ஞாயிறு, ஆகஸ்ட் 19, 2018
Kalakshetra Foundation - History and Principles
"The only place success comes before work is in the dictionary."
புதன், மார்ச் 07, 2018
Tamil Magalir Thinam Kavithai (Women's Day Wishes Tamil)
"The only place success comes before work is in the dictionary."
செவ்வாய், பிப்ரவரி 27, 2018
மாற்றங்கள் வேண்டும் !! ஆம் நான் மாறிவிட்டேன் மம்மி ! உண்மை ...
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .
உடுமலையில் இருந்து சென்னை மாறினோம் ...
சில மாற்றங்களை தான் செய்து பார்ப்போம் என்று பிரிட்ஜ் எடுத்து செல்லாமல் கடந்த சில காலமாக குளிர் சாதன பெட்டி இல்லாமலே பழக கற்று கொண்டோம் . முதல் ஒரு வாரம் மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஜில் தண்ணீர் குடிக்காமல் தாகமாக தண்ணீர் குடித்த மாதிரியே இல்லை.
ஒரு சில நாட்கள் 7அப் ,மற்றும் ஸ்ப்ரைட் லெமன் சோடா வாங்கி பருகினோம். இருந்தாலும் தாகமே அடங்கவில்லை . என் மகள் ஒரு மண் குடுவை வாங்கி அதில் தண்ணீர் மற்றும் நன்னாரி வேர் போட்டு வைத்தாள். .
வெளியே சென்றுவந்த எனக்கு மனமான குளிர்ந்த நீரை கொடுத்தாள் .
அப்படியே சொர்கத்துக்கு செல்வது போல் இருந்தது. இன்னும் ஒரு டம்ளர் கேட்டு வாங்கி குடித்தேன் .புத்துணர்ச்சி பெற்றேன் .தேங்க்ஸ் டா என்றேன்.
அடுத்து பிரிட்ஜ் இல்லாததால் என் கணவர் 3 நாட்கள் ஒரு முறை பச்சை பசேல் என்ற காய்கறிகள் மற்றும் பழ வகைகள் பிரெஷ் ஆக வாங்கி வந்தார்.
பிரிட்ஜ் இல்லாததால், உடனுக்கு உடன் செய்து சுவை குன்றாமல் சாப்பிட்டோம் ! அடுத்து என் பங்குக்கு , இட்லி மாவு இரண்டு நாட்களுக்கு மட்டும் அரைத்து ஸ்டோர் பண்ணாமல் உடனே செய்து தீர்த்தோம் .
பால் மற்றும் தயிர் அன்றைக்கு தேவை ஆனதை மட்டும் வாங்கினோம் !
நாம் என்ன சாதித்தோம் என்று யோசித்தேன் ..
ஆம் ... சத்துக்கள் குறையாமல் வீணாகாமல் காய் கறிகளை உண்டோம் .
தினம் வாக்கிங் சென்று பால் வாங்கி பிரெஷ் ஆக உபயோகித்தோம் !!!
இரண்டு நாட்கள் மட்டும் இட்லி தோசை செய்து , மற்ற நாட்கள் variety ஆக
வேற வேற டிபன் அயிட்டம் செய்து , உனக்கு இட்லி தோசை தவிர வேற ஒன்னும் செய்ய தெரியாதா? என்று கேட்கும் மகளிடம் இருந்து இப்போ சபாஷ் வாங்குகிறேன்.!!!இயற்கையான மண் குடுவை தண்ணீர் பருகி வருகிறோம் .
மகிழ்ச்சி , இதை விட முக்கியமாக மிக பெரிய சாதனை என்னவென்றால் ....
கரண்ட் பில் செலவு வெகுவாக குறைந்து இருப்பதை கண்டு ஆச்சரிய பட்டேன்
மற்றும் ஒரு நிகழ்வை கண்டேன்.. இவைகளை பிரெஷ் ஆக வாங்குவதற்கு தினம் போட்டி போட்டு கொண்டு வாக்கிங் சென்றதால் வெயிட் சற்று குறைந்ததை கண்டு அதிகம் ஆச்சரியம் பட்டேன், மாற்றம் ஒன்றையே நான் உணர்கிறேன் !!!! பிறக்கும் போதே இவைகளோடு நாம் பிறக்கவில்லை... இறக்கும் போதும் இவை நம் கூட வர போவதில்லை ! எதற்கு இது நடுவில்?
