ஞாயிறு, நவம்பர் 22, 2009

health

சே‌ற்று‌ப் பு‌ண்ணு‌க்கு இதமான மரு‌ந்து


மழை‌க் கால‌ங்க‌ளி‌ல் ம‌னித‌ர்களை பெ‌ரிது‌ம் பா‌தி‌க்கு‌ம் நோய‌் சே‌ற்று‌ப் பு‌ண்ணாகு‌ம். இத‌ற்கு கை வை‌த்‌திய‌த்‌தி‌ல் ந‌ல்ல மரு‌ந்து உ‌ண்டு.

அதாவது விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தடவ ‌‌விரை‌வி‌ல் குணம் கிடைக்கும்.

வாழைப்பூ, வாழைத்தண்டு இவற்றை வேக வைக்கும் போது ஒரு ஸ்பூன் மோர் ஊற்றினால், அதன் நிறம் மாறாது.

கல்லீரல் நோய்களை துளசிச் சாறு குணப்படுத்துகிறது.

பிரண்டையை நெய்விட்டு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வர, நல்ல பசி உண்டாகும்.

வாழைப்பூவை, வாரம் ஒரு நாள் கூட்டாக செய்து சாப்பிட, வயிற்றுப்புண் வராது. வாழைப்பூ, கருப்பை கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

சிறு நீரக கோளாறு இருப்பவர்கள், வாழைத் தண்டை சாறு எடு‌த்து அருந்த, பலன் கிடைக்கும்.

பு‌ற்றுநோ‌யி‌ன் பா‌தி‌ப்பு

ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் பு‌ற்றுநோயா‌ல் மரணமடைபவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து‌க் கொ‌ண்டே வரு‌கிறது.

வா‌ய், வ‌யிறு, நுரை‌யீர‌ல் என எ‌ந்த‌ப் பாக‌த்தையு‌ம் பு‌ற்றுநோ‌ய் ‌கிரு‌மிக‌ள் ‌வி‌ட்டுவை‌ப்ப‌தி‌ல்லை. இ‌ந்த‌க் கொடிய ‌வியா‌தி முத‌லி‌ல் உடலு‌க்கு‌ள் புகு‌ந்து ‌பிறகு மெ‌ல்ல மெ‌ல்ல மரண‌த்தை தரு‌கிறது.

பெ‌ண்களு‌க்கு கரு‌ப்பை பு‌ற்றுநோயு‌ம், மா‌ர்ப‌க‌ப் பு‌ற்றுநோயு‌ம் அ‌திகமாக‌த் தா‌க்கு‌கிறது. எ‌னினு‌ம் இ‌தி‌ல் மா‌ர்பக‌த்தையோ அ‌ல்லது கரு‌ப்பையையோ அக‌ற்றுவதா‌ல் உ‌யிரு‌க்கு எ‌ந்த ‌பிர‌ச்‌சினையு‌ம் ஏ‌ற்படுவ‌தி‌ல்லை.

த‌ற்போது மா‌றி வரு‌ம் உணவு‌ப் பழ‌க்கமு‌ம், வா‌ழ்‌க்கை முறையு‌ம் பு‌ற்றுநோ‌ய்‌‌க்கு‌க் காரணமா‌கி‌ன்றன.

புகை‌ப்‌பிடி‌த்த‌ல், பய‌ன்படு‌த்‌திய எ‌ண்ணெயை ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் பய‌ன்படு‌த்துவது, மூதாதையரு‌க்கு ‌‌பு‌ற்று நோ‌ய் இரு‌ந்தா‌ல் ‌பி‌ள்ளைகளு‌க்கு‌ம் வருவரு என பல காரண‌ங்க‌ளா‌ல் பு‌ற்றுநோ‌ய் தா‌க்கு‌கிறது.

‌‌தினச‌ரி அரை ம‌ணி நேரமாவது ‌விய‌ர்வை வரு‌ம் வகை‌யி‌ல் நட‌‌ப்பது, குறை‌ந்தது 3 ‌லி‌ட்ட‌ர் த‌ண்‌ணீ‌ர் குடி‌ப்பது, அ‌திக உ‌ப்பை அறவே த‌வி‌ர்‌ப்பது போ‌ன்றவ‌ற்றை செ‌ய்து வ‌ந்தா‌ல் ‌சிறு‌நீரக‌ம் ந‌ல்ல முறை‌யி‌ல் செய‌ல்பட உதவு‌ம்.

வயதானவ‌ர்க‌ள்ல் கூடுத‌ல் ‌புரத‌த்தை த‌வி‌ர்‌த்த‌ல், ச‌ர்‌க்கரை நோ‌ய், உய‌ர் ர‌த்த அழு‌த்த நோயை முறையான ‌சி‌கி‌ச்சை மூல‌ம் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளுத‌ல் போ‌ன்றவ‌ற்றை செ‌ய்தா‌ல் ‌சிறு‌நீரக‌‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.

லேசான கா‌ல் ‌வீ‌க்க‌ம், முக ‌வீ‌க்க‌த்து‌க்கு ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ‌சிறு‌நீரக நோ‌ய்க‌ள் காரணமாக இரு‌க்கலா‌ம்.

‌சிறு‌நீ‌ர்‌ப் பாதை நோ‌ய்‌த் தொ‌ற்றை அல‌ட்‌சிய‌ப் படு‌த்த‌க் கூடாது. ‌சிறு‌நீ‌ர் வரு‌ம் பாதை‌யி‌ல் அடை‌ப்பை‌ப் ஏ‌ற்படு‌த்தவு‌ம், நோ‌ய் தொ‌ற்று மே‌ல் ப‌க்க‌ம் செ‌ன்று ‌சிறு‌நீரக‌‌ங்களை‌ப் பா‌தி‌க்கவு‌ம் செ‌ய்யலா‌ம்.

சிறு‌நீரக‌‌த்‌தி‌ல் க‌ல் உ‌ண்டா‌கி அதனை உடை‌த்து வெ‌ளியே‌ற்று‌ம் ‌சி‌கி‌ச்சையை செ‌ய்தாலு‌ம் கூட, ‌மீ‌ண்டு‌ம் க‌ல் உருவாக வா‌ய்‌ப்பு‌ள்ளது.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome