எங்க நெருங்கிய உறவு பெண்ணின் ஒரே மகளுக்கு திருமணம்.!
நான் குடும்பத்துடன் சென்று வந்தேன். அப்பெண்ணின்
சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் இருந்து
ஒருவரும் வரவில்லை.!! காரணம் கேட்ட போது
மழுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியலை. பெண்ணின்
தாய் மாமன்கள் மற்றும் அவர்கள் குடும்பம் உள்ளுரில்
இருந்தும் வரவில்லை... தாய் மாமன் மாலை போட கூட
அங்கு ஆள் இல்லை. .. என் உறவு கார பெண் மிகவும்
சாமர்த்தியசாலி !! ஒரு இடத்திற்கு போவது என்றால்..
கணக்கு பார்பார்.!! டிக்கெட் ப்ரீ ஆக வாங்கி கொடுத்தால்
மட்டுமே., சென்று தலையை காட்டுவார்..அதிலும் தனக்கு
எதாவது லாபம் கிடைக்குதா என்பதிலே மிகவும் குறியாக
இருப்பார்..தன சொந்த சகோதரன் மனைவி கள்(அண்ணி )
வீடுகளில் சமீபத்தில் அவர்கள் மாமனார் மற்றும் மாமியார்..
தவறி விட்டார்கள் !! இந்த பெண் மற்றும் இவள் பெற்றோர்
அவர்களிடம் (அண்ணிகள்) இறந்தது பற்றி ஒரு "வார்த்தை ''
கூட கேட்கவில்லை யாம்., நேரிலும் சென்று விசாரிக்க பணம்
செலவாகி விடும் என்று தனக்கு கால் மூட்டு வலி என்று சொல்லி
தவிர்த்து விட்டாளாம்!! ஏண்டி ...நாங்கனா உனக்கு அவ்வளவு இளப்பமா ?
எங்க அம்மா ., அப்பா சாவுக்கு வந்து துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியலை
ஒனக்கு விசேசம்னா நாங்க ஓடி வரணுமா என்று தங்கள் கணவன்களிடம்
உங்க தங்கச்சி வராமல் .,,, சாக்கு சொன்னாள் அல்லவா ? நாங்க உங்க
தங்கச்சி மக கலயாணத்துக்கு வரமாட்டோம் ., !! என்று ஒன்று சேர்ந்து
விட்டனேர்!! இதே போல் தான் உங்க அப்பா அம்மாவுக்கும் என்றார்களாம்.
அண்ணன்களையும்.. எங்களை மீறி போனா !! எங்க பொணம் மீது தான் ..
நீங்க போய் வரணும் என்று ...அண்ணிகள் இருவரும் குரல்
கொடுக்க ,,அண்ணன்கள் இருவரும் வேறு வழி இல்லாமல்
மௌனம் ஆகி விட்டனெர் !!! அவர்கள் வீட்டு கெட்டது நடந்து வருஷங்கள்
பல சென்றும் ., அவர்களால்..இந்த நல்லதை ஏற்று கொள்ள முடியவில்லை!!
இதில் என்ன விசேஷம் என்றால் ., அண்ணன்களை நம்பி தான் இந்த
பெண்ணின் பிழைப்பு போய் கொண்டு இருக்கிறது.,!!! அண்ணன் மட்டும்
போதும்., அண்ணி குடும்பம் பற்றி நமக்கு என்ன என்று நினைக்கும் ..
இது போன்ற பெண்களுக்கு இது தேவை தான்.,!!! வந்தவர் அனைவரும்
சின்ன அண்ணன் ., பெரிய அண்ணன் எங்கே ? என்று விசாரிதவண்ணம்
இருந்தநேர் !! இப்பெண்ணோ !! அதை பற்றி சிறிதும் பொருட்படுத்தாமல்...
மொய் பணத்தை வசூல் செய்வதில் குறியாக இருந்தார்.அவர் தாய் தந்தை
கூட இந்த பெண்ணு க்கு நல்லது கெட்டது பற்றி எடுத்து சொல்லாமல் .,
மகன்கள் இல்லாமல் கல்யாணம் நடந்தாலும் பரவா இல்லை என்று
கொஞ்சம் கூட அலடிக்காமல்.., எனக்கு என்ன என்று இருந்தனேர்!!
அப்பென்னின் மகள்(கல்யாண பெண்) தாயை விட ஒரு படி மேலாம்.
மாமா கள் மட்டும் போதும் .,, அத்தைகள் இடம் பேச கூட மாட்டாளாம்.!!!
சுயநலம் இருக்க வேண்டியது தான்.. ஆனால் இத்தனை கேவலமாக
நடந்து கொண்டால்..யாரும் தேவை இல்லை ...என்று இருந்தால் ..,,,,
அவர்கள் நடந்து கொள்வதில் தப்பு இல்லை.!!நல்லது கெட்டது செய்ய
சொந்த பந்தம் அவசியம்.!!!! ஆனா சிலரின் அலட்சியம் மற்றும்
பணத்தாசையால்.., அனுபவிக்க வேண்டியது தான்.ஒரு நல்ல பாடம்.!!!
.
இப்படியும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் கீதா.என்ன ஜென்மங்களோ !
பதிலளிநீக்குthanks Hema!
நீக்குபட்டால் தான் தெரியும் பல பேருக்கு !
பதிலளிநீக்குthanks danabalan.
நீக்கு