சனி, ஆகஸ்ட் 27, 2011

சமையலறையில் புதிய வரவு சூப்பர்செப்


அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயனாக மாவு அரைப்பதற்கு, துணி துவைப்பதற்கு என பல வேலைகளை பகிர்ந்து கொள்வதற்கு இயந்திரங்கள் வந்து விட்டன. தற்போது சமையலறைக்கு வந்துள்ள புதிய வரவு சூப்பர்செப். வறுத்தல், கொதிக்க வைத்தல், வேக வைத்தல் என பல வேலைகளை செய்யும் இந்த நவீன கருவி ஏறத்தாழ 11 வகை உணவு பதார்த்தங்களை தயாரிக்கிறது. தேவையான சமைக்கும் பொருள்களை அதற்கென்று உள்ள பாத்திரத்தில் போட்டு விட்டு பட்டனை தட்டி விட்டால் போதும். சுமார் 45 முதல் 50 நிமிடங்களில் சுவையான உணவு தயாராகி விடும். இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக 24 மணி நேரங்களுக்கு பின் சமையல் செய்ய வேண்டியதை முன்கூட்டியே புரோகிராம் செய்யும் வசதி உள்ளது. மேலும் உணவு தயாரானவுடன் அதனை வெளியே எடுக்காமல் விட்டு விட்டாலும் பொறுப்பாக நீண்ட நேரம் உணவை சூடாக வைத்து கொள்ளும் பணியை மேற்கொள்கிறது. சிறிய கிண்ணம், நீரை சூடாக்க பாத்திரம் மற்றும் சமையல் புத்தகம் ஆகியவற்றுடன் விற்பனைக்கு வரும் இதன் சிறப்பம்சங்களை பட்டியலிட்டால், தேவையல்லாத இடத்தை அடைக்கும் அதிகப்படியான பாத்திரங்களை சமையலறையில் அடுக்க வேண்டாம். சமைத்து முடிக்கும் வரை அங்கேயே இருக்க வேண்டாம். மேலும் இதன் வடிவமைப்பு எங்கும் கொண்டு செல்லும் வகையில் அமைந்துள்ளது ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
thanks senthilvayal
click here for details!
அப்பாடா...வந்துருச்சு !!

புதன், ஆகஸ்ட் 24, 2011

ரிச் சாக்லேட்

தேவை

மேர்ரி பிஸ்கட்      30   
சர்க்கரை பொடி       2 கப்
மில்க் maid                   2   கரண்டி
  கோ கோ பவுடர்    1 கரண்டி
வெண்ணை               2   கரண்டி
பாதாம்,முந்திரி        சிப்ஸ் 
  திராட்சை                  1 கரண்டி

செய்முறை 
 மேர்ரி பிஸ்கட் மிக்சியில் போட்டு பொடியாக்கவும் .
பிறகு ஒவேன்றாக முழுவதும் சேர்த்து மர
கரண்டியில் கலக்கி சப்பாத்தி மாவு போல் பதம் வந்தவுடன் நீள உருண்டைகளாக உருட்டி பாலித்தீன் பேப்பரில் ரோல் செய்து ..பிரிட்ஜ் க்குள் சிலமணி நேரம் வைக்கவும்.(ப்ரீசர் வேணாம்)
நன்றாக இறுகி இருக்கும்., வேண்டிய  வடிவத்தில்  கட் செய்த எடுத்து வைத்துக் கொள்ளவும்.!
பார்ட்டிகளில் பரிமாற்ற தோதாக இருக்கும்.
ஹோம் made என்பதால் சுவை நன்றாக . இருக்கும். ப்ரிட்ஜ் ல் 
    வைப்பதால் .. வெண்ணை சக்கரை இறுகி எந்த வடிவம் 
வேண்டுமானாலும் செய்வது எளிது.க்ளிட்டேர் பேப்பேரில் 
 சுற்றி அழகாக ராப் செய்து குழந்தைகளுக்கு தரலாம்.!!!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் மகளுக்காக  செய்தேன்.!
அடுப்பில் வைத்து கிளறாமல் .. ஈசி ஆக சுலபத்தில் செய்து விடலாம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கிருஷ்ண ஜெயந்திகிருஷ்ண ஜெயந்தி  ,ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,
கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள்,
பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.த கிருட்டிணன் நடுநிசியில்
பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு
வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து
பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,
முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன..

