திங்கள், நவம்பர் 15, 2010

தோளோடு தோள்




சமீபத்தில் அவள் விகடனில் நான் படித்த ரசித்த உண்மையான
ஒரு பகுதி "பெண்ணுக்கு பெண்ணே எதிரி " என்ற தலைப்பில்
நான் உணர்ந்த ஒரு தத்துவம் இங்கே பகிர்கிறேன் !



 

பிரமிட் என்று ஒரு உடற்பயிற்சி யில்  பத்து பெண்கள் ஒருவரை
ஒருவர் பிடித்து கொண்டு வட்டமாக் தலை குனிந்து கொண்டு நிற்க   
வேண்டும்.அவர்கள் தோள் மீது ஐந்து பெண்கள் தலை குனிந்து
நிற்க வேண்டும்.அவர்கள் மீது மூன்று பேர் ,அடுத்து இரண்டு பேர்
கடடைசியாக இருவர் தோள் மீது கால வைத்து  ஒரு ஒரு பெண் 
தேசிய கொடி வீசியபடி நிற்பாள்.

கை தட்டும கூட்டம் உச்சியில் நிற்கும் அந்த ஒரு பென்னை மட்டுமே    
பார்ப்பார்கள்.உச்சியில் நிற்கும் பெண் கீழே விழாமல் இருக்க  பத்து
பெண்களில் ஒருவர் கூட மறந்தும் தலை தூக்கி பார்க்க கூடாது.அப்படி
தலை நிமிர்ந்து பார்தால் உச்சியில் நிற்கும் அந்த பென்னின் பேலன்ஸ்  
போய் விடும்...அழகான வாழ்கை தத்துவம்..



நன்றி அவள் விகடன் 
ஸ்ரீ பாரதி பாஸ்கர் 
கூகுள் இமஜேஸ் .

இன்று பெண்கள் அடைந்து இருக்கும் எல்லா முன்நேற்றங்களும்
இந்த பிரமிட் போல தான்.நமக்காக உழைத்த அம்மா, அப்பா, அக்கா அண்ணன்
பாட்டி,தாத்தா,டீச்சர் ,தோழி,நண்பன் .... யார் யார் தோள் மீதோ நின்று ஒரு பெண்
ஏறி வருகிறாள்.அவளை கடந்து ஏறி போகும் இன்னொரு பெண்னுக்கு இவள்
தோள் தருவது மனிதாபிமானம் மட்டும் இல்லை தார்மீக கடமையும் கூட தான்!!

2 கருத்துகள் :

welcome