வாங்க பழகலாம்..நாம் நினைத்தால் ...எதையும் மாற்றலாம் .. உண்மை இது.

- அனைத்தும் நாம் உருவாக்கியது !!! நம் தான் முடிவு செய்ய வேண்டும் .
need மற்றும் want எது என்று . Need என்றால் தேவை .Want என்றால் ....Luxurious
அடிப்படை தேவை நியாயமானது ... Luxurious ...அவசியமா? யோசியுங்கள்.
சனி, மே 20, 2017
சனி, ஏப்ரல் 09, 2016
வலி
"The only place success comes before work is in the dictionary."
நீங்கள் பிரிந்த பின்தான் அதன் அர்த்தம் புரிகின்றது !!
அறிந்தேன் வலியை
என் தாய் ,தமையன் பிரிவின் வலி அறியாமல்
நீங்கள் விடு போன சுகமான நினைவலைகளை
நீங்கள் பிரிந்த பின்தான் அதன் அர்த்தம் புரிகின்றது !!
என்னுடன் இனி நீங்கள் வர போவதில்லை என்று...
கனத்த இதயதத்துடன் .. வலி என்ற சுமையை
தாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கேன் .


புதன், மே 13, 2015

நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி பளோகில் ...
என் சகோதரன் சமீபத்தில் எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாக இறைவனடி
சென்று விட்ட துக்கத்தில் என்னை மறந்து ப்ளாக் பக்கம் வர முடியலை.
மீண்டு வர பல நாட்கள் ஆகி விட்டது!
மீண்டும் ஆரம்பம் ...
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
- Martin Luther King Jr.
செவ்வாய், மே 08, 2012
அம்மாவுக்கு ஒரு கடிதம்
அம்மா நீ போய் 8 மாதங்கள் ஆகிவிட்டது !!! என்னை பற்றி நினைத்து பார்த்தாயா? ஒரு முறையாவது என்னை பார்க்கணும்னு உனக்கு
தோணுச்சா? நான் தினமும் ஒரு முறையாவது உன்னை நினைத்து
கொள்வேன்..நீ ஒரு முறையாவது என்னை வந்து பார்ப்பாய் என்று
தினமும் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன்.! வருவாயா ம்மா ?
சில சமயம் அசரிரிரி போல் சின்ன சின்ன அலை கற்றைகள் நடுவில்
உன் குரல் மெலிதாக என்னை தழுவி செல்லும்.மெய் சிலிர்த்து போனேன்
அம்மா!!! இதே நாள் போன வருடம் நீ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனது
பசுமையாக மனதில் உள்ளது அம்மா .. பேபி ஆஸ்தெரிலியா சென்று
இந்தியா வரட்டும் என்று உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்தாயே .
அன்னயேர் தினத்தில் உனக்கு முடியாமல் போனதே அம்மா ..இந்த
அன்னையை நான் இனி எப்போ பார்ப்பேன் திரும்பவும்/?அன்னையர்
தினம் கொண்டாட நீ இல்லையே அம்மா ! போகும் போது ஒரு வார்த்தை
என்னிடம் சொல்லி போக உனக்கு ஏன் மனசு இல்லை அம்மா? உனக்கே தெரியாதா அம்மா நீ போறாய் என்று? அந்த வெங்கடாஜலபதி உன்னை
தாரா அம்மா? இந்த அன்னையர் தினத்திலாவது வருவாயாமா?
நீ இல்லாத வீடு வெரீர்னு போச்சுமா ..உன் குரல் கேட்காத நாட்கள்
என்னை நரகமாக்கிறது அம்மா/ ஒரே ஒரு முறை அந்த வெங்கடாஜலபதி
இடம் சொல்லி உன் முகத்தை காட்ட சொல்லும்மா ! மனசு கனமா
இருக்குமா ! உன் குரலே கேட்காமல் சோர்ந்து போனேன் அம்மா .
வாம்மா ... வா ... வந்துட்டு போம்மா..அனாதையாக இருபது போல்
உநேர்கிறேன் அம்மா . உன் திருமுகத்தை காட்டி என் மனபாரத்தை
இறக்கி வை அம்மா . வெங்கடாஜலபதி கருணை காட்டுவார் அம்மா.
வியாழன், மே 03, 2012
நட்பு
சமீபத்தில் எங்கள் பாமிலி நண்பர் வீட்டிற்கு வெகு நாட்கள் பிறகு சென்றேன் !!
நாங்க சுகர் மில் குவார்டேர்ஸ் ல் ஒரே குடும்பம் போல் வசித்த
காலம்...இருபது வருட கதை !!! நேற்று நடந்தது போல இருந்தது.!!! ரமேஷ்,
விஜி ...அவர்களுக்கு ஸ்ரீவத்சன் ,வித்தா என்று இரண்டு குழந்தைகள்.ஐயர்
என்றாலும் எந்த பாரபட்சம் இல்லாமல் அனைவர்க்கும் உதவுவார்கள் ! நாங்க
என்றால் மிகவும் இஷ்டம்.!நானும் என் உடன் பிறவா அண்ணனாக தான்
ரமேஷ் அண்ணாவிடம் பழகினேன். சோகம்,துக்கம் ,மகிழ்ச்சி அனைத்தையும்
பரிமாறிகொள்வோம்.என் கணவரும் அப்படியே.! எதிர் வீடு என்பதால் எங்க
வீட்டை விட அவர்கள் வீட்டில் தான் பொழுதை அதிக நேரம்
போக்குவோம்...நேரம் போவதே தெரியாத அளவு பேசியே நேரம் நகர்ந்து
விடும்..என் மகள் அவர்கள் வீட்டில் தான் எபோழுதும் விளையாடுவாள்
விடுவார்கள்..கல்யாண வீடு போல் கல கல என்று ஜாலியாக இருக்கும்.
நடுவில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறைந்தன எங்களுக்குள் !
ரமேஷ் அண்ணா ட்ரான்ஸ்பர் ஆகி வீட்டை காலி பண்ணி சென்று விட்டார்.
எதையோ இழந்தது போல் இருந்தது அவர்கள் வீட்டை பார்க்கும் போது
எதையோ இழந்தது போல் இருந்தது அவர்கள் வீட்டை பார்க்கும் போது
எல்லாம் வெறிர் என்று மனசு கனமாக இருந்தது. கால போக்கில் நாட்கள்
வேகமாக சென்றதால் .... அதிகம் அவர்கள் பற்றி நினைக்க தோன்றவில்லை !
எங்கள் நட்பு ஹலோ பை ... அளவில் சென்று விட்டது.!!! நாங்களும்
குவார்டேர்ஸ் விட்டு வந்து விட்டோம். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள்
இருந்தாலும் நட்பை அதிகம் பாதிக்க வில்லை !!அவர்கள் வெகு நாட்கள்
கழித்து கூட எங்களை பார்க்க எபோழுதாவது வருவார்கள் ..நாங்க சந்தித்த
பின்பு கூட எங்களால் சகஜமாக பேச முடிந்தது.!!பழய கதைகள் எல்லாம் பேசி
மகிழ்வோம்.!! சுவாரசியமாக இருந்தது எங்கள் நட்பு.!! இந்த முறை சென்னை
சென்று இருந்த போது.. ரமேஷ்-விஜி யை சென்று பார்த்து வரலாம் என்று ..
மிகுந்த உற்சாகத்துடன் ...இப்ப தான் அண்ணா வீட்டுக்கு வழி தெரிஞ்சதா?
