சனி, மே 14, 2011

ஒட்டாத உறவுகள்

 என் பெரியம்மா வயதானவர்.அவருக்கு ஒரே பையன்.இருவரும் 
ஒரு வீட்டில் வசித்து வந்தநர்.வயதான காலத்தில் தன் மகனுக்கு 
திருமணம் முடித்து வைத்தார்..வந்த மகராசி ஒரே வருடத்தில் 
மகனை பிரித்து  சென்று விட்டார்.
எங்களை பார்த்தாலே பயம் , வெறுப்பு.,எங்கே என் அண்ணன் 
அம்மா பேச்சை கேட்டு, தான் சொல்வதை கேட்கமாட்டார் !! 
நாங்கள் அண்ணனனுக்கு சொல்லி தந்து இவர் பக்கம் 
இருக்கமாட்டார் என்று   கேட்பார் பேச்சு கேட்டு எங்கள்
பெரியம்மாவை  தனியாக விட்டு விட்டு புருஷனை
தன  அம்மா வீட்டுக்கு கூட்டி போய் விட்டார்.!
அந்த அன்னையை நாங்கள் கூட்டி வந்து எங்களுடன்
வைத்து கொண்டோம்.!!!
கிட்டதட்ட 8 வருடங்கள் தாயும் மகனும் ஒன்று சேராமல் 
பேச்சு வார்த்தை இல்லாமல் பண்ணி விட்டார்கள். என் பெரிய 
அம்மா மனம் ஒடிந்து போய் விட்டார்கள். 

எங்கள் அண்ணன் கடந்த 8 வருடங்களில்
உடல் நிலை சரிஇல்லாமல் போய் ,
பிசினெஸ் லாஸ் ஆகி பணம் அனைத்தையும்
இழந்து , சக்கரை நோயுடன் படுத்தார்.
இங்கு என் பெரியம்மாவும் படுத்த படுக்கை ஆனார்.
இதற்கு காரணம் மருமகள் வீட்டில் நான்குபேரும் 
பெண்கள்.. ஆண்கள் இல்லாத வீடு என்று தங்கள் 
கணவன்மார்களை வீட்டு மாப்பிள்ளை ஆக்கி உள்ளநேர் .
இதில் மருமகளின் இரண்டு அக்காக்கள்
புருஷன்கள் இவர்களை விவாகரத்து
செய்து சென்று விட்டார்கள். அதனால்
எங்கள் வீட்டு மருமகளும், அவருடைய மூத்த அக்காவும்
மிகவும் உஷாராக எங்க  அண்ணன் 
உட்பட ,வீட்டு மாப்ளை ஆக்கிவிட்டார்கள்.!
என் பெரியம்மா மிகவும் பாதிக்க பட்டார்.என்
அண்ணன் மட்டும் அவர் அம்மாவை வந்து பார்த்து செல்கிறார்.இன்று அக்காவும் தங்கையும் 
நல்லவர்கள் மாதிரி பெரியம்மாவை பார்க்க வந்து விடநேர். 


இப்போது  உணர்கின்றநேர்..கண்ணீர் மல்க எங்க பெரியம்மாவிடம் 
ஆசீர்வாதம் பெற்று செல்கின்றநேர் ...பனிரெண்டு வருடங்கள் பிறகு....என் கையை பிடித்து கொண்டு , உங்களை நாங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லையே என்று  இப்ப சொல்கிறார்கள்.
இப்பவாது  புரிந்து  கொண்டார்களே ..ஆண்டவன் கிருபையால்
என்று எண்ணி கொள்கிறேன் !! ஏன் தான் இப்படி இருகிறார்களோ?
இந்த ஒட்டாத உறவுகள்...என்று தெரியவில்லை.

13 கருத்துகள் :

  1. மீண்டும் கிட்டாத நினைவுகள் அவை வாழ்வின் ஒட்டாத உறவுகள்.. திகட்டாத கனவுகள்

    பதிலளிநீக்கு
  2. தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி தோழரே !

    பதிலளிநீக்கு
  3. சில பேரு ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கராங்க?அவங்களுக்கும் வயசாகும் முதுமையை அவர்களும் சந்திக்கும் காலம் வரும். அப்பத்தான்
    அவர்களின் மன உணர்வுகள் புரியுமோ
    என்னமோ. ஆனா டூ லேட்.

    பதிலளிநீக்கு
  4. ஆமாம் அம்மா மிக சரியாய் சொன்நீங்க

    பதிலளிநீக்கு
  5. கண்கெட்ட பிறகு தான் சூரிய நமஸ்க்காரம் செய்வது வழக்கமாகிவிட்டது. உறவுகளின் அருமை தெரிவதில்லை. கலிகாலம். இப்படித்தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. சுயநலமாகவே வளர்ந்தால் இப்படித்தான் ஆகும். பெண்கள் மட்டும் இருக்கும் சில வீடுகளில் இதுபோன்ற தவறான வழிகாட்டுதல்கள் பெற்றோராலேயே உருவாக்கப்படுகின்றன. சிறிது கெடுபிடி என்றாலும் ஒத்துப்போகாமல் வெட்டிக்கொண்டு போகின்றனர்.

    பதிலளிநீக்கு
  7. தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி சாகம்பரி .

    பதிலளிநீக்கு
  8. ஏன் தான் இப்படி இருகிறார்களோ?
    இந்த ஒட்டாத உறவுகள்...என்று தெரியவில்லை.//

    நன்றாக இருக்கிறது...

    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. நமக்கும் வயசாகும் ,நாளை நமக்கும் இதே நிலைமை வரக்கூடும்
    .இதெல்லாம் நினைத்து பார்த்தாவது இப்படிப்பட்ட பெண்கள் திருந்தனும் ..

    பதிலளிநீக்கு

welcome