உஷ் அபப்பபா என்ன வெயில்..
இந்த மண்டையை பிளக்கும் வெயிலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
இதோ சில ஆலோசனை!!
வெளியில் போவது என்றால் ஒரே ட்ரிப்பில் எங்கு எங்கு செல்ல
வேண்டும் என்று முன்பே பட்டியல் போட்டு கொள்ளவும் .
மறக்காமல் தண்ணீர் பாட்டில் எடுத்து செல்லுங்கள்.
தாகமாக இருக்கு என்று கடையில் செயற்கை பானங்களை
குறிப்பாக கலர்புல்லாக உள்ள ட்ரிங்சை குடிகாதீர்கள் !
பின் விளைவுகள் உண்டு .. ஜாக்கிரதை !
லைம் ஜூஸ், மற்றும் பிரெஷ் ஜூஸ் சாப்பிடுங்கள்.
அதுவும் தரமான தண்ணீரில் தருகிறார்களா என்று உஷாராக
இருங்கள். இப்பொழுது கரண்ட் வேறு அடிக்கடி கட் ஆகுது ..
ஐஸ் கிரீம் மெல்ட் ஆகி இருக்கும். அதனால் தவிர்க்கவும்.
கோடை ஜலதோஷம் ஏற்பட வாய்புகள் அதிகம்.
இதோ ஜில் ஜில் டிப்ஸ் உங்களுக்காக..
இயற்கை ஜூஸ்புதினா இலை ஒரு கைப்பிடி , தோல் சீவிய இஞ்சி ஒரு துண்டு ,எலுமிச்சை -1 , தேன் 5 ஸ்பூன் , இளநீர் அல்லது தண்ணீர். - 2 . டம்ளர்
புதினா சுத்தம் செய்து இஞ்சியுடன் சேர்த்து நைசாக அரைத்துகொள்ளவும் இதை வடிகட்டி , எலுமிச்சை சாறு, உப்பு, தேன்சேர்த்து இளநீருடன் பருகவும் !.இந்த வெயிலில் வியர்வையால் இழக்கும் தாது சத்துகளைமீட்டு தரும் . தலை சுற்றல் , அஜீரண கோளாறுகளை நீக்கும்.---------------------------------------------------------------------------------------------------------
நீராகாரம்இரவு சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விடுங்கள் .காலையில் சாதத்தை நன்கு மோர் விட்டு கரைத்துபொடியாக வெட்டிய சின்ன வெங்காயம், கருவபில்லைகொத்தமல்லி ,இஞ்சி ,போட்டு கலக்கவும். பருகவும்.!!இது பழய கால ட்ரிங்க்ஸ் என்றாலும்.. கோடை வெயிலின் உடல்சூட்டை குறைக்கும். யூரினரி இன்பெக்சன்ஸ் வராது.---------------------------------------------------------------------------------------------------------
பானகம்புளி ௦௦ நூறு ௦௦ கிராம் ,வெல்லம் 2oo கிராம் ,சுக்கு, ஏலக்காய் சிறிது.புளி தண்ணீரில் வெல்லதை கெட்டியாக கரைத்து கொளவும்இதில் சுக்கு,ஏலக்காய் சேர்த்து ,தண்ணீர் கலந்து வைத்து பருகலாம் .இது சக்தி தரும் ட்ரிங்க் குளிர்ச்சி யானதும் கூட ..
கொளுத்தும் கோடையை கூலாக கொண்டாடுங்க!
நன்றி. நன்றி..
பதிலளிநீக்குநல்ல டிப்ஸ் தோழி, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குthanks Sasi!
பதிலளிநீக்குU r welcome.