என்று கடிந்து கொண்டார்..... மறு நாள் அவர்களை பார்த்த பிறகு பத்து கிலோ
குறைந்தது போல் மனசு லேசாக இறக்கை கட்டி பறந்தது!! பிறகு என்ன
அன்றைய பொழுது பழய கதைகளை பேசி நேரம் ஓடியது .. மீண்டும் எப்ப
பார்ப்போம்? என்று ஆயாசமாக இருந்து !! இது தான் தெய்வீக நட்பா ? சொந்த
பந்தங்கள் விட சுற்றி இருக்கும் நட்பே இனியதாக இருந்தது.அந்த
நிகழ்வுகளை நினைத்தாலே இனிக்கின்றது!.மற்றது எல்லாம் மறந்து
விடுகிறது... அத்தகைய நட்பு என்றும் தொடர ஆண்டவனை வேண்டுகிறேன்.
What to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., Dinamalar
What to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., Dinamalar
"The only place success comes before work is in the dictionary."
"The only place success comes before work is in the dictionary."
சனி, ஏப்ரல் 14, 2012
தேர் திருவிழா
எங்க ஊரு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.!
ஒரு வாரம் முன்பு இருந்தே களை கட்டி விட்டது.
கடைகள் அமைக்கப்பட்டு ஜே ஜே என்று கூட்டம்.
ஓவரு வருடமும் வித்யாசமான நிகழ்சிகள் இடம்
பெறும். நானும் என் மகளும் தேர் நடைபெறும் இரண்டு
நாட்களுக்கு முன்பே ஒரு விசிட் அடிப்போம்.பிறகு கூட்டம்
அதிகம் ஆகி விடும் என்பதால்..ஊசி பாசி கடைகள் முன்பு தான்
என் மகளுக்கு அதிகம் ஆர்வம்..சுலபத்தில் கடையை விட்டு
சீக்கிரம் நகரமாட்டாள்!! அத்தனை ஆர்வம்... தோடு ,பொட்டு..
வளையல் மோதிரம் என்று நேரம் போவதே தெரியாத அளவு
கண்கள் விரிய ஆர்வத்துடன் .. வாங்கிய பின்பு தான் நிம்மதி,,
ஒரு நாள் பத்தவில்லை .. நாளை மறுபடியும் வரலாம். என்று
மறுநாளும் எங்கள் ஷாப்பிங் நீடிக்கும்.ஒரு வழியாக முடிந்தது.
அம்மா dog ஷோ இந்த முறை புதிதாக சேர்த்து இருக்கிறார்கள் ..
போலாம் மா !! இம்..அதையும் தான் பாப்போம்..டிக்கெட் வாங்கி
நுழைந்தோம் ...உட்கார இடம் இல்லை ..கால் கடுக்க நின்றோம்..
ஷோ ஆரம்பித்த பாடில்லை. ஐ ந்து நாய்கள் விட்டால் போதும்
என்று ரெஸ்ட் எடுத்து கொண்டு இருந்தது..
வாங்க வாங்க சீக்கிரம் வாங்க என்று மைக்கில் அழைத்த வண்ணம்
இருந்தநேர். ஒரு வழியா கூட்டம் சேர்ந்தவுடன் .. ஆரம்பித்தார்கள்.
பிறகு நெருப்பு வலயத்தை ஒவேன்றாக தாண்டின !! அடுத்து
செல்போன் எங்களிடம் வாங்கி மற்றொருவரிடம் கொடுத்து
கண்டு பிடிக்க சொன்னார்கள். கச்சிதமாக கண்டுபிடித்தது.
பார்வையாளர்களை சுற்றி வந்தது.டான் டான் என்று கேட்கும் கேள்விகளுக்கு
ஏற்ற வண்ணம் பார்வையாளர்கள் அருகே வந்து விடை தந்தது ஆச்சரியம்.
பெரிய மீசை இந்த கூட் டத்தில் யார் வைத்து இருக்கார்கள்? என்றார் மைக்கில்.