 கிருஷ்ணா கானம்  கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி கேளுங்க.
Sri Krishna Ganam : Tamil Devotional - Songs, Mp3 Downloads, Music, Lyrics | Hummaa.கம
 

கிருஷ்ணர் சேது  தரிசனம்  பற்றிய slide ஷோ  காண  

 கிளிக்  பண்ணுங்க !

 நான் கிருஷ்ணாவிடம் கேட்டேன்
click here.

ராமாயன் கிளிக் !

சனி, ஆகஸ்ட் 13, 2011

ரக்க்ஷாபந்தன்-சகோதரர்களே வாங்க!


 சகோதரர்களே வாங்க  .. என் இதயம் கனிந்த ரக்க்ஷாபந்தன் 
 நல்வாழ்த்துகள் !!! அன்புடன் இந்த சகோதரி தரும்  ரக்க்ஷாபந்தன்
ராக்கியை அணிந்து கொள்ளுங்கள் .! மகிழ்ச்சியா கொண்டாடுங்க.


வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

வரலட்சுமி நோன்பு-தாம்பூலம் எடுத்துக்கொள்ளுங்க!

சகோதரிகளே !!! வாங்க .... வரலக்ஷ்மி நோன்பு !!
தாம்பூலம்  எடுத்துக்கொள்ளுங்க ...பூஜையில் 
கலந்துக்கோங்க .பாட்டு கேளுங்க .சந்தோசம் 
அடைங்க...மன அமைதி பெறுங்க!!!  வாங்க...
தேங்க்ஸ் google images


 


ஆராத்தி தட்டு


 தேங்க்ஸ் யு tube 

சனி, ஆகஸ்ட் 06, 2011

ஐஸ் அல்வா

Ice halwa

என்னடா புடவையை மடித்து வைத் இருக்கார்கள் ? என்று
நினைக்காதீர்கள் ..இது தான் ஐஸ் அல்வா !!கலேர்புள் !!!
மார்வாடி நண்பர் ஒருவர் இந்த ஸ்வீட்டை எனக்கு
அறிமுகப்படுத்தினார்.மும்பையில் மற்றும் சென்னை
சௌக்கார் பேட் ல்..கிடைக்கிறது  என்றார். டேஸ்டி!!

 இதன் செய்முறை
தேவை 
பாம்பே ரவை  ஒரு கப்
நெய்                     ஒரு கப் 
பால்                     4 கப் 
சக்கரை              4 கப் 
ஏலக்காய் 10 
ஆலமன்டு       1 /2 ஸ்பூன் மெல்லிசாக  நறுக்கியது 
பிஸ்தா              1 /2 ஸ்பூன் மெல்லிசாக  நறுக்கியது
குங்குமப்பூ       சிறிது 
ரோஸ் வாட்டர்  கொஞ்சம் 
பாலித்தீன்  பேப்பர் ரோல் செய்ய 

செய்முறை.
ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
ரவை,சக்கரை,நெய்,பால் நன்றாக ஒன்று ஒன்றாக கலக்கவும் 
கட்டி தட்டாமல் கை விடாமல் கலக்கி அடுப்பில் வைத்து 
கிண்டி கொண்டே இருக்கவும்., அடுப்பை குறைத்து சிம்மில்
வைத்து கெட்டியாகும் வரை கிண்டவும்!கடைசியில் ரோஸ்
வாட்டர் தெளிக்கவும்.பாலித்தீன்  பேப்பர் அல்லது ட்ரேஸ் 
பேப்பர்  மீது நெய் தடவி அதன் மீது பரப்பி தின்னாக ஒரே 

மாதிரி  தேய்த்து பரப்பி அடுத்து ஒரு சீட் வைத்து பரப்பி 

ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ் தூவி ,குங்குமப்பூ 
கொண்டு அலங்கரித்து நன்றாக ரோல் செய்து சூடு  
ஆரிய வுடன் ஒன்றோடு ஒன்று ஓடாத வகையில் 

அடுக்கி நன்றாக பிரஸ் செய்து நான்கு துண்டுகளாக 
வெட்டி மேலும்  ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ்
போட்டு அலங்கரிக்கவும்..கலர் வேண்டுமானாலும் 
அடுப்பில் கிண்டும் போது சேர்த்து கொள்ளலாம்.!

பதிவு உலக சகோதர சகோதரிகளுக்கு என் 
                      இதயம் கனிந்த
ஹாப்பி பிரண்ட்ஷிப்  டே 
நல் வாழ்த்துக்கள்!! 
scraps orkut


 
நண்பேண்டா !!