நண்பர் அல்லது உறவினர் வெளிநாட்டில் இருந்தால் அவர்களை பார்க்க செல்லும் போது யாராவது விமான நிலையத்திற்க்கு வந்து நம்மை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் இனி அது தேவையில்லை. நீங்கள் எங்கு சென்றாலும் அவர்களின் வீட்டை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
மேப் மற்றும் ப்ரொஷக்டர் இணைந்த கருவி ஒன்று புதிதாக வரவிருக்கிறது. பார்ப்பதற்கு நாம் பயன்படுத்தும் பென் டிரைவ் போன்று இருக்கும். இதில் நாம் எந்த நாட்டிற்கு எந்த இடத்திற்கு போக வேண்டும் என்பதை இதில் இருக்கும் மேப்பில் சேமித்து வைத்து நாம் எந்த இடத்திற்கும் செல்லலாம் அதுவே வழிகாட்டும் ப்ரொஷக்டர் மேப் -ஐ பெரிதுபடுத்திக்காட்டும். போகும் வழியை அடிக்கடி சரிபார்த்துக்கொள்ளலாம் எற்கனவே நாம் குறித்து வைத்த இடத்திற்கு செல்ல வேண்டிய பாதையை அம்புக் குறியிட்டு காட்டும். இதன் பின்னனியை கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் GPS என்று சொல்லக்கூடிய குளோபல் பொஸிசனிங் சிஸ்டம் (Global Positioning System) மூலம் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை துல்லியமாக கண்டுபிடித்து செயல்படுகிறது.
ப்ரொஷக்டர் மூலம் செல்ல வேண்டிய இடத்தின் மேப்-ஐ தரையில், சுவற்றில் அல்லது நம் கையில் எங்கு வேண்டுமானாலும் ப்ரொஷக்ட் செய்து பார்க்கலாம். அது மட்டுமின்றி மேப் -ஐ பெரிதாகவோ சிறியதாகவோ எப்படி வேண்டுமோ அப்படி பார்க்கலாம்.
வெள்ளி, டிசம்பர் 25, 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
remove word verification pls.. nice post
பதிலளிநீக்குok sure..
பதிலளிநீக்கு