வெள்ளி, பிப்ரவரி 18, 2011

காபேஜ் ஆம்லேட்

இந்த முட்டை கோஸை பார்த்தாலே குழந்தைகளுக்கு 
பிடிக்க மாட்டேன்கிறது....உடம்புக்கு நல்லது பலருக்கு 
பிடிப்பதில்லை!குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி இந்த 
முட்டைகோஸ் ஆம்லேட் செய்வதை பாப்போம்.!!!
தேவை 
நைசாக நறுக்கிய கோஸ்             ஒரு கப் 

நைசாக நறுக்கிய வெங்காயம்   ஒரு கப்


பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சிறிது 

கருவேப்பிலை ,கொத்தமல்லி நறுக்கியது சிறிது

 உப்பு சுவைக்கு ஏற்ப 


கடலை மாவு       மூன்று கப்


செய்முறை 
கடலை மாவை  சலித்து சிறிது சோடா மாவு சேர்த்து 
தண்ணீர் சேர்த்து , நறுக்கிய கோஸ் வெங்காயம்,பச்சை 
மிளகாய் கருவேப்பிலை,கொத்தமல்லி ,உப்பு சேர்த்து 
நன்றாக கலக்கி தோசை மாவு பதத்தில் கரைத்து ,பத்து
நிமிடம் ஊற வைத்து ,தோசை கல்லை சூடாக்கி சிறிது 
நெய் தடவி ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக 
தேய்த்து சிறிது என்னை சுற்றிலும் விட்டு, வேக 
வைக்கவும். பிறகு திருப்பி போட்டு பொன்னிறமாக 
சுட்டு எடுக்கவும்.மாலை நேரம் டிபன் ஆக பசியுடன் 
வரும் குழந்தைகளுக்கு சத்தான ஆம்லெட் சூடா ரெடி !


சுவையான ஆம்லேட் தயார்.குழந்தை களிடம்  முட்டை கோஸ் 
ஆம்லேட் என்று சொல்லாதீர்கள்!!  

16 கருத்துகள் :

  1. முட்டையில்லாமல் செய்வது நல்லாயிருக்குங்க....

    பதிலளிநீக்கு
  2. நானும் இதே மாதிரி கோஸ் இல்லாமல் செய்து இருக்கின்றேன்...அடுத்தமுறை கோஸ் சேர்த்து விடுகிறேன்...நன்றி கீதா..

    பதிலளிநீக்கு
  3. செய்முறை ஈஸியாகத்தான் இருக்கு..மனைவி இல்லாத நேரம் றிஸ்க் ஒன்று எடுத்திட்டா போச்சு!

    பதிலளிநீக்கு
  4. S.Menaga மேடம் தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. நமக்கு ரிஸ்க் ணா ரஸ்க் சாபிடற மாற்றி ஜனா சார்..கலக்குங்க !!

    பதிலளிநீக்கு
  6. காபேஜ் ஆம்லேட் நல்லாயிருக்குங்க.

    பதிலளிநீக்கு
  7. செய்து பாத்தீங்களா மேடம்?!!!!

    பதிலளிநீக்கு
  8. சூப்பர் ஐடியா ... ஆம்லேட்க்கு நன்றீ. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

welcome