ஒரு முறை சுற்றி வந்து கரெக்டாக கூட்டத்தில் பெரிய மீசை வைத்து இருந்த
நபர் அருகே போய் நின்றது. அழகா ட்ரைன் பண்ணி இருக்கிறார்கள் !!!
அடுத்து இங்கு வயதில் மிக சிறிய நபர் யாரு? என்று கேட்டார்.
அத்தனை நபர்கள் நடுவே ஒரு பெண்மணி சிறு குழந்தை வைத்து இருந்தார்.
இரண்டு முறை சுற்றி வந்து சரியாக ...அவர் அருகே போய் நின்றது !!
அடுத்து இங்கு எந்த பெண்மணி அவர் புருசனோடு அதிகமா சண்டை
போடுவார்? என்றவுடன்.. சுற்றி வந்து ஒரு பெண்மணி அருகே சென்றது.
இங்கு உள்ளவர்களில் யார் அதிகமா சைட் அடிப்பது என்றவுடன் ஒரு பையன்
முன்பு சென்றது. அந்த பையனோ ... மெதுவாக எஸ்கேப் !! விடவில்லை ......
இங்குள்ள பெண்களில் யாரு தன புருஷன் மீது அதிகம் பாசம் வைத்துள்ளார் ?
அல்சேசன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு ஒரு ஜோடி முன்பு போய் நின்றது.
மிகவும் அழகிய பெண் யார்.. என்றார் அறிவிப்பாளர்.. அழகா இருந்த ஒரு
பெண் முன்பு சென்று நின்றது.!! எத்தனை அறிவு இந்த ஜீவனுக்கு.?
கடைசியாக அந்த காலத்தில் அழகாக இருந்த பெண்மணி யார்.. என்றார்..
அல்சேசன் இரண்டு முறை சுற்றி ஒரு வழியாக என் முன்பு வந்து நின்றது.
ஓ.. மனசு சிறகடித்து..பழய black அண்ட் white கு பறந்தது. !!! அடடா..
பழய நினைவுகளுடன் கிளம்பினேன்....அந்த காலத்து அழகியாக..!!!!
நன்றி
http://amma.oorodi.com/kolam
இந்த தேர் திருவிழா பற்றி நினைக்கும் போது..கண்டிப்பாக இதை சொல்லி
தான் ஆக வேண்டும்..போன தேர் திருவிழா போது எங்கள் வீடு அருகே
இருக்கும் தொன்நூற்றி நாலு வயது பாட்டி மிக ஆர்வமுடன் தன் வீட்டு
வாசலில் அழகிய தேர் கோலம் போட்டு தேரை தன வீட்டுக்கே கொண்டு
வந்து அசத்தி இருந்தார்.!! தேர் கோலத்தை தெருவே சென்று பார்த்தோம்.
என் அம்ம்மாவின் தோழி தான் அந்த பாட்டி. இந்த தேர் நோன்புக்கு என்
அம்மாவும் இல்லை, அந்த பாட்டியும் இந்த வருட தேர் திருவிழாவுக்கு
இல்லை என்பதை உணரும் போது மனசு கனக்கிறது.வேதனையில்.!
அனைவர்க்கும் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்
செவ்வாய், ஏப்ரல் 03, 2012
தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை அதிரடி சரிவு !!
கிராம் ஒன்று ------------------ இந்த அதிரடி சலுகை சில நாட்கள் மட்டுமே..
வாங்க சீக்கிரம் ....விலை ஏறுவதற்குள் வாங்கிட்டு வந்து விடலாம்.!!!!!!
தகவலுக்கு இங்கு கிளிக் பண்ணுங்க click hereclick please!
கிராம் ஒன்று ------------------ இந்த அதிரடி சலுகை சில நாட்கள் மட்டுமே..
வாங்க சீக்கிரம் ....விலை ஏறுவதற்குள் வாங்கிட்டு வந்து விடலாம்.!!!!!!
தகவலுக்கு இங்கு கிளிக் பண்ணுங்க click hereclick please!
