புதன், ஜூன் 02, 2010

ஸ்கூல் திறந்தாச்சு ..!
என் அக்கா பெண் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்து விட்டாள்.

இனி இருக்க போவது சென்னையில் !.இரண்டு பிள்ளைகள் .

பையன் III , std . பெண் UKG ,செல்கிறார்கள் நாளை முதல் ஸ்கூல்,

அங்கு ஜாலியாக பொழுதை கழித்தார்கள், இங்கு எப்படி ஸ்கூல்

சென்று வருவார்கள் ? எப்படி அவர்களை தினம் சமாளிப்பது ? என்று

மலைப்பாக இருக்கு சித்தி ! என்று போனில் கூறினாள் ..காரணம்

பிள்ளைகள் இந்தியா வேணாம் . அமெரிக்கா தான் நல்லா

இருக்கு. அங்கயே போலாம் வாங்க , என்று சொல்கிறார்கள் .

நான் அவர்களை பார்க்க சென்று இருந்த போது நம் நாட்டின்

அருமை பெருமைகளை பற்றி அவர்கள் ஸ்லாங்கில் எடுத்து

சொன்னேன் . அவர்களும் பாசமாக என்னை கீத்து கீத்து என்று

சுற்றி வந்தார்கள்,அவர்களிடம் இருந்து விடை பெற்று வர எனக்கு

கஷ்டமாக இருந்தது. இருவரும் நான் எப்ப திரும்பவும் அங்கு

வருவேன் ? என்று தினம் கேட்டு கொண்டே இருகிறார்கலாம்.

சரி மேட்டருக்கு வருவோம்!

சில யோசனைகள் மற்றும் எளிய டிப்ஸ் சொன்னேன் என் அக்கா மகளிடம்.

இது மற்றவர்களுக்கும் பயன் தரும் என்று இங்கு குறிப்பிடுகிறேன். இதோ ..

1 .குழந்தைகள இரவு சீக்கிரம் துங்க சொல்லுங்கள். .அபொழுது தான

காலையில் சீக்கிரம் எழுவார்கள். brush , செய்வது,விஷ் பண்ணுவது ,

சாமி கும்பிடுவது ...போன்றபழக்கங்களை ரெகுலராக செய்ய முடியும். ..

ரொட்டின் ஆக நடக்கும்.

2 . கால அட்டவனைக்கு ஏற்ப முதநாளே புத்தகம்,நோட்,பேனா,பென்சில்

etc , எடுத்து வைக்க உதவவும்., அது போல் சூ , பாலிஷ்

யூனிபோர்ம் அயர்னிங் முதல் நாளே செய்து விட்டால் நமக்கு

டென்ஷன் இருஇக்காது.

3 .ஸ்கூல் என்றாலே தண்டனை தரும் இடம், படித்து கொண்டே இருக்க

வேண்டும் என்ற மன பக்குவத்தை மாற்ற வேண்டும் .சாதனை செய்ய

உரிய இடம் என்ற பாசிட்டிவ் திங்கிங் ஏற்படுத்துவது மிக அவசியம்.

4 .குழந்தைகள் பள்ளி விட்டு வந்தவுடன் புத்தகம், சூ , யூனிபோர்ம் கழற்றி

அதுக்கு உரிய இடத்தில வைத்து , உடை மாற்றி கை மற்றும் கால்கள்

கழுவ செய்து டிபன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

5 .அன்றைய தினம் பள்ளியில் நடந்தவற்றை பொறுமையாக கேட்கவும்.

6 . உங்களிடம் எதையும் மறைக்காமல் மனம் விட்டு பேசி ஒரு நண்பனை

போல் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும். அபோழ்து தான் ஒரு

வித பிணைப்பு ஏற்படும் . உங்களிடம் எல்லா விசயங்களை பகிர்வார்கள்.

7 .குழந்தைகளின் ஒழுக்கம் , திறன் மேம்படும் வகையில் தன்னம்பிக்கை ,

நீதி போதனைகள், உலக செய்திகள், வாழ்க்கை அடித்தளம்


முன்நேற்றதிற்கு வேண்டிய அணைத்து கருத்துகளை கதை போல்


சொல்ல வேண்டும்.வீண் பயம், தாழ்வு மனபான்மையை களைய வேண்டும்,


8 . அறிமுகம் இல்லாத நபர்களை நம்ப வேண்டாம் , அவர்கள் பின்னாடி

செயல்ல வேண்டாம், எதுவும் சாப்பிட கொடுத்தால் வாங்க வேண்டாம்

குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அறிமுகம் இல்லாத நபர்களிடம் சற்று

ஜாக்கிரதையாக பழக வேண்டும் , சற்று விலகி நின்று பேச வேண்டும் ,

என்று சொல்லி தர வேண்டும் !

9 . அன்றைய தினம் நடத்திய பாடம் , ஹோம் வொர்க் போன்றவற்றை

அன்றே செய்து முடிக்க உதவ வேண்டும். அபோது தான் டிவி பார்க்க

அனுமதி தருவேன் என்று சொல்லி அவர்கள் கடமையை

அறிவுருதுங்கள் .

10 .சத்தான உணவுகளை சமைத்து , அதில் என்ன சத்து உள்ளது , அதனால் \

என்ன பயன் நமக்கு என்ன கிடைக்கும் என்பதை ஆரம்பத்திலயே

அவர்களுக்கு உணர்த்துங்கள். அவர்களும் புரிந்து கொள்வார்கள்.

11 . கடைசியாக ஒன்று .. ஸ்நாக்ஸ் என்ற பெயரில் பாஸ்ட் பூட், மற்று ம்

பிசா, கிரீம் பிஸ்கட், நூட்ல்ஸ் போன்றவைகள் கொடுக்காமல்

(ஸ்கூல்க்கு) சத்தான முளை கட்டிய பயறு சுண்டல்கள், மாங்கோ

டிலைட், சத்து மாவு உருண்டை, பேரிசை , நட்ஸ் போன்றவற்றை

கொடுங்கள்.குறிப்பாக தண்ணீர் நிறைய பருக சொல்லுங்கள்.

உங்கள் வாரிசுகளை அன்போடு பராமரியுங்கள் . ஆனந்தமாக

கொண்டாடுங்கள் , அவர்களும் அன்போடு வளருவார்கள். நன்றி.

4 கருத்துகள் :

  1. நல்ல டிப்ஸ் , அந்த மூனாவது டிப்ஸ் கண்டிப்பா இருந்தா மற்றது தானா வரும். :-)))

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் கரெக்ட் ஆக சொன்நீர்கள்
    ஜெய்லானி .

    பதிலளிநீக்கு

welcome