வெள்ளி, டிசம்பர் 31, 2010

அப்பாவும் ,நானும் ..என் டைரி யில் இருந்து சில பக்கங்கள் இதோ:
 பக்கங்களை புரட்டுகிறேன் !!!
 1994 வருடம் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி!!!..
இதே நாள் ,இதே கிழமை , நான் என் அப்பாவை காண
ஊருக்கு ரயிலில் போய் கொண்டு இருக்கிறேன்.....
பசுமையான நினைவுகள்.மறக்க முடியாத சம்பவங்கள்..

பதினாறு வருடங்கள் பின் நோக்கிச் செல்கிறது என் மனம்.!!
கிருஷ்ணபுரம் -மைவாடி யில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் 
ரயிலில் என் பயணம் தொடருகிறது!!!மதுரையில் பிளாட்பாம்
மாற வேண்டும்..துணைக்கு கணக்குபிள்ளை பெரியப்பா.இதுவே
லேட்..இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்ப வேண்டிய ப்ரோக்ராம்.

மார்கழி மாத  பூஜை  எங்களுடையது 30 ஆம் தேதி என்பதால்..
31 ஆம் தேதி புறப்பிட வேண்டயது ஆயிற்று.மதுரையில் அப்பா
ஜங்ஷன் ல் என்னை காண வெயிட் பண்ணி கொண்டு இருந்தார்.
இராமேஸ்வரம் வரும் வரை காக்க பொறுமை இல்லை.சாப்பாடு
வாங்கி கொடுத்து,தலையை தடவி,வண்டி கிளம்பும் வரை
பேத்தியை கொஞ்சி விட்டு ..நீ அங்கே போறதுக்கு குள்ளே நான்
ஒரு வேலையை முடித்து கொண்டு வந்து விடுகிறேன் ..என்று
கை அசைத்து விடை பெற்றார்.சொன்ன மாதிரி நான் போய்
சேர்வதற்கு முன்பே வாம்மா !!!வா!! என்று கம்பிரமாக குரல்
வந்தது..சின்ன பிள்ளை போல் பேத்தியை வாங்கி கொண்டார்.


அன்றய பொன் மாலை பொழுது பேசி கொண்டே ஓடி விட்டது.
நாளை மீண்டும் தொடருகிறேன்.....இது இன்னும் மூன்று
நாட்களுக்கு மட்டுமே தொடரும்...பொறுமையாக இருங்க ப்ளீஸ்.

 அனைவர்க்கும் என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.வணக்கம்.!!
தொடர்ந்து என்னை ஊக்குவித்து வரும் வலை உலக நண்பர்களுக்கு  என்
மனமார்ந்த நன்றியை இந்த நேரத்தில் சொல்லி கொள்கிறேன்.இரு கரம்
கூப்பி என் பணிவான வணக்கத்தை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் ..

 ஆங்கில புது வருடம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.அப்பாவை பார்க்க
நிறைய பேர் வருவாங்க.. வாழ்த்து சொல்லுவாங்க...31 ஆம்  தேதி நைட்.....
பிறக்க போகிற புத்தாண்டை ஆவலுடன் எதிர் பாப்போம் நாங்க..வருபவர்களுக்கு
எல்லாம் காபி,  டீ,பிஸ்கட் சாக்லேட் கொடுத்து எங்க சார்பில் நன்றி தெரிவிபோம்.!

மீண்டும்..நாளை சந்திக்கிறேன்!!  WISH U A HAPPY NEW YEAR

12 கருத்துகள் :

 1. வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  இதையும் படிச்சி பாருங்க
  சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. புவனேஸ்வரி ராமநாதன் நன்றி.
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 6. S.K நன்றி.
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !
  welcome.

  பதிலளிநீக்கு
 7. Thanks இனியவன்.
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 8. சண்முககுமார் நன்றி.
  புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 9. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு

welcome