வியாழன், ஏப்ரல் 28, 2011

இல்லத்தரசிகளுக்கு வொர்க் ஷேட்யுல்

 பல பெண்கள் இன்று  வேலைக்கு போகும் காரணத்தால் ...வீட்டை
சரி வர பராமரிக்க முடிவதில்லை.முக்கியமாக இந்த வெயில் 
காலங்களில் சாக்ஸ், மற்றும் திரை சீலை,மிதியடி ,மேட் ,கரி துணி 
பாத்ரூம் டவல் ,கை துடைக்கும் கர்சிப் ,வாஷ்பேசின் டவல் 
இவைகளை நாள்பட துவைக்காமல் யூஸ் பன்னுவதால்...
தொற்று கிருமிகள் தொற்ற வாய்ப்பு உள்ளது.சண்டே ஏன் தான் 
வருதோ ....!  என்று என்னும் வகையில் அணைத்து 
வேலைகளையும்  இழுத்து போட்டு செய்வதால்...ச்சே என்று 
ஆகிவிடும்.அதனால் தினம் பதினைந்து நிமிடம் இதற்கு 
ஒதுக்கினால் ...வேலை மலைப்பே தெரியாமல் செய்யலாம்..

நாம் என்னதான் டெட்டால் உபயோகித்து கிளீன் செய்தாலும் ...
சின்க்,வாஷ்பேசின் ,வாலி,மக் ,கப் ,இவைகளை பெரும்பாலும் 
அடிக்கடி சுத்தம் செய்ய நேரம் கிடைப்பது கிடையாது !! அதனால்
தான் இந்த வொர்க் டேபிள்.. வேலை சுமை இல்லாமல் செய்து
 கலைப்படையாமல், கிருமிகளிடம் இருந்து தப்பிக்கலாம்.

கிழமை
வேலை 
திங்கள்
மிதியடிகள் முதல் நாள் ஊறவைத்து சுத்தம் செய்யவும்   (சோடா உப்பு +டெட்டால் தண்ணீர்)
செவ்வாய்
கரிதுணி வாஷிங் பவுடர் சுடு தண்ணீரில் ஊறவைத்து அலசவும்
புதன்
மக்,கப், வாலி விம் பார் போட்டு  கழுவவும்
வியாழன்
கை துடைக்கும் டவ்வேல் , பாத் டவ்வேல் அலசவும்
வெள்ளி
சாக்ஸ் , கர்சிப் , லஞ்ச் டவ்வேல் அலசவும்
சனி
திரை   சீலை  ,மேட்  , மற்றும்
சீப்பு   பிரஷ் வகைகளை சுத்தம் செய்யவும்   


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome