ணை: நான்கு ஸ்பூன்

கடுகு சிறிது , உப்பு தேவைக்கு ஏற்ப !


























அடுப்பில் வாணலியை வைத்து தேங்காய் எண்ணை ஊற்றி

காய்ந்ததும் கடுகு வரமிளகாய் தாளித்து , பூண்டு, சீரகம்,

கருவபிலை போட்டு சிறிது மஞ்சள் தூள், மிளகு தூள் சேர்த்து

கடலை போட்டு மிதமான நெருப்பில் பதமாக வறுத்து, அடுப்பை

நிறுத்தி , பிறகு பொரி மற்றும் உப்பு கலந்து சட்டியை ஒரு கிளறு கிளறி

நன்றாக  பிடித்து ஒரு முறை மீண்டும் கிழ்லே இருந்து மேலாக கிளறவும்.





















எங்கள் பாட்டி காலத்தில் மழை காலங்ககளில் அரிசி   ஊற   வைத்து

அடுப்பில் சட்டியில் வைத்து பொரித்து பொரி அரிசி என்று தருவார்.

நன்றி.

8 கருத்துகள் :

  1. உண்மை தான் கீதா...அது எல்லாம் மலரும் நினைவுகள்...அதனை இங்கே எதிர்பார்க்க முடியவில்லை...அருமையான மசாலா பொரி...

    பதிலளிநீக்கு
  2. பௌண்டைன் பிளாசா எக்மோரில், கீழ் தளத்தில் அந்த சிறிய பிள்ளையார் கோயில் பக்கம் பின்புறமாக உள்ள வட இந்திய கடையை சொல்கிறீர்களா.

    நான் அந்த கட்டடம் சில சமயங்களில் போவேன், இது வரை சாப்பிட்டது இல்லை.

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...படத்தை பார்த்ததும் சாப்பிடும் ஆசை எனக்கு வந்துடுச்சி.

    பதிலளிநீக்கு
  4. GEETHA ACHAL மேடம் வாங்க! மிக சரியா சொன்னிங்க.
    அது எல்லாம் மலரும் நினைவுகள் என்று.,இன்று
    நினைத்து அசை போட்டாலும் அந்த நாட்கள்
    மனதுக்கு இனிமையாக இருக்கு. நன்றி !

    பதிலளிநீக்கு
  5. ராம்ஜி_யாஹூ நீங்கள் சொல்லும் இடம் தான் ..

    கரெக்ட்.. ஆனால் இப்போ எப்படினு தெரியலே.!

    ரொம்ப வருஷம் ஆச்சு ! இது போல் luz corner

    ராயர் கபே , ரவா தோசைகு ! பிரபலம்.

    நீங்களும் சாப்பிட்டு பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஜெய்லானி உங்க ஊரில் கிடைக்குமானு தெரியலே .

    ஓகே டோன்ட் வொர்ரி உங்களுக்கு பார்சல் பண்ண

    சொல்கிரேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  7. மிக சரியாக சொனிர்கள்..? இப்ப கடைகளில் தருவது வீட்டில் மீண்டு போன சாம்பார் சாதம் போல் உள்ளது..! நம் இள்ளமை பருவத்தில் உண்டு மகிழ்ந்ட உண்ணவுகளை இன்றைய இளசுகள் மிஸ் பண்ணுவது நினத்தால் பாவமாக உள்ளது.. பாஸ்ட் பூட் என கண்டதை சாப்பிடுவது வருத்தம்தான் ..!! அது சரி மேடம் நீங்கள் உணவு வகைகளில் அல்லதி பிரியரோ...? நன்றாக சமைக்கவ ? சாபிடுவதிலா >> கோபிக்க வேண்டாம் ..!! நட்பாக ஒரு தமாஷ் ..! இளமை நாட்களை நினைக்க வைத்ததுக்கு நன்றி .

    பதிலளிநீக்கு
  8. வாங்க முத்து..
    நமக்கும சமையலுக்கும் ரொம்ப தூரம்கோ
    சுவைப்பதில் தான் அலாதி திருப்தி. எங்க
    வீட்டுகாரர் ரொம்ப அருமையா சமைப்பார் கோ..
    அவர் சொல்லி தந்தது தான் இந்த பொரி சமாசாரம்.
    நன்றி!!

    பதிலளிநீக்கு

welcome