செவ்வாய், ஜூலை 05, 2011

ஜிங்குச்சா ..பச்சை கலரு ஜிங்குச்சா!!

இப்ப எல்லாம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை 

சத்தான உணவை  சாப்பிடுவது குறைந்து விட்டது.

அதிலும் பாஸ்ட் பூட் மோகம் குறைய வில்லை.

 காய்கறி விக்கும் விலை வாசியில் சத்தான 

காய்களை குறிப்பாக குழந்தைகளை சென்று 

அடைவது மிகவும் குறைந்து விட்டது.!!

அதனால் உதாரணத்துக்கு ...,, பூரி அனைவர்க்கும் 

பிடிக்கும் ..ஆனால் ஆயில் உள்ளதால்..சிலர் 

விரும்புவது இல்லை...குழந்தைகளுக்கு 

கொடுக்கும் போது...எதாவது கீரை ஒன்றை 

கடைந்து பூரி மாவு கலவையுடன் சேர்த்து 

பிசைந்து பச்சை கலர் பூரி செய்து கொடுங்க.!!



அடுத்து பீட்ரூட் வேக வைத்து மிக்ஸ்யில் காரம் 

உப்பு சேர்த்து  அரைத்து பேஸ்ட் ஆக பூரி மாவு 

கலவையுடன் சேர்த்து சிவப்பு கலர் பூரி செய்யுங்க .


இது  போல்  காரெட்டையும் செய்யலாம்.!!!!!


இட்லி மாவில் இவைகளை சேர்த்து கலேர்புல்

இட்லிகளை செய்து கொடுக்கலாம். !!!


வெங்காயம் கருவேப்பில்லை இவைகளை 

பொறுக்கி ஒதுக்காமல் இருக்க , நைசாக 

மிக்ஸ்யில் ஒரு சுற்று சுற்றி சேர்த்து விடுங்க.

பாகற்க்காய் மாதம் இரண்டு முறையாவது 

கண்டிப்பாக குழந்தைகளுக்கு கொடுக்கவும் !


பொதுவாக குழந்தைக்களுக்கு கொடுக்கும்

உணவில் , சத்தான காய்களை சீவி , அல்லது

வேக வைத்து அரைத்து கலந்து தாருங்கள்.!






4 கருத்துகள் :

  1. பச்சைபூரி, பீற்றூட் மாட்டர் இட்லி என்று பார்க்க நல்லாத்தான் இருக்கு..

    பதிலளிநீக்கு
  2. சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க சகோ Jana !

    பதிலளிநீக்கு
  3. இதுவரை நான் பச்சை கலர் பூரிய பாத்ததே இல்லையே... இனி எங்க வீட்டுல பச்ச கலரு ஜிங்குஜா சிவப்பு கலரு ஜிங்குஜா தான் ... கலக்குங்க

    பதிலளிநீக்கு
  4. மாய உலகம் சீக்கிரம்.நான் வரேன் சாப்பிட..

    பதிலளிநீக்கு

welcome