சனி, ஏப்ரல் 14, 2012

தேர் திருவிழா


எங்க ஊரு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.!


ஒரு வாரம் முன்பு இருந்தே களை கட்டி விட்டது.


கடைகள் அமைக்கப்பட்டு ஜே ஜே என்று கூட்டம்.


ஓவரு வருடமும் வித்யாசமான நிகழ்சிகள் இடம்


பெறும். நானும் என் மகளும் தேர் நடைபெறும் இரண்டு


நாட்களுக்கு முன்பே ஒரு விசிட் அடிப்போம்.பிறகு கூட்டம்


அதிகம் ஆகி விடும் என்பதால்..ஊசி பாசி கடைகள் முன்பு தான்


என் மகளுக்கு அதிகம் ஆர்வம்..சுலபத்தில் கடையை விட்டு


சீக்கிரம் நகரமாட்டாள்!! அத்தனை ஆர்வம்... தோடு ,பொட்டு..


வளையல் மோதிரம் என்று நேரம் போவதே தெரியாத அளவு


கண்கள் விரிய ஆர்வத்துடன் .. வாங்கிய பின்பு தான் நிம்மதி,,


ஒரு நாள் பத்தவில்லை .. நாளை மறுபடியும் வரலாம். என்று


மறுநாளும் எங்கள் ஷாப்பிங் நீடிக்கும்.ஒரு வழியாக முடிந்தது.


அம்மா dog ஷோ இந்த முறை புதிதாக சேர்த்து இருக்கிறார்கள் ..


போலாம் மா !! இம்..அதையும் தான் பாப்போம்..டிக்கெட் வாங்கி


நுழைந்தோம் ...உட்கார இடம் இல்லை ..கால் கடுக்க நின்றோம்..


ஷோ ஆரம்பித்த பாடில்லை. ஐ ந்து நாய்கள் விட்டால் போதும்


என்று ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தது..


வாங்க வாங்க சீக்கிரம் வாங்க என்று மைக்கில் அழைத்த வண்ணம்


இருந்தநேர். ஒரு வழியா கூட்டம் சேர்ந்தவுடன் .. ஆரம்பித்தார்கள்.

ஒவேன்றாக கீழே இறங்கி டிரம்களை உருட்டி சுற்றி வந்த்நேர்.


பிறகு நெருப்பு வலயத்தை ஒவேன்றாக தாண்டின !! அடுத்து


செல்போன்  எங்களிடம் வாங்கி மற்றொருவரிடம் கொடுத்து


கண்டு பிடிக்க சொன்னார்கள். கச்சிதமாக கண்டுபிடித்தது.
  
அல்சேசன் வகையை சேர்ந்த நாய் ஒன்றை வைத்து செம காமெடி நடந்தது.

பார்வையாளர்களை சுற்றி வந்தது.டான் டான் என்று கேட்கும் கேள்விகளுக்கு

ஏற்ற வண்ணம் பார்வையாளர்கள் அருகே வந்து விடை தந்தது ஆச்சரியம்.

பெரிய மீசை இந்த கூட் டத்தில் யார் வைத்து இருக்கார்கள்? என்றார் மைக்கில்.

ஒரு முறை சுற்றி வந்து கரெக்டாக கூட்டத்தில் பெரிய மீசை வைத்து இருந்த

நபர் அருகே போய் நின்றது. அழகா ட்ரைன் பண்ணி இருக்கிறார்கள் !!!

அடுத்து இங்கு வயதில் மிக சிறிய நபர் யாரு? என்று கேட்டார்.

அத்தனை நபர்கள் நடுவே ஒரு பெண்மணி சிறு குழந்தை வைத்து இருந்தார்.

இரண்டு முறை சுற்றி வந்து சரியாக ...அவர் அருகே போய் நின்றது !!

அடுத்து இங்கு எந்த பெண்மணி அவர் புருசனோடு அதிகமா சண்டை

போடுவார்? என்றவுடன்.. சுற்றி வந்து ஒரு பெண்மணி அருகே சென்றது.

இங்கு உள்ளவர்களில் யார் அதிகமா சைட் அடிப்பது என்றவுடன் ஒரு பையன்

முன்பு சென்றது. அந்த பையனோ ... மெதுவாக எஸ்கேப் !! விடவில்லை ......

இங்குள்ள பெண்களில் யாரு தன புருஷன் மீது அதிகம் பாசம் வைத்துள்ளார் ?

அல்சேசன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு ஒரு ஜோடி முன்பு போய் நின்றது.

மிகவும் அழகிய பெண் யார்.. என்றார் அறிவிப்பாளர்.. அழகா இருந்த ஒரு

பெண் முன்பு சென்று நின்றது.!! எத்தனை அறிவு இந்த ஜீவனுக்கு.?


கடைசியாக அந்த காலத்தில் அழகாக இருந்த பெண்மணி யார்.. என்றார்..

அல்சேசன் இரண்டு முறை சுற்றி ஒரு வழியாக என் முன்பு வந்து நின்றது.

ஓ.. மனசு சிறகடித்து..பழய black அண்ட் white கு பறந்தது. !!! அடடா..

பழய நினைவுகளுடன் கிளம்பினேன்....அந்த காலத்து அழகியாக..!!!!