வியாழன், மார்ச் 15, 2012
வெள்ளை வெளேர்
அரிசி ஒரு கிலோ நாற்பது ரூபாய் விற்க்கிறது.. ஒரு பிடி மீந்துபோனாலும்
யாருக்காவது கூப்பிட்டு கொடுங்க..!!இல்லை என்றால் ..வேறு எதாவது
செய்து பரிமாறுங்கள்.!! எங்கள் வீடு அருகே ... ஆற்காடு பொன்னி அரிசியில் சமைத்த சாதம் தெரு வாசல் அருகே வெள்ளை வெளேர் என்று கொட்டி
கிடந்தது.!!! யாருக்காவது கொடுத்து இருந்தால் ..பசி போக்கி இருக்கும்.
மனசே கேட்கலை.!! இப்படி கொட்டி போய் இருக்கார்களே என்று..!!!!
சமீபத்தில் எங்கள் வீட்டுக்கு விருந்தாளி வருவதாக சொல்லி ... சாப்பாடு
மீந்து விட்டது. (வரவில்லை)..நான் வடகம் போட்டது கிடையாது.!! சரி
ட்ரை பண்ணிதான் பாப்போம் என்று ..முயற்சி செய்தேன்.வெற்றி தான்..
சாதத்தை பிரிட்ஜ் ல் எடுத்து வைத்து , மறு நாள் காலை வெளியே ஆற
வைத்து பச்சை மிளகாய் , சீரகம் ,உப்பு போட்டு மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி பிளாஸ்டிக் கவரில் ஒரு ஸ்பூன் வைத்து தட்டி வடகம் இட்டு மேலே
வெய்யிலில் காய வைத்து /.., எடுத்து சும்மா பொரித்தால் ...கான் ப்லேக்ஸ்
மாதிரி மொரு மொரு என்று க்ரிஸ்ப்பி வடகம் (குர் குரே போல )செம taste !
அடுத்து என்ன பண்லாம் பழய சாதத்தை என்று யோசித்தேன்...இது போல
முதல் நாள் பிரிட்ஜ் ல் எடுத்து வைத்து, மறு நாள் ..மிக்சி யில் ஒரு சுற்று
சுற்றி .. கடுகு உளுந்தம்பருப்பு போட்டு தாளித்து ...வெள்ளரி மற்றும் காரட் மாங்கா துருவி தாளித்து ..மாதுளை முத்துக்கள் மற்றும் திராட்சை கலந்து
தயிர் சாதம் பண்ணி ...(பகள பாத் ) மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு
சாப்பிட்டோம்... ஒரே ரௌ ண்டில் . அனைத்து சாதமும் காலி..
அதனால் கொஞ்சம் மெனகெட்டு செய்தால் .. பழசும் புதுசு தான்.
வெயில் காலத்துக்கு குளு குளு என்று வயிறு கெடுக்காத தயிர் சாதம் ரெடி.
இன்னும் சிலர் நீராரம் ஊற்றி மீந்து போன சாப்பாட்டை , வெந்நீர் பழயதாக
கிராமங்களில் சாப்பிடுகிறார்கள். வைரம் பாய்ந்த உடம்புடேன் திடகார்த்தமாக
வயலில் வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.!
சாதம் மீந்து போனால் ...தயவு செய்து குப்பையில் போடாதீர்!!
ஒரு வேளை உணவுக்கு எத்தனையோ பேர் பசியில் அல்லாடி கொண்டு இருக்கிறார்கள் !! அவர்களை தேடி கண்டு பிடித்தாவது ...சேர்த்து விடுங்கள்.
என் அம்மா சொல்லுவார்கள் !!! பத்தும் பத்தாமல் சமைத்து பழகு !! என்று.
ஒரு நேரம் பத்தாமல் போனால் கூட பரவா இல்லை !! ஆனா சமைத்து
வேஸ்ட் பண்ணி வெளியே கொண்டு சென்று கொட்டாதே என்பார்கள்.
சாப்பாடு என்றவுடன் என் பள்ளி பருவம் பசுமையாக ஞாபகம் வருகிறது.
