சனி, ஏப்ரல் 17, 2010

டென்சன்












டென்சன் 

சிறுவர் முதல் பெரியவர் வரை இன்று டென்சன் 
ஆட்டி படைக்கிறது ! கரணம் இல்லாமல் கோபம்
வருகிறது. அதை யார் மீதாவது திசைதிருப்புவது..
இதில் வெல்ல என்ன செய்ய வேண்டும்? 
டென்சன்  பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. .எனவே டென்சன்   எதனால் உண்டாகிறது, ?


சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோஅவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும்பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும்குழந்தைகளை மட்டம் தட்டிகேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேசபழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல்மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கிபயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால்வளர்ந்தபின்பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில்நான்கு பேருடன் பேசவோவெளியில் செல்லவோ நேர்கையில் டென்சன் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோதமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வதுசிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு உண்டாக்கும்.
அதேபோல்சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள்பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டிமட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள்பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும்குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல்உடல் வியர்த்தல்புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கிஇவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது.



நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும்எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள்  தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத்   திருப்புங்கள். 


ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்க உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்னஎந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் டென்சன்  தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும்இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.


உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). 
 வேகமாக ஓட வல்லவராசமையலில் திறமைசாலியாபிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவராஎன்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.
நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்னஇதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் நம்பிகையுடன் சொல்லுங்கள்.


காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில்நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள்உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன்சிறியதோ பெரியதோஉங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.


எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop'   என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும்வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.
தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும்மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம்யோகாபிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றனஅவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.


கூல் இந்த மாமந்திரம் டென்சனுக்கு மிகவும் அவசியம் !

5 கருத்துகள் :

  1. //சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது.//

    இது கரெக்ட் .இல்லாட்டி முதல் கோணல் முற்றும் கோணல் மாதிரி ஆகிவிடும்

    பதிலளிநீக்கு
  2. good and useful article; intial efforts might be tough. but it can be definetly followable. This is not only good for us but it would lead and show a good path to the youngers.
    KEEP IT UP MADAM..!
    --MUTHU--

    பதிலளிநீக்கு
  3. ஜெய்லானி.muthukumar
    நன்றி தங்கள் வருகைக்கு.

    பதிலளிநீக்கு
  4. very useful article.nicely written.

    பதிலளிநீக்கு

welcome