வெள்ளி, மே 14, 2010

புண்ணியத்தை தேடி ....
அட்சய திதி வருகிறது!

பொண் நகைகள், வைர ஆபரனங்கள் ,ஆடைகள் ,

பொருள்கள் வாங்கினால் .. அந்த வருடம் முழுவதும்  

அனைத்தும் பெருகும் ! என்று நகை கடைகளில் கூட்டம்

அலைமோதும். இதை விட இந்த அட்சய திதி அன்று

ஒரு வேலை கூட சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படும் 

நலிந்தோருக்கு , உங்களால் முடிந்த , இயன்ற உதவிகளை 

பணமாக அல்லது பொருளாக, உணவாக ஏதாவது ஒரு வழியில் 

அன்று கொடுத்து உதவுங்கள். அவர்கள் மனம் குளிர்ந்து 

உங்களை வாழ்த்துவார்கள் ! அது உங்கள் சந்ததிகளுக்கு 

வாழ்த்துவதற்கு வழி வகுக்கும். . உங்கள் செல்வங்கள் 

 ஏதாவது ஒரு வகையில் நிச்சயம் ! பெருகும்.

இந்த நேரத்தில் நம் வீட்டில் நமக்காக வேலை செய்யும் 

உதவியாளர்களை மறக்காமல் , அவர்களுக்கும் நம்மால்

முடிந்த அளவு எதாவது செய்து உதவ வேண்டும். 

அவர்களும் நம்மை வாழ்த்துவார்கள். கர்ணன் போல் 

கொடை வள்ளல் . ஆக இல்லாவிட்டாலும் , கடுகு அளவு

நாம் செய்யும் சிறு உதவிகள் நம்மை காக்கும். நம் பிள்ளைகளுக்கு

புண்ணியத்தை சேர்க்கும். அதனால் அட்சய திதி அன்று  வாருங்கள் 

நம்மால் இயன்ற  உதவிகளை முடிந்த வரை  செய்து புண்ணியத்தை

பெறுவோம். !!!  வளமுடன் வாழ்வோம் ...! 2 கருத்துகள் :

  1. இப்ப சொன்னீங்களே இது சூப்பர். நகை வாங்குவதில் என்ன இருக்கிறது. ஒரு வேளை இல்லாதவருக்கு உணவிட்டால் அவர்கள் தரும் மனம் குளிர்ந்த வாழ்த்து நம் சந்ததி முழுவதுக்கும் போதுமே!!!

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் !
    மனம் குளிர்ந்த வாழ்த்து நம் சந்ததி முழுவதுக்கும் போதுமே!!!
    நன்றி மீண்டும் வருக.

    பதிலளிநீக்கு

welcome