நன்றி

http://amma.oorodi.com/kolam

இந்த தேர் திருவிழா பற்றி நினைக்கும் போது..கண்டிப்பாக இதை சொல்லி

தான் ஆக வேண்டும்..போன தேர் திருவிழா போது எங்கள் வீடு அருகே

இருக்கும் தொன்நூற்றி நாலு வயது பாட்டி மிக ஆர்வமுடன் தன்  வீட்டு

வாசலில் அழகிய தேர் கோலம் போட்டு தேரை தன வீட்டுக்கே கொண்டு

வந்து அசத்தி இருந்தார்.!! தேர் கோலத்தை தெருவே சென்று பார்த்தோம்.

என் அம்ம்மாவின் தோழி தான் அந்த பாட்டி. இந்த தேர் நோன்புக்கு என்

அம்மாவும் இல்லை, அந்த பாட்டியும் இந்த வருட தேர் திருவிழாவுக்கு 

இல்லை என்பதை உணரும் போது மனசு கனக்கிறது.வேதனையில்.!


அனைவர்க்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் 
10 கருத்துகள் :

 1. //என் அம்ம்மாவின் தோழி தான் அந்த பாட்டி. இந்த தேர் நோன்புக்கு என்

  அம்மாவும் இல்லை, அந்த பாட்டியும் இந்த வருட தேர் திருவிழாவுக்கு

  இல்லை என்பதை உணரும் போது மனசு கனக்கிறது.வேதனையில்.!//

  அவரின் நினைவுகள் உங்களை வழி நடத்தும்.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ஊர் திருவிழாவை கண் முன் நிருத்துநீர்கள்..அருமை ! பெண் குழந்தைகள் அடிபடையில் ஒன்றுதான்.... வளர்ந்த பின்பு கூட எப்போதுமே குழந்தை தனம் இருந்து கொண்டே இருக்கும் ..!! அவை மிகவும் ரசிக்க தகுந்தவை !! உங்கள் மகளை பற்றி தான் சொல்லுகிறேன் . ஆனால் பெண்கள் கூட அடிப்படையில் பெரும்பாலும் ஒன்றாகவே இருபதை மீண்டும் மீண்டும் அறிய நேரிடும் போடு மிகவும் ஆச்சிரியமான உண்மை யாக உள்ளது. dog show - யில் அந்த நாய் " "அழகான பெண் என உங்களை அடையாளம் " காட்டியதை மிக நைசாக சாமர்த்தியமாக குறிப்பிட்டு உள்ளதை - சொல்லுகிறேன் ..!!!!!!.. சாரி மேடம் , தப்பாக எடுத்து கொள்ள வேண்டாம் ? ஜஸ்ட் ஜோக் . அழகு என்பது மனதில் இருபதாகவும் சொல்லபடுகிறது ..?? மனதிலும் அழகவே இருப்பதாய் அறிய மிக்க மகிழ்ச்சி. நன்றி. மேடம் .. keep the cheers - RAGUL KUMARAN---

  பதிலளிநீக்கு
 3. வாங்க ராகுல் !.,
  "அழகான பெண் என உங்களை அடையாளம் " காட்டியதை
  மிக நைசாக சாமர்த்தியமாக குறிப்பிட்டு உள்ளதை - சொல்லுகிறேன்"
  யாருக்குமே அழகு என்றால் பெருமை தானே..!!
  நான் மட்டும் இதற்கு என்ன விதிவிலக்கா?
  அவர் இன்னும் ஒன்றும் சொன்னார்...உங்கள்
  கருத்தை படித்த பிறகு அதையும் சொல்லி ஆக
  வேண்டும். ...அந்த காலத்தில் மட்டும் இல்லை
  இந்த காலத்திலும் இவர் அழகாகவே உள்ளார் என்றார்.
  புரிபவர்களுக்கு புரிந்தால் போதும் என்று இருந்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 4. open ஆக உங்களின் ஒப்புகை - ய்க்கு நன்றி . பெண்கள் மற்ற எல்லா பாராட்டுகளையும் விட ' அழகு ' என்ற பாராட்டு மிக விரும்புகிறார்கள் ..!!! உங்கள் மகள் அருகில் இருந்தும் கூட அந்த 'நபர்' இந்த காலத்திலும் இவர் அழகு என்று குறிபிடடக அறிவது மிக ஆச்சரியமான நியாமான உண்மையாக எடுத்து கொள்ள வேண்டியது தான்..!!! உங்கள் கணவர் மிக விரும்பி ரசித்து இருப்பார் ..!! உண்மை தானே..??? பாராட்டுகள் ..!!!! ஆனால் 'மனதில் அழகு என்பதற்கு பெண்களிடம் அதிகமாக ஆர்வம் இல்லை போலும் ...!!!!! தயவு செய்து தப்பாக என்ன வேண்டாம் .. ஜஸ்ட் ஒரு பொதுவான argument ஆக சொல்லுகிறேன் ..!! - நன்றி யுடன் - ---ராகுல் குமரன்-

  பதிலளிநீக்கு
 5. அகத்தின் அழகு முகத்தில் தெரிகிறது ராகுல்.
  ஆம் என் கணவர் விரும்பி ரசித்து இருப்பார்
  என்று நம்புகிறேன்.!!
  தவறாக எடுத்து கொள்ள இதில் ஒன்றும் இல்லை .

  பதிலளிநீக்கு
 6. Nice post...dogs are so intelligent! Enjoyed reading it..n remembered our trip to Avinasi-ther thiruvizha! :)

  Enjoyed the comments as well..women's mind set is almost the same in all the stages & ages about beauty! ;)

  பதிலளிநீக்கு

welcome