திங்கள், நவம்பர் 22, 2010

மனசே மனசே


கல்யாண மண்டபம் கலை கட்டியது !

 மாப்ளை அழைப்பு நலுங்கு முடிந்தது.
மண்டபம் அமைதியில் இருக்க இரண்டு
பேர் குரல் மட்டும் சத்தமாக ஒலித்தது !!
 கண்டிப்பா அக்கா வரமாட்டாங்க !! எவ்வளவு
பந்தயம்? 100 ?   இல்லை  500 ? நான் சொல்றேன்
1000 பெட் ?   நீ எஇன்ன சொல்றே? வரமாட்டாங்க..
பாக்கலாம்...பாக்கலாமா? பாத்ருவோம்.அதையும்.
விஷயம் இது தான்.!!!
35 வருடங்களாக குடும்ப சண்டை .... எந்த நல்லதும்
கெட்டதும் கிடயாது !! இரண்டு குடும்பங்கள் நடுவில்.
பாச மலர்களாக இருந்த அக்கா தம்பி இடையில் பணம்
படுத்திய பாட்டால் ....35 வருஷ பகையாக மாறியது.
இருக்கார்களா ?செதார்களா ? என்று கூட தெரியாமல்
 ஒருவரை ஒருவர் பார்க்காமல் காலம் கடந்தது .
தம்பி மகன் ஆனந்த கு தான் அன்று திருமணம் !!
அந்த திருமணத்துக்கு தான் அக்கா வருவார், வரமாட்டார்
என்று பொடிசுகள் பந்தயம் கட்டி கொண்டு சண்டை இட்டனேர்.
அத்தை எப்படி இருப்பார்கள்? நான் இரண்டு வயதில் பார்த்தது ..
முகம் மறந்து போயிருச்சு ! அத்தை பென்னோடு ஒளிந்து
விளையாடியது நன்றாக ஞாபகம் இருக்கிறது ....இந்நேரம்
எப்படி இருப்பார்கள்? மனசு ஒரே பர பரப்பாக இருந்தது.
ஆனந்து நான் அத்தை பேசுறேன் பா .. மண்டபத்தை நெருங்கி
 கொண்டு இருக்கிறேன் என்று சொன்னவுடன் கையை
 கிள்ளி பார்த்து நிஜம் என்று உணர்ந்து மண்டபம் வெளியே
அப்பா அம்மாவுடன் அத்தயை  எதிர் நோக்கி காத்து இருந்தனர்.

மறப்போம் மன்னிப்போம் என்று அத்தை வந்து இறங்கினார்.
மண்டபமே அமைதி பூங்காவாக காட்சி அளித்தது.முடி எல்லாம்
பஞ்சாக நரைத்து கண்களை சுருக்கி ,கம்பு ஊன்றி,தடுமாறி
நடந்து வந்த வரை அக்கா என்று ஆற தழுவி ஒ என்று கதறி
அழுதார் தம்பி. 35 வருடங்கள் உங்களை பார்க்காமல் பாவி
ஆக இருந்து விட்டேனே .. எல்லாம் விதி !!என்று கதறினார்.
மற்ற சகோதரர்களும் ஓடி வந்து சாஸ்டாங்கமாக அக்கா
காலடியில் கண்ணீர் மல்க விழுந்து எழுந்தனர்...

மண்டபமே ஸ்தபித்து நின்றது ஒரு கணம்....நானும்
ஆச்சர்யத்தில் மூழ்கி நின்றேன் சில நொடி...எங்க
இல்ல விழாவில் நடந்தது இந்த காட்சி.பிறகு அனைவரும்
சந்தோச அலையில் இரு குடும்பங்களும் சேர்ந்ததை
நினைத்து மகிழ்ந்தோம் !எல்லாம் அவன் செயல் .

மனிதன் பிறப்பது ஒரு முறை.கால நேர சூழலுக்கு தக்க
மாறி மனிதனாக வாழ்பவன் மனிதன். என்பதை அறிந்தோம்.

5 கருத்துகள் :

welcome