சனி, டிசம்பர் 11, 2010

டீன் ஏஜ் பெண்களே...


படுக்கையில் இது வேண்டாமே...!
பெரும்பாலானவர்கள் விளக்கு அணைத்தபிறகு
 தூங்க வேண்டிய நேரத்தில் படுக்கையில் வைத்து 
செல்போனை உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் 
தூக்கம் கெடுகிறது. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் 
நீங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது.எனவே செல்போன்களை படுக்கைக்குச் எடுத்து சென்று உபயோகிப்பதை குறையுங்கள் !
இன்று இளைய தலை முறையினர்  குறிப்பாக இளம் பெண்கள் கவச குண்டலம் போல் செல்போனை வைத்து  இருக்கின்றனர்.
குறிபிட்ட நேரம் மட்டுமே  செல்போனை உபயோகிங்கள்., இணையம் மற்றும் புளூடூத் இணைப்பு வழியாக உங்களை  தவறாக தொடர்பு கொள்ளலாம்...உஷார்..   முன்பின் தெரியாதவர்களின் தேவையற்ற அழைப்ப்புகளுக்கு பதில் அளிப்பதை தவிர்க்கவும். சிலர் மிரட்டல் எஸ்.எம்.எஸ். அனுப்பி தொல்லை கொடுப்பார்கள். அப்படி எதும் வந்தால் அந்த எண்களில் இருந்து வரும் அழைப்புகள், எஸ்.எம்.எஸ்.களை தடை செய்யுங்கள்..போலீசில் புகார் கொடுங்கள்.யாராவது தேவையற்ற படங்களை அனுப்பினாலோ அல்லது உங்களை  படம் பிடிக்க முயன்றாலோ போலீஸ் உதவியை அணுகுங்கள்.
இரவில் பாடம் படித்தபின், வேறு எந்த வேலையையும் செய்யாமல் தூங்கச் சென்றுவிடுங்கள்!! இதனால் ஞாபகமறதிப் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். !!இரவில் செல்போனை வைத்து கொண்டு நெடுநேரம் SMS செய்துகொண்டு இருந்தால், பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். ஜாக்கிரதை.!!  விளையாட்டாக நாம் நினைத்து செய்வது.. வினையை தேடி தரும்.!!! செல்போன் என்ன உபயோகத்திற்காக பயன்படுத்துகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். குறிப்பாக கால் டைவேர்ட் யுஸ்  பண்ணி இன்று பல பெண்கள் தங்கள் பாய் ப்ரென்ட்  உடன் உரையாடுவதை தன் தோழிகளுக்கு பெருமையாக தங்களுக்கு வரும் காள்களை திருப்பி விட்டு ரசிக்கிரார்கள் வெகுநேரம் .!!
 கடைசியாக ஒன்று.. ..  நமக்கு என்று ஒரு பாதுகாப்பு வலையம் தேவை. !!!
அளவுக்கு  மீறினால் அமிர்தமும் நஞ்சு .  என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

22 கருத்துகள் :

  1. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு . என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

    ...rightly said!

    பதிலளிநீக்கு
  2. ம்..அதுப்போல கான்ஃபரன்ஸ் காலும் ஆபத்துதான் ரெக்காட் செய்ய முடியும்..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  4. எங்கே.. யாரு கேக்கிறாங்க.. ரொம்பக் கொடுமை..

    பதிலளிநீக்கு
  5. இளைஞர்களுக்கு மிகவும் அவசியமான அறிவுரை கீதா.

    பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  6. ஜெய்லானி வாங்க. கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. philosophy prabhakaran தங்கள் வரவு நல்வரவு ஆகட்டும்! தொடர்ந்து ஆதரவு கொடுத்து என்னை ஊக்குவிங்கள்.. Thanks.

    பதிலளிநீக்கு
  8. ஹுஸைனம்மா Thanks!
    நீங்க சொல்ற மாதிரி,இந்த
    காலத்து டீன் ஏஜ் எங்கே கேட்கிறாங்க..?

    பதிலளிநீக்கு
  9. ரொம்ப நேரம் உபயோகிப்பவர்கள் தலைவலி வருகிறது என்று சொல்வதை கேட்டு இருக்கிறேன். அவசியத்துக்கு என்று மட்டும் உபயோகித்தால் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. இப்ப யாருமே காது கொடுத்து கேட்கும் நிலையில் இல்லை
    அதான் காதில்பாட்டு கேட்க எப்போதும் செவிட்டு மிஷின் போல ஒன்று மாட்டி கொள்கிறார்களே
    ரோடில் நடந்து போகிறார்கள் , பின்னாடி வண்டி வருவதுகூட தெரிய வில்லை,
    வண்டி காரனா இரங்கி வந்த் தள்ளி விட்டாதான் நகருவார்கள் போல இருக்கு.

    பதிலளிநீக்கு
  11. உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
    நல்லப்பதிவு., இன்றைய சமுகத்தில் செல்போன்களால் இணையற்ற நன்மை பெறப்படினும் அதன் இன்னொரு கோணம் மனித மனங்களுக்கு கேடுவிளைவிக்கவும் தவறவில்லை., அதற்கு அழகான உதாரணம் இந்தப்பதிவு., பாராட்டுக்கள் சகோதரி., இறைவன் நாடுவான்., விழிப்புணர்வுமிக்க இதைப்போன்ற ஆக்கங்களால் உங்கள் மூலம் இச்சமுதாயம் பயன் பெறட்டும்.,

    பதிலளிநீக்கு
  12. G u l a m Thanks.
    தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக நன்றி

    பதிலளிநீக்கு
  13. வாங்க ஜலீலா மேடம்,சமீபத்தில் நான் கண்ட ஒரு வாசகம்...வண்டியை ஓட்டிகொண்டு இருக்கும் போது மொபைலை எடுக்காதே..கூப்பிடுவது எமனாக கூட இருக்கும் என்று!!! ஆனால் இந்த காலத்து டீன் ஏஜ் எங்கே கேட்கிறாங்க ? நீங்க சொல்றா மாதிரி
    வண்டி காரனா தள்ளி விட்டாதான் நகருவார்கள் .

    பதிலளிநீக்கு

welcome