மார்ச் மாதம் முழுவதும் பள்ளியில் ஓவ்வரு வகுப்பு வாரியாக அனைவரும்
சாப்பாடு வீட்டில் இருந்து மொத்தமாக கொண்டு வந்து பூட் day செலேப்ரட்
செய்வோம்.வாழை இலை போட்டு வரிசையாக அமர்ந்து டீச்சர் கூட
சாப்பிடுவோம்.! ஒரே கலர்புல் ஆக இருக்கும் அன்றைய வகுப்பு.!!
வியாழன், மார்ச் 08, 2012
மகளிர் தின வாழ்த்துக்கள்

இந்த மகளிர் தின நன்னாளில் .. லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழிலில் ..சிறப்பு பொறுப்பாசிரியராக உடுமலை பகுதியில் என்னை நியமனம் செய்து உள்ளார்கள். நன்றி லேடீஸ் ஸ்பெஷல் !!
லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!!பெண்மையை போற்றுவோம் ..
எத்தனை முகம் பெண்களுக்கு என்பதை சகோதரி ஸாதிகா அழகாக
இங்கு சொல்லி இருக்கிறார்.. சென்று பாருங்களேன்.!!!!
click here!!!!
ஹாப்பி ஹோலி!!
புதன், பிப்ரவரி 29, 2012
பிப்ரவரி 29 அரிய நாள்
இன்று அரிய நாள் !! பிப்ரவரி 29 நான்கு வருடங்களுக்கு முறை
தான் வரும்..இன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் ..நான்கு
ஆண்டுகள் கழித்து தான் அடுத்து பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.
இன்று பிறந்தநாள் காணும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.!!
இந்த நன்னாளில் எனக்கு ஒரு அரிய செய்தி..ஆமாம் என் பள்ளி
தோழி இன்று என்னோடு பல வருடங்களுக்கு பிறகு என்னுடன்
போனில் பேசினாள்!!..அதற்கு face புக் குக்கு தான் என் நன்றியை
சொல்லணும்.ஆமாம் face புக்கில் இருந்த என் பள்ளி தோழிக்கு ஒரு
செய்தி அனுப்பினேன்.அவள் உடனே என்னுடன் தொடர்பு கொண்டு
பழய ஞாபகங்களை பகிர்ந்து கொண்டோம்.பொற்காலங்கள் அவை.
மூன்று வருடங்கள் ஒன்றாக படித்ததால்..அவள் முகம் நினைவு
இருக்கிறது!..எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று கேட்டாள்.
நாங்க இருவரும் ரொம்ப க்ளோஸ் இல்லை என்றாலும்..இருவரும்
ஒன்றாக நடனம் ஆடி இருக்கிறோம்.!! என் மனம் பின் நோக்கி போகிறது:
வஞ்சி கோட்டை வாலிபன் படத்தில் வரும் நடன போட்டியில்
வைஜெயந்தி மற்றும் பத்மினி அம்மா ஆடும் நடன காட்சியை நாங்க
இருவரும் சாதுரியம் பேசாதேடி !! என்று ஆவேசமாக ஆடி எல்லோர்
கை தட்டல்களை பெற்றது பசுமையாக ஞாபகம் உள்ளது..எங்களுக்கு
டிரஸ் மற்றும் காஸ்ட்யு ம்ஸ் வழங்குவது என் அருமை தோழி தான்.
இத்தனை வருடங்கள் கடந்தாலும்... அந்த நாள் ஞாபகம் !!!!!நன்றாக
மனதில் உள்ளது. அவரவர் குடும்பம் பற்றி பேசி .,பழய ஞாபங்களை
பகிர்ந்து கொண்டு போனதில் நேரம் போனதே தெரிய வில்லை..
என் தோழி சித்ரூபா இன்று ஒரு டாக்டர் !! child ஸ்பெஷல் லிஸ்ட் !..
அவள் கணவனும் ஒரு டாக்டர்.இருவரும் பிஸி ஆன டாக்டர்கள்.!!
