மாற்றங்கள் வேண்டும் !! ஆம் நான் மாறிவிட்டேன் மம்மி ! உண்மை ...
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .
உடுமலையில் இருந்து சென்னை மாறினோம் ...
சில மாற்றங்களை தான் செய்து பார்ப்போம் என்று பிரிட்ஜ் எடுத்து செல்லாமல் கடந்த சில காலமாக குளிர் சாதன பெட்டி இல்லாமலே பழக கற்று கொண்டோம் . முதல் ஒரு வாரம் மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஜில் தண்ணீர் குடிக்காமல் தாகமாக தண்ணீர் குடித்த மாதிரியே இல்லை.
ஒரு சில நாட்கள் 7அப் ,மற்றும் ஸ்ப்ரைட் லெமன் சோடா வாங்கி பருகினோம். இருந்தாலும் தாகமே அடங்கவில்லை . என் மகள் ஒரு மண் குடுவை வாங்கி அதில் தண்ணீர் மற்றும் நன்னாரி வேர் போட்டு வைத்தாள். .
வெளியே சென்றுவந்த எனக்கு மனமான குளிர்ந்த நீரை கொடுத்தாள் .
அப்படியே சொர்கத்துக்கு செல்வது போல் இருந்தது. இன்னும் ஒரு டம்ளர் கேட்டு வாங்கி குடித்தேன் .புத்துணர்ச்சி பெற்றேன் .தேங்க்ஸ் டா என்றேன்.
அடுத்து பிரிட்ஜ் இல்லாததால் என் கணவர் 3 நாட்கள் ஒரு முறை பச்சை பசேல் என்ற காய்கறிகள் மற்றும் பழ வகைகள் பிரெஷ் ஆக வாங்கி வந்தார்.
பிரிட்ஜ் இல்லாததால், உடனுக்கு உடன் செய்து சுவை குன்றாமல் சாப்பிட்டோம் ! அடுத்து என் பங்குக்கு , இட்லி மாவு இரண்டு நாட்களுக்கு மட்டும் அரைத்து ஸ்டோர் பண்ணாமல் உடனே செய்து தீர்த்தோம் .
பால் மற்றும் தயிர் அன்றைக்கு தேவை ஆனதை மட்டும் வாங்கினோம் !
நாம் என்ன சாதித்தோம் என்று யோசித்தேன் ..
ஆம் ... சத்துக்கள் குறையாமல் வீணாகாமல் காய் கறிகளை உண்டோம் .
தினம் வாக்கிங் சென்று பால் வாங்கி பிரெஷ் ஆக உபயோகித்தோம் !!!
இரண்டு நாட்கள் மட்டும் இட்லி தோசை செய்து , மற்ற நாட்கள் variety ஆக
வேற வேற டிபன் அயிட்டம் செய்து , உனக்கு இட்லி தோசை தவிர வேற ஒன்னும் செய்ய தெரியாதா? என்று கேட்கும் மகளிடம் இருந்து இப்போ சபாஷ் வாங்குகிறேன்.!!!இயற்கையான மண் குடுவை தண்ணீர் பருகி வருகிறோம் .
மகிழ்ச்சி , இதை விட முக்கியமாக மிக பெரிய சாதனை என்னவென்றால் ....
கரண்ட் பில் செலவு வெகுவாக குறைந்து இருப்பதை கண்டு ஆச்சரிய பட்டேன்
மற்றும் ஒரு நிகழ்வை கண்டேன்.. இவைகளை பிரெஷ் ஆக வாங்குவதற்கு தினம் போட்டி போட்டு கொண்டு வாக்கிங் சென்றதால் வெயிட் சற்று குறைந்ததை கண்டு அதிகம் ஆச்சரியம் பட்டேன், மாற்றம் ஒன்றையே நான் உணர்கிறேன் !!!! பிறக்கும் போதே இவைகளோடு நாம் பிறக்கவில்லை... இறக்கும் போதும் இவை நம் கூட வர போவதில்லை ! எதற்கு இது நடுவில்?
வாங்க பழகலாம்..நாம் நினைத்தால் ...எதையும் மாற்றலாம் .. உண்மை இது.
- அனைத்தும் நாம் உருவாக்கியது !!! நம் தான் முடிவு செய்ய வேண்டும் .
need மற்றும் want எது என்று . Need என்றால் தேவை .Want என்றால் ....Luxurious
அடிப்படை தேவை நியாயமானது ... Luxurious ...அவசியமா? யோசியுங்கள்.
நன்றி.மாற்றம் கொஞ்சம் சிரமம்தான். ஆனால் அதுவே சாத்தியமென்றால் முழு வெற்றிதான்.வணக்கம்.
பதிலளிநீக்குyes u r correct
நீக்குReally superb. M also using man panai water. Without fridge can't imagine. But changes want. So I try my level best. We need changes
பதிலளிநீக்குwell said!!
நீக்குஎங்க வீட்ல 2 பிரிட்ஜ்ஜு ஒன்னு பழுதாகிவிட்டது உங்கள் பதிவை பார்த்தவுடன் வாங்குவதை தாமதப்படுத்தலாம் என்று இருக்கிறேன்
பதிலளிநீக்குஆமாம்!!!முயற்சி செயுங்கள்...
பதிலளிநீக்கு