வியாழன், நவம்பர் 26, 2009

mobile

முகம் பார்த்து பேசும் செல்போனுக்கு “கிராக்கி”

3ஜி என்று அழைக்கக் கூடிய 3-வது தலைமுறை தகவல் தொழில் நுட்ப வசதியை சென்னை டெலிபோன்ஸ் கடந்த 3 நாட்களுக்கு முன் அறிமுகம் செய்தது. செல்போன் பேசுவரின் முகத்தை மறுமுனையில் உள்ளவர் வீடியோ படம் போல பார்க்கும் வசதி, இண்டர்நெட், சினிமா படம் பார்த்தல், டி.வி., சேனல்கள் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதன்மூலம் கிடைக்கின்றன.
சென்னை மக்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இந்த தொழில் நுட்பம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வசதியை பெற தகுதி யுடைய செல்போன்கள் வைத்திருப்பவர்கள் திட்டத்தில் சேர விரும்பினால் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் மையத்திற்கு சென்று பெறலாம். இதற்குரிய சிம்கார்டு விலை ரூ.59 ஆகும்.

ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் களாக இருப்பவர்களும் இத்திட்டத்தில் சேரலாம். ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் 3ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த அதற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

திட்டம் அறிமுகப்படுத்திய 2 நாட்களில் 700 பேர் 3ஜி இணைப்பை பெற்றுள்ளனர். இதில் 450 பேர் புதிதாக இணைப்பு பெற்றவர்கள். 250 பேர் ஏற்கனவே பி.எஸ்.என்.எல். வாடிக்கை யாளர்களாகும்.

திட்ட அறிமுக சலுகையாக உள்ளூர் அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 30 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்புக்கு 50 பைசாவும் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்திற்குள் 1 லட்சம் வாடிக்கை யாளர்களை இத்திட்டத்தில் சேர்க்க பி.எஸ்.என்.எல். இலக்காக கொண்டு செயல்படுகிறது.

முகம் பார்த்து பேசும் இந்த வசதி விரைவில் தமிழகம் முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. முதலாவதாக கோயம்புத்தூர் நகரில் செயல்படுத்தப் படுகிறது.

1 கருத்து :

welcome