மூன்று குழந்தைகள் ...சந்தோசமாக இருப்பதாக சொன்னவுடேன்
எனக்கு உடனே பார்க்கணும் போல் ஆசையாக இருக்கு.!!!!
என் ஆசை தோழி குரல் அன்று கேட்டது போலவே இருந்தது இன்று..
இந்த நாள் அரிய நாள்!!நன்றி இறைவா!!இருவரும் விரைவில் சந்திப்போம்.
சனி, பிப்ரவரி 25, 2012
நேரம் ஆச்சு
ஆகா மணி நாலு ஆச்சு!! நேரம் ஆச்சு...வந்து விடு வாரே..
அவசரம் அவசரமா மூஞ்சியை கழுவி மேக் அப் போட
துவங்கினாள்.....நீளமான பொட்டு நல்லா இலைன்னு நேத்து
சொன்னார் !!! சரி சரி இந்த வட்ட பொட்டை வைக்கலாம்..
அடுத்து செயின் ..,அந்த வெள்ளி செயின் னை போட சொன்னார்..
இன்ணைக் காவது மறக்காம போடணும்..இல்லைனா ஏன் போடலை ?
என்று கோபிப்பார்..!! அடுத்து சுற்று சூழல் ..அனைத்தையும்
கிளீன் ஆக எடுத்து அந்தந்த இடத்தில் வைத்தேன்.!!எல்லாம் சரியா
இருக்கானு பார்த்து செக் பண்ணி கொண்டாள்... அடடா இந்த ஹேர்
ஸ்டைலை கவனிக்காம விட்டேன்..இப்படி வழித்து சீவா தேனு எத்தனை
தடவி சொல்லி இருக்கேன் என்று கடிந்து கொள்வார்.!! திரும்பவும்
கலைத்து சரி செய்து .கொண்டாள். அடுத்து பொட்டு ., சே இப்படி
கோணலா வச்சா..அவ்ளோதான்...பொட்டு கூட நேர வைக்க தெரியாது ..
என்று சொல்லுவார்... ஓகே..எல்லாம் பார்த்து பார்த்து சரி செய்தாச்சு..
ரைட் போலாம்..என்று போனை சைலன்ட் ல வைக்க போனாள்.
அதுக்குள்ளே போன்.. அச்சோ சோ ... அவரே தான்..எடுக்க missed கால் ..
ஓட்டமும் நடையுமாக சென்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்து..ஆன் செய்து
ஒரு வழியாக ஸ்கைப் ஸ்டார்ட் பண்ணி முடிப்பதேற்குள் ..
நான்கு மிஸ் கால் !! அவரே தான்.
போச்சு இன்னை க்கு செம அர்ச்சனை தான் !! என்று யோசிபதேற்குள் ..
ஹலோ .... ஏன் இவ்ளோ லேட்...டைம் கு வர முடியாதோ?? என்று குரல்.
ஸ்கை ப் ல அவர் தோன்ற ....கேமரா ஆன் பண்ணு ! ஏன் இவ்ளோ லேட் ?
ஓ ..நெட்ல வரதுக்கு தான் இவ்ளோ ஆர்பாட்டமா ...அப்ப நேரே....!!!??
அயோ டா !!! எஸ்கேப் நு உள்ளே வ ந்த வேகத்தில் வெளியேறிவிட்டேன் !
இனி யார் கதவை தட்டினாலும் எந்த பதிலும் இருக்காது.தெரியும் எனக்கு.
ஆமாம் என் friend வீட்டில் தான் இத்தனை அமர்க்களம்...அவள் கணவன்
வெளிநாட்டில் உள்ளார் !! தினம் அவர் டைம் மாறுவதால்...கரெக்டா
மாலையில் ஆஜராகி ...இருவரும் chat செய்ய தான் இந்த ஏற்பாடு.!
திங்கள், பிப்ரவரி 20, 2012
போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் | போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் Dinamalar
போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் | போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் Dinamalar
"The only place success comes before work is in the dictionary."
"The only place success comes before work is in the dictionary."
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)




























