வியாழன், பிப்ரவரி 18, 2010

உழைப்பு

உழைக்காத வாழ்க்கை  நிலைக்காது !!


ஒருத்தரோட உழைப்புல மற்றொருத்தர் ஒட்டு உண்ணிகளாக

வாழ்தல் வாழ்க்கை அல்ல..நம் உழைப்பால் கிடைக்கும் பணத்தை

மனதார செலவு செய்யும் போது அதன் மகிழ்ச்சியே தனி தான்.

அப்ப தான் காசின் அருமை தெரியும் ! ஒவ்வோன்றும் நம் உழைப்பில்

வந்தது என்று அதை கவனமாக யோசித்து தேவையா? என்று பார்த்து

செலவு செய்வோம். ! ஒரு நிக்ழ்ச்சி என்னை மிகவும் சிந்திக்க வைத்தது,.

சமீபத்தில் எனக்கு வீட்டு வேலை செய்து உதவும் அம்மா அறுபது

வயதை கடந்தவர்   வேலை முடித்து விட்டு அவசரமாக கிளம்பினார் .

என்ன அவசரம் என்று கேட்டேன் ..நான் இப்ப போய் கட்டிட வேலைக்கு

சென்றால் 200 ரூபாய்  தருவார்கள் .எனக்கும் வீட்டுக்கு போய் சும்மா

இருப்பதற்கு, சித்தாள் வேலைக்கு போய் வந்தால் என் கை செலவுக்கு

ஆகுமே ..என்று கூறி என்னை அசர வைத்தார்!!   அந்த பணத்தில்

அன்றைக்கு தேவையான மளிகை மற்றும் சாமான் காய் கறி  வாங்கி

அதனை சமைத்து தானும் தன் பேத்திகளும் சாபிட்டு விட்டு, நிம்மதியாக

உறங்கி , மறு நாள் உற்சாகமாக வேலைக்கு வந்தார். அப்போது தான்

புரிந்தது அவரின் உழைப்பு.!   உடலால் மட்டும் அல்லாமல் உழைப்பு

மனதால் தான் எனபது புரிந்தது.

நோகாமல் கிடைக்கும் காசு வந்த சுவடு தெரியாமல் மறைந்து விடும்..

இந்த பணம்  தான்  மனுசனை என்ன பாடு படுத்துது!!

இருந்தாலும் கஷ்டம் ..இல்லா விட்டாலும் துன்பம் ..

வெளி நாடுகளில் மாணவ மாணவிகள் இன்று பார்ட் டைம் வேலை

செய்து தங்கள் மேல் படிப்புக்கு பெற்றோர் கையை எதிர் பார்க்காமல்

உழைத்து படிகிறார்கள்.  நம் நாட்டில் கூட ஒரு சிலர் இவ்வாறு உழைத்து

படிகிறார்கள்..  அதில் அத்தனை ஆனந்தம் . சுகம்!

இறைவன் நம்மை ஊனம் இல்லாமல் படைத்தது இருக்கிறார்.

ஊனம் உடலில் இருந்தாலும் மனதில் உற்சாகம் இருந்தால்   உழைப்பால்

எதையும் சாதிக்கலாம் என்பதை நாம் நன்கு அறிவோம்!

மனமானது ஆமையை போல் என்பார்கள்.


ஆமையை சமைக்க தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்றும் போது

ஆமைக்கு தான் உணவாக போறோம் எனபது தெரியாமல் தண்ணீர்

சற்று வெதுவெதுப்பாக .ஆனவுடன் துள்ளி குதிக்குமாம் !!

நன்றாக கொதித்தவுடன் சுருண்டு இறந்து விடும் .

அது போல் தான் நம் மனம் ...உழைக்காமல் வரும் பணத்தை பார்க்கும்

போது துள்ளி குதிக்கும் . அது வெகு சீக்கிரம் நம்மை விட்டு போக போவது

பற்றி நமக்கு தெரியாது. அதனால் ஆமைக்கு உதரணமாக

மனித வாழ்க்கை கருத படுகிறது.


ஆகையால் உழைப்பால் உயருவோம் !! மனதால் உற்சாகம் அடைவோம்.!

6 கருத்துகள் :

  1. சத்தியமான வார்த்தைகள்... இந்த உலகிலே உழைப்பை போல உன்னதமான விஷயம் எதுவும் இல்லை. உழைப்புக்கு தலை வணங்குவோம்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை கீதா இது போல பல பெண்களை நான் பார்த்து இருக்கின்றேன்.. என் பாட்டி இப்படி உழைத்த பெண்மணிதான்....இதை படிக்கும் போது அவளைதான் நினைத்துக்கொண்டேன்..

    பதிலளிநீக்கு
  3. தமிழ் உதயம் அவர்களுக்கு
    நன்றிங்க !! உங்கள் வருகைக்கு..

    பதிலளிநீக்கு
  4. ஜாக்கி சேகர் அவர்களுக்கு
    நன்றிங்க !! உங்கள் வருகைக்கு..
    நிறைய பெண்கள் நீங்கள் சொல்வது போல இன்னும் இருகிறார்கள் .உங்கள் பாட்டிக்கு என் வணக்கம்.

    பதிலளிநீக்கு

welcome