ஞாயிறு, மார்ச் 21, 2010

இளமை


















இளமை

நாம் எப்படி இருக்கிறோம் என்பது முக்கியம் இல்லை.


இளமை என்பது மனதில் மட்டும் கிடையாது. நம்


தோற்றத்திலும் கூட...ஆள் பாதி ஆடை பாதி ஏற்ப


நாம் எல்லாவற்றிலும் இருக்க வேண்டும்,


மனதை இளமையாக வைத்துக்கொண்டால்


உடலில் முதுமை தோன்றாது . நிம்மதியாக, சுறுசுறுப்பாக ,


வாழ்வில் மன நிறைவோடு, இயற்கை உணவு முறைகளை


கடை பிடித்து ,கோபம் அகற்றி பொறுமை காத்து ,சிரித்த


முகத்தோடு, இன்பத்தையும் துன்பத்தையும் ஒரே மாதிரி


ஏற்று கொள்ளும் பக்குவத்தோடு வாழ்ந்தால் மனது


இளமையாக எப்போதும் இருக்கும்.


பிறகு என்ன வாழ்வின் இறுதி நாள் வரை இளமை தான்.

நடுத்தர வயது ஆரம்பம் எப்போது தெரியுமா?


லண்டன் : சராசரியாக ஒரு மனிதனின் நடுத்தர


வயது, 35ல் துவங்கி 58ல் முடிவடைவதாக லண்டனில்


மேற்கொள்ளப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.


மனிதர்களின் வாழ்க்கை இளம் வயது, நடுத்தர வயது, முதுமை


என மூன்றாக பிரிக்கப்படுகிறது. இந்த மூன்று பருவங்களின்


வயது கணக்கீடு நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகிறது.


போர்ச்சுகீசியர்கள் 29 வயது வரை இளம் பருவமாகவும்,


51 வயதானதும் கிழவராகவும் கருதுகின்றனர்.


சைப்ரஸ் நாட்டினர் 45 வயது வரை இளைஞராக நினைக்கின்றனர்.


பெல்ஜியம் நாட்டவர் 64 வயதில் தான் முதுமை பருவம்


துவங்குகிறது என கணக்கிடுகின்றனர்.


பிரிட்டனை பொறுத்தவரை இளம் பருவம் 35 வயதில் முடிகிறது.


வயோதிகம் 58ல் ஆரம்பிக்கிறது. 15 வயது முதல் 24 வயது வரை


இளம் பருவமாக கருதப்படுகிறது.


ஐரோப்பா முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களிடம்


எடுக்கப்பட்ட ஆய்வில் பிரிட்டனில் மேற்கொள்ளப்படும் கணக்கு


தான் சரி என்கின்றனர்.


இன்னும் சிலர் 28 வயது வரை இளம் பருவம் என்றும் 54 வயது


வரை நடுத்தர பருவம் என்றும் 67 வயதில் முதுமை தோன்றுகிறது


என்கின்றனர்.


பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுனுக்கு 59 வயதாகிறது.


சமீபத்தில் 'தி ஹர்ட் லாக்கர்' படத்துக்காக ஆஸ்கார் விருது


பெற்ற இயக்குனர் காத்ரீன் பிக்கிலோவுக்கு 58 வயதாகிறது.


இவர்கள் இன்னும் இளமையாக தான் உள்ளனர்.


இவர்களின் உருவத்தை வைத்து வயதை எடை போடமுடியாது


என சிலர் கூறுகின்றனர்.


இன்னும் சிலர் இளமையாக தோன்றுபவர்களை நக்கல்

செய்கிறார்கள்!உங்களால் முடியாததை மற்றொருவர் செய்தால்

பரிகாசம் செய்யாதீர்கள். நல்ல தேக ஆரோக்யத்துடனும் நல்ல

தூய்மையான கவலையற்ற மனதுடனும்,சுறுசுறுப்பாகவும்

உள்ளவர்கள் தங்களது வாழ் நாளில் பெரும்

பகுதியில் என்றும் இளைமையாகவும் சிரஞ்சீவியாகவும்

இருப்பார்கள்

பாராட்டாவிட்டாலும் பரவா இல்லை. Discourage செய்யாதீர்கள்

ப்ளீஸ்!  அதனால் தோற்றத்தை கண்டு ஒருவரை எளிதாக எடை

போட வேண்டாம் அனைவரையும் மதிப்போம் !

உற்சாகபடுத்துவோம் !!




 






2 கருத்துகள் :

welcome